கடற்கரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் அபார்மென்ட் கருத்திட்டத்தின் அனுபவத்தை பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் Icon V Talpe
ஒடிலியா குழுமம் தமது புதிய ஹோட்டல் அபார்ட்மென்ட் கருத்திட்டமான Icon V Talpe உடன் அழகிய தெற்கு கடற்கரையில் சொகுசு வதிவிட அனுபவத்தை பெற்றுக்கொள்வதற்கு உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. காலி நகருக்கும் தெற்கு அதி வேக நெடுஞ்சாலைக்கும் ஒரு சில நிமிடங்களில் பிரவேசிக்கக்கூடிய தூரத்தில் தல்பே இயற்கை நீச்சல் வளாகத்துக்கு முன்னால் அமைந்துள்ள மேற்படி வீட்டுத் திட்டம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு முதன்மையான தெரிவாக இருக்குமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த வீட்டுத் திட்டத்தில் தளபாடங்களுடன் கூடிய 227 முழுமையான வீட்டு அலகுகள் காணப்படுவதோடு அவற்றில் கனிசமான வீடுகள் ஏற்கனவே கொள்வனவு செய்யப்பட்டோ முன்பதிவு செய்யப்பட்டோ உள்ளமையே இந்த வீட்டுத் திட்டத்துக்குள்ள வரவேற்பு என்ன என்பதை பறைசாற்றி நிற்கின்றது.
17 மாடிகளை கொண்ட Icon V Talpe இந்து சமுத்திரத்தின் அழகை பூரணமாக அனுபவிப்பதற்கு குடியிருப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் V வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஒன்றுக்கொன்று மாறுபட்ட வீட்டு அலகு வகைகளின் எண்ணிக்கை 06 ஆகும். சர்வதேச தரத்திலான வசதிகளுடன் சௌகரியமான வாழ்வியல் அனுபவத்தை எதிர்பார்ப்போருக்குள்ள தெரிவுகளில் இது உச்சத்தில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நேருக்கு நேர் அமைந்துள்ள நீச்சல் தடாகம், கடற்கரைக்கான இலகுவான மற்றும் நேரடி பிரவேசம், அழகிய மற்றும் அமைதி நிறைந்த ஓய்வகங்களையும் சௌகரியமான மற்றும் நவீனத்துவத்தையும் இணைக்கும் உள்ளக திட்டமிடல்கள் போன்ற பல்வேறு வசதிகளை அனுபவிக்க முடியும். வதிவிடத்துக்கும் முதலீட்டுக்குமாக வடிவமைக்கப்பட்டுள்ள Icon V Talpe வீடுகளை நிரந்தர குடியிருப்பாகவும் வீட்டுத் தேவைக்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால குத்தகை அடிப்படையிலும் பெற முடியும். நாட்டில் சுற்றுலாத் துறையில் அதிக வரவேற்பை கொண்டுள்ள தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள சொகுசு வீட்டுத் திட்டமொன்றின் குடிமனையில் குடியேறுவதற்கோ முதலீடு செய்வதற்கோ விருப்பங்கொண்டுள்ள இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இது ஆகச் சிறந்ததொரு தெரிவாகும். கட்டடக் கலை புத்தாக்கத்துக்கும், மேன்மைக்கும் நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளித்து நிர்மாணிக்கப்பட்டு வரும் இத் திட்டம் நாட்டின் குடியிருப்புக் கட்டுமானத் துறையில் பெரும் திருப்புமுனையாக அமையும் என்பது திண்ணம். இலங்கையில் இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ள அடுக்குமாடித் தொகுதிகளை விடவும் புத்தாக்க அனுபவத்தை வழங்கும் வகையில் இலங்கையில் முதல் தடவையாக சுற்றுலாச் சபையின் விதப்புரையின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இத் திட்டம் மன அமைதியுடன் பெரும் வருமானத்தை அள்ளித் தரக்கூடிய வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

