November 21, 2024
“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE
செய்தி

“Bestweb.lk – 2024” விருது வழங்கும் நிகழ்வில் வெள்ளி விருதை வென்ற HNB FINANCE

Sep 21, 2024

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC ஆனது BestWeb.lk – 2024 விருது வழங்கும் நிகழ்வில் நிதி மற்றும் காப்புறுதி பிரிவின் கீழ் வெள்ளி விருதை வென்றது. “BestWeb.lk” விருது வழங்கும் நிகழ்வு வருடம் தோறும் நாட்டிலுள்ள சிறந்த இணையத்தளங்களை மதிப்பிடுவதுடன், HNB Finance இன் www.hnbfinance.lk இணையத்தளமும் இம்முறை இவ்வாறு விருதிற்கு தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.

LK Domain Registry நிறுவனம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் இந்த விருது வழங்கும் நிகழ்விற்கான விருதுகளுக்காக இலங்கையில் உள்ள பல முன்னணி நிறுவனங்கள் விண்ணப்பிப்பதுடன் இதற்கு முன்னரும் HNB Finance PLC இன் இணையதளம் மதிப்பீடு செய்யப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில், விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்களின் இணையதளங்களை ஆக்கப்பூர்வமாக வழங்குதல், நிறுவனத்தின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதில் அணுகும் திறன், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்ற காரணிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

“எங்கள் இணையதளம் எப்போதும் வளர்ந்து வரும் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தளத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவைகளை வழங்குவதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பாவனையாளர் நட்பு வடிவமைப்பின் எளிமை ஆகியவற்றின் அடிப்படையில் எப்போதும் முன்னணியில் உள்ளது. இவை அனைத்தின் மூலமாகவும், வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் நம்பகமான தரமான சேவையை வழங்குவதே எங்கள் நோக்கம். நிதித்துறையில் முன்னணி நிறுவனமாக, சிறந்த வாடிக்கையாளர் சேவையை உரிய விடாமுயற்சியுடன் வழங்க உதவும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்ளும் எங்களது முயற்சி இந்த விருது மூலம் உறுதி செய்யப்படுகிறது. மேலும் இதுபோன்ற மதிப்பீடுகள் மூலம், நிதித்துறையில் தரம் சார்ந்த உயர் பதவிகளை அடைவதற்குத் தேவையான ஊக்கத்தைப் பெறுவோம் என்று நான் நம்புகிறேன்.” என HNB FINANCEஇன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவர் திரு உதார குணசிங்க தெரிவித்தார்.

இந்த விருது வழங்கும் நிகழ்வின் நடுவர் குழுவில் சிறந்த நிதி நிபுணர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழு இருந்ததுடன், விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களின் இணையதளங்கள் கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டன. அதன் தொழில்நுட்ப பின்னணி, தகவல் வழங்கல், வடிவமைப்பு நிலை மற்றும் வாடிக்கையாளா; பயன்பாட்டினை இங்கு பரிசீலிக்கப்பட்டது. தொழில்நுட்ப பின்னணியில், தொழில்நுட்பம், இணையதளத்தின் பல்வேறு அம்சங்களை எளிதாக அணுகுவது, தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் பின்பற்றப்படுவது ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆக்கப்பூர்வமான மதிப்பீட்டில், இணையப் பக்கங்களின் முடிவு, பக்க அமைப்பு, நிலை மற்றும் தகவலின் அளவு போன்ற அம்சங்கள் மதிப்பீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *