February 5, 2025
3 புதியதங்கக்கடன்மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE
செய்தி

3 புதியதங்கக்கடன்மத்திய நிலையங்கள் திறக்கும் HNB FINANCE

Aug 3, 2024

கொழும்புக்கு வெளியில் தங்கக் கடனுக்கான அதிக தேவைக்கு தீர்வாக, பெலியத்த, குருநாகல் – மெட்ரோ மற்றும் குளியாபிட்டிய நகரங்களில் அமைந்துள்ள HNB FINANCE PLC கிளை வளாகத்தை மையமாகக் கொண்டு 3 புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் அண்மையில் திறக்கப்பட்டன. இதன்படி, HNB FINANCE தங்கக் கடன் நிலையத்தின் பெலியத்த தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 51/1 மாத்தறை வீதி பெலியத்த, பெலியத்த நகரத்திலும், புதிய குருநாகல் – மெட்ரோ கிளை தங்கக் கடன் நிலையம் இல. 155 புத்தளம் வீதி குருநாகலிலும் மற்றும் குளியாப்பிட்டிய கிளை தங்கக் கடன் மத்திய நிலையம் இல. 355, மாதம்பே வீதி குளியாப்பிட்டிய ஆகிய இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட HNB FINANCE பெலியத்த தங்கக் கடன் சேவை மத்திய நிலையத்தின் திறப்பு நிகழ்வு நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளரும் கடன் சேவைகளின் தலைவருமான திரு. இந்துனில் ஜயவர்தன தலைமையில் நடைபெற்றதுடன், குருநாகல் – மெட்ரோ மற்றும் குளியாபிட்டிய புதிய தங்கக் கடன் மத்திய நிலையங்கள் கிளை வலையமைப்புத் தலைவரின் உதவிப் பொது முகாமையாளர் திரு. பதும் சம்பத் குரே மற்றும் உதவிப் பொது முகாமையாளர் – பிரிவுத் தலைவர் – தயாரிப்பு வணிக முகாமைத்துவப் பொது முகாமையாளர் லக்ஷ்மன் எராஜ் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. HNB FINANCE தங்கக் கடன் மத்திய நிலையங்கள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் தங்கத்திற்கான தொழில்துறையில் சிறந்த மதிப்பை வழங்குவதும், மற்ற நிறுவனங்களில் வைத்திருக்கும் தங்கத்தை மீட்டு, அதற்கு அதிக பணம் கொடுக்கும் சேவையும் HNB FINANCE தங்கக் கடன் சேவைகளிடையே அதிகப் பிரபலத்தைப் பெற்றுள்ளது.

“பெலியத்த, குருநாகல் மற்றும் குளியாப்பிட்டிய மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தங்கக் கடன்கள் மற்றும் தொடர்புடைய சேவைகளுக்கான அதிக தேவை காரணமாக, இந்த நகரங்களில் எங்கள் தங்கக் கடன் சேவைகளை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து தங்கக் கடன் சேவைகளையும் போட்டித்தன்மையுடன் பூர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்.” என HNB FINANCE தங்கக் கடன் பிரிவு தலைவர் திரு. லக்ஷ்மன் ரணசிங்க தெரிவித்தார்

HNB FINANCE தங்கக் கடன் சேவையின் கீழ் செயல்படும் Gold Plan சேவையானது தங்கக் கடன் துறையில் ஒரு புரட்சிகரமான சேவையாகும், மேலும் HNB FINANCE வாடிக்கையாளர் வாங்க விரும்பும் தங்கப் பொருட்களுக்கு கடன் தொகையை வழங்குகிறது மற்றும் வாடிக்கையாளருக்கு இந்தக் கடனைத் தீர்க்க சமமான மாதாந்த தவணைச் சலுகை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டொலருக்கு நிகரான தங்கத்தின் விலை உயர்வதால், இந்த முதலீட்டுத் திட்டம் சரியான நேரத்தில் எடுக்கப்படும் நிதித் திட்டங்களில் ஒன்றாகும், எனவே நுகர்வோரின் தங்க கையிருப்பை அதிகரிக்கவும், அவர்களின் குழந்தைகளுக்கு தங்கம் வாங்கவும் இது சிறந்த உத்தி என்று சொல்லலாம். மேலும், HNB FINANCE அறிமுகப்படுத்திய VIP Gold Loan தங்கக் கடன் சேவையானது வணிக மற்றும் தனிப்பட்ட நிதித் தேவைகளுக்கு மிகவும் உகந்த நிதித் தீர்வாகக் கூறலாம். வாடிக்கையாளர்களின் தங்கப் பொருட்களுக்கான அதிகபட்ச முற்பணத் தொகையை மிக விரைவாக வழங்கவும் நிறுவனம் செயல்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close