உலகளாவியவிரிவாக்கத்தைத்தொடரும் HBO MAX, அக்டோபர் 15 அன்று ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் 14 புதிய சந்தைகளில் அறிமுகம்
Warner Bros. Discovery நிறுவனம் அக்டோபர் 15 ஆம் திகதி ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள புதிய சந்தைகளில் அதன் முதன்மை உலகளாவிய ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max நேரடி-நுகர்வோர் முறையில் தொடங்கப்படும் என அறிவித்தது. இதில் பங்களாதேஷ், புரூணை, கம்போடியா, லாவோஸ், மக்காவ், மங்கோலியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும். தொடங்கப்படும் சந்தைகளின் முழு பட்டியலை [இங்கே] காணலாம்.
HBO Max என்பது உலகின் மிக உயர்தர பொழுதுபோக்கு பிராண்டுகளின் இல்லமாகும், இதில் HBO, Harry Potter, DC Univers, Cartoon Network, Max Originals மற்றும் Hollywood திரைப்படங்களின் சிறந்த தொகுப்புகள், அத்துடன் Discovery, TLC, AFN, Food Network, ID* மற்றும் HGTV ஆகியவற்றின் காணத் தவறாத நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன.
HBO Max தொடங்கப்பட்ட சிறிது நேரத்திற்குப் பிறகு, Subscriberகள் HBOயின் புதிய அசல் தொடரான ‘IT: Welcome to Derry’யின் முதல் திரையீட்டை எதிர்பார்க்கலாம். இந்த தொடர் ஸ்டீபன் கிங்கின் ‘IT’ பிரபஞ்சத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது மற்றும் ‘IT’ மற்றும் ‘IT Chapter Two’ திரைப்படங்களில் இயக்குனர் ஆண்டி Muschietti நிறுவிய பார்வையை விரிவுபடுத்துகிறது. இந்த தொடரில் Taylour Paige, Jovan Adepo, Chris Chalk, James Remar, Stephen Rider, Madeleine Stowe, Rudy Mancuso, மற்றும் Bill Skarsgård ஆகிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
HBO Max Subscriberகளுக்கு சூப்பர்மேன், சின்னர்ஸ் மற்றும் ஃபைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ் போன்ற ஹாலிவுட் ஹிட்கள், ஹவுஸ் ஆஃப் தி டிராகன், தி லாஸ்ட் ஆஃப் அஸ், தி பெங்குயின் மற்றும் தி பிட் போன்ற கலாச்சார-வரையறுக்கும் HBO மற்றும் Max ஆரிஜினல்ஸ், தி பேப்பர் மற்றும் மாப்லேண்ட் உள்ளிட்ட புதிய தொடர்கள், மற்றும் கோல்ட் ரஷ், டெட்லியஸ்ட் கேட்ச் மற்றும் 90 டே ஃபியன்ஸே போன்ற சிறந்த உண்மை வாழ்க்கை கதைகள் ஆகியவற்றை வழங்கும். அட்வென்ச்சர் டைம், வி பேர் பியர்ஸ், டொம் அண்ட் ஜெர்ரி மற்றும் லூனி டூன்ஸ் முதல் தி வண்டர்ஃபுலி வீர்ட் வேர்ல்ட் ஆஃப் கம்பால் வரையிலான குடும்பத்திற்கு பிடித்த விதமாக ஸ்ட்ரீம் செய்ய முடியும்.
அக்டோபர் 15 முதல், Subscriberகள் பல சாதனங்களில் ஒரு மேம்பட்ட மற்றும் நுகர்வோர்-மைய ஸ்ட்ரீமிங் அனுபவத்தை அனுபவிக்க முடியும். இது எளிதாக செல்லக்கூடிய இடைமுகத்தைக் கொண்டுள்ளது, இதில் தொடர்ச்சியான தேடல், Genre rails, பிராண்ட் மையங்கள் மற்றும் தனிப்பயனாக்கம் ஆகியவை அடங்கும். இது Subscriberகளுக்கு ஐந்து தனித்துவமான சுயவிவரங்களை உருவாக்க அனுமதிக்கிறது, ஒவ்வொன்றும் பிடித்த கதாபாத்திரங்களை அவதாரங்களாக தனிப்பயனாக்கலாம் மற்றும் பார்வை பழக்கங்களின் அடிப்படையில் உள்ளடக்க தேர்வுகளைப் பெறலாம். Subscriberகள் தங்களின் விருப்பமான உள்ளடக்கத்தைச் சேமிக்கலாம் மற்றும் “தொடர்ந்து பார்ப்பது” மூலம் நிறுத்திய இடத்திலிருந்து தொடரலாம் அல்லது பயணத்தின்போது பார்க்க பதிவிறக்கம் செய்யலாம். குடும்பங்கள் குழந்தைகளுக்கான சுயவிவரங்களைத் தனிப்பயனாக்கலாம், இது வயதுக்கு ஏற்ற உள்ளடக்கம் மற்றும் பெற்றோர் கட்டுப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Warner Bros. Discoveryஇன் உலகளாவிய ஸ்ட்ரீமிங் & கேம்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் தலைவர் JB Perrette கூறுகையில், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, HBO Max-ன் உலகளாவிய விரிவாக்கம் உலகம் முழுவதும் உள்ள அதிகம் ரசிகர்களுக்கு ஒப்பற்ற பொழுதுபோக்கை வழங்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள், HBO Max 100க்கும் மேலான சந்தைகளில் கிடைக்கும், மேலும் 2026 இல் ஜெர்மனி, இத்தாலி மற்றும் யூகே போன்ற முக்கிய சந்தைகளில் தொடங்கப்படும்.”
தொடங்கப்படும் நாளிலிருந்து, HBO Max www.hbomax.com வழியாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பங்காளர்கள் மூலமாகவும் சந்தா செலுத்திக் கொள்ள கிடைக்கும். கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.
HBO Max-ன் உலகளாவிய கிடைக்கும் தன்மையின் முழு பட்டியலுக்கு, HBO Max Help Centerஐ பார்வையிடவும்.

