January 22, 2026
Buddika Vittahachchi மருத்துவமனையின் நிறுவனர் கலாநிதி சேர் பீ.எஸ்.ஆர்.கே. விட்டஹச்சி சீனக் குத்தூசி சிகிச்சை தொடர்பான கலாநிதி பட்டத்துடன் சர்வதேச விருதுகளையும் வென்று சாதனை
செய்தி

Buddika Vittahachchi மருத்துவமனையின் நிறுவனர் கலாநிதி சேர் பீ.எஸ்.ஆர்.கே. விட்டஹச்சி சீனக் குத்தூசி சிகிச்சை தொடர்பான கலாநிதி பட்டத்துடன் சர்வதேச விருதுகளையும் வென்று சாதனை

Jan 8, 2026

சீனக் குத்தூசி சிகிச்சை உள்ளிட்ட பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் தொடர்பில் புகழ்பெற்று விளங்கும் கலாநிதி சேர் தொன் புத்திக ஸ்ரீ ரங்க குமார விட்டஹச்சி வட அமெரிக்காவின் Azteca பல்கலைக்கழகத்தின் சீனக் குத்தூசி சிகிச்சைகள் தொடர்பான கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார். கலாநிதி பட்டம் அளிக்கும் விழா மேற்படி பல்கலைக்கழகத்தின் சர்வதேச நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் தலைவர் பேராசிரியர் கலாநிதி Ricardo Saavedra Hidalgo அவர்களின் தலைமையில் நடைபெற்றது. சீனக் குத்தூசி சிகிச்சை மற்றும் இணைந்த மருத்துவ முறைகள் சார்ந்த தனித்துவமான பிரிவான உணவு சமிபாட்டுத் தொகுதிக்கும் மூளைக்குமிடையே காணப்படும் தொடர்பாடல் தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து அவர் கலாநிதி பட்டம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரைப்பபை சுகாதாரம் சார்ந்த பிரச்சனைகள், மன நலம், மன ஒருநிலைப்படுத்தல் மற்றும் சமிபாட்டு உறுதித்தன்மை தொடர்பாக அதில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. உணவு சமிபாட்டுச் செயற்பாட்டை மேம்படுத்தல், மன அழுத்தத்தை குறைத்தல் மற்றும் உளவியல் சமநிலையை சிறப்பாக பேணுவதற்கு சீனக் குத்தூசி சிகிச்சை முறை எவ்வாறு பங்காற்றுகின்றதென்பதை அவர் தமது ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானபூர்வமாக விபரித்துள்ளார்

25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கிளினிக் சார்ந்த அனுபவங்களை கொண்டுள்ள டாக்டர் விட்டஹச்சி International World Record of Asia  தனியார் நிறுவனத்தின் பணிப்பாளரும் நிறுவனருமாவார். சீனக் குத்தூசி சிகிச்சை, பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் மற்றும் அவை சார்ந்த இதர சிகிச்சைகள் பலவற்றை அங்கு பெற்றுக் கொள்ள முடியும். நோயாளர்களை மையப்படுத்திய அணுகுமுறையுடன் உயர் பெறுபேறுகளுடன் கூடிய சிகிச்சைகளை வழங்கி வரும் அவர் இத் துறையில் முதன்மையான மருத்துவராக திகழ்கிறார். 2000 தொடக்கம் 2010 ஆம் ஆண்டு வரை அவர் கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் குத்தூசி சிகிச்சை தொடர்பான மருத்துவராக பணியாற்றியுள்ளார். அவர் அரச துறையில் காணப்படும் இணைந்த சிகிச்சை சேவைகள் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றியுள்ளார்.

அவர் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சீனக் குத்தூசி சிகிச்சை மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ முறைக்காக ஆற்றியுள்ள சேவையினை பாராட்டி International World Record of Asia வழங்கும் தேசிய விருதும் அவற்றில் அடங்கும். குத்தூசி சிகிச்சை மற்றும் பாரம்பரிய சீன மருத்துவ முறைகள் தொடர்பான சர்வதேச உயர் விருதான Pride of Nation விருதையும் வென்றுள்ள அவர் சிறந்த சரும மற்றும் குத்தூசி சிகிச்சை வழங்குநராக Iconic Award 2025  விருது விழாவில் பாராட்டையும் பெற்றுள்ளார். சுகாதாரத் துறைக்காக ஆற்றியுள்ள சேவையை பாராட்டி ஜெருசலத்தில் Knights of St John 2025 ஆம் ஆண்டில் அவருக்கு கௌரவ சேர் பட்டமும் வழங்கப்பட்டது. நோயாளர் சிகிச்சைகள், ஆராய்ச்சி மற்றும் கிளினிக் நடவடிக்கைகள் ஆகிய பிரிவுகள் ஊடாக இலங்கையில் குத்தூசி சிகிச்சை மற்றும் பாரம்பரிய மருத்துவ சீன மருத்துவத் தரத்தை மேம்படுத்துவதே அவருடைய நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close