February 24, 2025
Global Air Connection நிறுவனத்துக்கு BWIO உயர் விருது
செய்தி

Global Air Connection நிறுவனத்துக்கு BWIO உயர் விருது

Jun 23, 2024

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரத்தை பெற்ற முன்னணி பயண இலக்கு முகாமைத்துவ நிறுவனமான (DMC) Global Air Connection தனியார் நிறுவனம் Business World International விருது விழாவில் சுற்றுலாத் துறையின் சேவை பிரிவின் உயர் விருதை வென்றுள்ளது. அந் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மொஹமட் சாதிகீன் மொஹமட் சப்ரான் அவர்கள் தமக்கான  விருதை பெற்றுக்கொண்டார். Business World International அமைப்பு ஏற்பாடு செய்த மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில் அமைச்சர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 2015 ஆம் ஆணடில் ஆரம்பிக்கப்பட்ட Global Air Connection நிறுவனம் வீசா ஆலோசனை சேவைகள், விமானப் பயணச் சீட்டு முன் பதிவு, ஹோட்டல் முன் பதிவு, வரவேற்பு மற்றும் VIP சேவைகள், போக்குவரத்து வசதிகளை வழங்குதல், வாடக வாகனங்களை வழங்குதல் மற்றும் வீசா மற்றும் குடிவரவு செயற்பாடுகளுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. தமது வாடிக்கையாளர்களுக்கு பொறுப்புடன் கூடிய சிறப்பான சேவையினை வழங்குவதே Global Air Connection நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.

நிறுவனத்தின் சகல நடவடிக்கைகளும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் உத்திகளை கொண்டு அர்ப்பணிப்பு மிக்க தொழில் வல்லுநர்களினால் மேற்கொள்ளப்படுகின்றன. Global Air Connection நிறுவனத்தினால் வழங்கப்படும் சேவைகளின் தரம் தனித்துவமான பயிற்சி பெற்ற வெளிநாட்டு நிர்வாகக் குழுவொன்றினால் மேற்பார்வை செய்யப்படுகின்றது. தமது வாடிக்கையாளர்களின் சுற்றுலா துறை சார்ந்த தேவைகளை முறையாக அடையாளங் கண்டு Global Air Connection நிறுவனம் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் ஒரே இடத்திலிருந்து வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. முன்னணி நிறுவனங்கள் பலவற்றுடன் இந் நிறுவனம் ஏற்படுத்திக்கொண்டுள்ள நிறுவன மட்டத்திலான ஒப்பந்தங்கள் மற்றும் இணக்கப்பாடுகளின் பெறுபேறாக தமது வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான விலைகளுடனும் தனித்துவமான அனுகூலங்களுடனும் விமானப் பயணச் சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குவதற்கு Global Air Connection நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close