August 16, 2025
தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE
செய்தி

தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

Mar 23, 2025

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துவோம்” என்ற சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையில், தனது நிறுவனத்தின் பெண் பணியாளர்களை மதித்து அவர்களை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் கொண்டாட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தியது.

HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு நாவலையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு HNB FINANCE இன் பணியாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுடன் இணைந்து, கிளை மட்டத்திலும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. மேலும், தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் “Teams” மூலம் நாடு முழுவதும் உள்ள கிளை பணியாளர்களும் நேரடியாக இணைக்கப்பட்டனர். இதன் மூலம், அவர்களின் மதிப்பீடு மற்றும் பணிச்சூழலில் அவர்களுக்கு வழங்கப்படும் பங்களிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த கொண்டாட்டத்திற்கு பிரம அதிதிகளாக, இலங்கை காவல்துறையின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணை பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர, டொக்டர் திலுமி அதபத்து, மற்றும் சுகாதார அமைச்சின் பல் சுகாதாரத்திற்கான மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் டொக்டர் சதுரங்கி வித்யாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தர, “பெண்கள் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும், பல்வேறு அபாயங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும், பாலின அடிப்படையில் ஏற்படக்கூடிய வன்முறையை தடுக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் இலங்கை பொலிஸால் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறினார்.

HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின நிகழ்வின் இரண்டாம் பகுதியில், வாய்ப்பகுதியின் ஆரோக்கியத்தை பராமரிப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியம் என்பது குறித்து டொக்டர் சதுரங்கி வித்யாரத்ன ஒரு விழிப்புணர்வு விவாதத்தை நடத்தினார்.

HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத், “சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு எங்கள் நிறுவனத்தின் நிகழ்வுகளில் மிக முக்கியமான ஒன்றாகும். இந்த நிகழ்வின் மூலம், எந்தவொரு சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொண்டு நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட பெண் பணியாளர்களை மதிப்பிடுவது எங்கள் அதிர்ஷ்டம். ஒரு தாய், மனைவி, சகோதரி மற்றும் மகள் எனப் பெண் சமூகத்திற்கு அளிக்கும் பங்களிப்புகளில் சவால்களை வென்று, எங்கள் பெண் சமூகத்தை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதே எனது நம்பிக்கை. எதிர்கால தலைமுறையை சரியான பாதையில் வழிநடத்துவதற்கு பெண்களின் பங்களிப்பு முக்கிய இடத்தைப் பிடிப்பதால், சர்வதேச மகளிர் தினத்தை கண்ணியத்துடன் கொண்டாட HNB FINANCE தொடர்ந்து பணியாற்றுகிறது. மேலும், பெண் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்காக நாங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக உள்ளன. சிறு வணிக கடன் மற்றும் நிதி அறிவுத்திறன் திட்டங்கள் போன்ற செயல்பாடுகளின் மூலம், வலுவான நிதி ஸ்திரத்தன்மையை அடைவதற்கு நாங்கள் அவர்களுக்கு ஆதரவாக உள்ளோம்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close