November 19, 2025
City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை
செய்தி

City of Dreams இன் தீபாவளி கொண்டாட்டத்தை வண்ணமயமாக்கிய நியா சர்மாவின் வருகை

Nov 4, 2025

கொழும்பில் உள்ள மிகவும் ஆடம்பரமான NÜWA Sri Lanka-க்கு வருகை தந்த பிரபல பாலிவுட் நட்சத்திரமான நியா சர்மா, சமீபத்தில் City of Dreams Sri Lanka-வில் நடைபெற்ற Signature Diwali Glitz நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தீபாவளி விழாவை மேலும் வண்ணமயமாக மாற்றினார். அதேபோல, அவரது ஆட்டம், அழகு மற்றும் உற்சாகம், அங்கு வருகை தந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

இதனிடையே, நியா சர்மா தங்கியிருந்த NÜWA Sri Lanka ஹோட்டல் வளாகமும் தீபாவளி பண்டிகைக்காக கவர்ச்சிகரமான முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்து.  குறிப்பாக, அந்த அலங்காரங்கள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு கூடியிருந்த விருந்தினர்களின் மகிழ்ச்சி மற்றும் ஆறுதலுக்கு NÜWA Sri Lanka-வின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தின.

அது மாத்திரமின்றி, Signature Diwali Glitz நிகழ்ச்சிக்கான நியா சர்மாவின் வருகை தீபாவளி கொண்டாட்டங்களுக்கு கவர்ச்சியை சேர்த்ததோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான வளர்ந்து வரும் கலாச்சார பரிமாற்றத்தையும் எடுத்துக்காட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close