April 24, 2025
அடிப்படைவங்கிஅமைப்பின்நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன்இணையும் HNB FINANCE
செய்தி

அடிப்படைவங்கிஅமைப்பின்நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன்இணையும் HNB FINANCE

Apr 23, 2025

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குநரான HNB FINANCE, ஒரு நவீன மைய வங்கி அமைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் நிதித் தீர்வுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Kiya.ai உடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. HNB FINANCEஇன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அனைத்து ATM இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டு சேர்வு மூலம், CASA (Current and Savings Accounts), Trade Finance மற்றும் திரைசேரி செயல்பாடுகள் போன்ற அடிப்படை வங்கி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, மேம்பட்ட சேவையை வழங்குவதற்காக Kiya.ai மூலம் உருவாக்கப்பட்ட புதிய டிஜிட்டல் Core Banking System செயல்படுத்தப்படும். SaaS (Software as a Service) மாதிரியின் அடிப்படையில் Cloud சார்ந்த தீர்வுகளை வழங்கும் இந்த சேவை, மைக்ரோ ஃபைனான்ஸ் தீர்வுகளுடன் சிறப்பு கடன் வழங்கும் தீர்வுகளையும் உள்ளடக்கியது. HNB FINANCEஇன் தற்போதைய இரட்டை அமைப்பு செயல்பாடுகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை இந்த தனித்துவமான அணுகுமுறை வழங்குகிறது. இது, நாளுக்கு நாள் வளர்ந்து வரும் வணிகத் தேவைகளையும் சந்தைக் கோரிக்கைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு சக்திவாய்ந்த தளமாக மாறும்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த HNB FINANCEஇன் முதன்மை தகவல் தொழில்நுட்ப அதிகாரி திரு. காஞ்சன ஜயசேகர, “இந்த கூட்டிணைவு மூலம், எங்களது முக்கிய வங்கி அமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு துல்லியமான மற்றும் திறமையான டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்கும் திறன் எங்களுக்கு கிடைக்கிறது. பதிவு செய்யும் செயல்முறையிலிருந்து கடன் வசதிகள் வழங்கும் வரை அனைத்து நிதி சேவைகளையும் ஒருங்கிணைந்த Core Banking Solution மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மிகவும் புத்தாக்கமான, நெகிழ்வான மற்றும் வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கக் கூடிய இந்த புதிய டிஜிட்டல் வங்கி தீர்வு, எங்கள் அருமையான வாடிக்கையாளர்களின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close