October 18, 2025
HNB மற்றும் Plantchem கூட்டுமுயற்சியால் Lovol டிராக்டர்களுக்கானகவர்ச்சிகரமானலீசிங்தீர்வுகள்
செய்தி

HNB மற்றும் Plantchem கூட்டுமுயற்சியால் Lovol டிராக்டர்களுக்கானகவர்ச்சிகரமானலீசிங்தீர்வுகள்

Oct 18, 2025

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, அண்மையில் Plantchem தனியார் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது. இந்த கூட்டணியின் நோக்கம், Lovol டிராக்டர்களுக்கான கவர்ச்சிகரமான லீசிங் தீர்வுகள் மூலம் விவசாய இயந்திரங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும்.

விவசாயம் நாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், உயர்தர மற்றும் மலிவு விலை விவசாய இயந்திரங்களை விவசாயிகள் வாங்குவதை எளிதாக்குவதற்காக HNB மற்றும் Plantchem இணைந்து பணியாற்றியுள்ளன. இதன் மூலம், விவசாயிகள் மற்றும் வேளாண் தொழில்முனைவோருக்கு வசதியான மற்றும் மலிவு விலையிலான, அத்துடன் போட்டித் தன்மை வாய்ந்த லீசிங் திட்டங்களைப் பயன்படுத்தி Lovol டிராக்டர்களை வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும். மேலும், விவசாயிகள் விரைவாகவும் திறம்படவும் பணியாற்றவும், சிறந்த முடிவுகளைப் பெறவும், நீண்ட காலத்திற்கு விவசாயத் துறையை வலுவானதாகவும் நிலைத்தன்மை உடையதாகவும் ஆக்குவதே இதன் இலக்காகும்.

இது குறித்து கருத்து தெரிவித்த HNB இன் சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் வாடிக்கையாளர் வங்கித்துறை தலைவர் திரு. காஞ்சன கருணாகம, “இலங்கையின் விவசாயத் துறையை நவீனமயமாக்குவதற்கு ஆதரவாக வங்கி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகக் கூறினார். “விவசாயிகள் மலிவு விலை மற்றும் நம்பகமான இயந்திரங்களுக்கான அணுகலைப் பெறுவது, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு அத்தியாவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். Plantchem உனான எங்கள் கூட்டு மூலம், விவசாயிகள் தங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்யவும், மிகவும் திறமையான மற்றும் நிலையான விவசாய முறைகளைப் பின்பற்றவும் உதவும் கவர்ச்சிகரமான நிதித் தீர்வுகளை வழங்க முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் Lovol டிராக்டர்களை விநியோகிக்கும் ஒரே நிறுவனமான Plantchem, நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் உறுதியான, உயர் திறனுள்ள இயந்திரங்களை வழங்குவதற்காக அறியப்படுகிறது. இந்த நிறுவனம் இலங்கையின் மோட்டார் வாகனத் துறையில் ஒரு முன்னணி நிறுவனமான டிமோ குழுமத்தின் கீழ் செயல்படுகிறது.

“HNB உடன் நாம் ஏற்படுத்திய இந்த கூட்டணி, இலங்கையின் விவசாய சமூகத்திற்கு பல புதிய வாய்ப்புகளை உருவாக்கும். Lovol டிராக்டர்கள் பல்வேறு விவசாய பணிகளை திறம்படவும் எளிதாகவும் செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்கள் தயாரிப்புகளின் தரத்தையும், HNBஇன் விரிவான கிளைப் பிணையத்தையும் நிதி நிபுணத்துவத்தையும் இணைப்பதன் மூலம், நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் நவீன விவசாய எந்திரங்களை அணுகுவதற்கான வாய்ப்பை நாங்கள் பெறுகிறோம்,” என்று Plantchemஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. கஹனாத் பண்டிதகே தெரிவித்தார்.

HNB மற்றும் Plantchem இடையே ஏற்படுத்தப்பட்ட இந்தக் கூட்டணி, இலங்கையின் விவசாயத் துறையை வளர்த்தெடுப்பதற்கும், கிராமிய மேம்பாட்டை வலுப்படுத்துவதற்கும், அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் இரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close