
சிறந்த ஜப்பான் மொழிக் கல்லூரிக்கான BWIO 2025 விருதை வென்றுள்ள Datatech Lanka
இலங்கையில் ஜப்பான் மொழி கற்கை நிறுவனங்கள் மத்தியில் முதல்வனாக திகழும் Datatech Lanka நிறுவனம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த ஜப்பான் மொழிக் கல்லூரிக்கான விருதை வென்றுள்ளது. அந் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சேர் ஜீ.கே.ரீ.சீ.எம் குலவிட்ட அதற்கான விருதை பெற்றுக்கொண்டார். 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Datatech Lanka தற்பொழுது இலங்கையில் கூடுதலான மாணவர்களை வெற்றிகரமாக ஜப்பானுக்கு அனுப்புகின்ற மற்றும் ஜப்பான் மொழி மற்றும் கலாசார பரிமாற்றல் துறையில் நம்பிக்கைமிக்க வர்த்தகநாமமாக தடம் பதித்துள்ளது. ஜப்பான் மொழித் திறன் தேர்வு (JLPT), ஜப்பான் மொழியை தாய் மொழியாக கொண்டிராத ஆட்களின் ஜப்பான் மொழி அறிவை பரிசோதித்துப் பார்ப்பதற்காக நடாத்தப்படும் NAT பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தல், இணையவழி கற்பித்தல்கள், மாணவர் மற்றும் பயிற்சி விசா உதவிகள், ஜப்பான் மொழி ஆலோசகர்களின் கீழ் செய்முறை பயிற்சி அமர்வுகளை நடாத்துதல் இந் நிறுவனம் வழங்கும் சேவைகளில் முக்கியமானவை ஆகும்.
ஆயிரக் கணக்கான மாணவர்களின் கல்வி மற்றும் தொழில் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் Datatech Lanka நிறுவனம் நாட்டின் ஆகச் சிறந்த ஜப்பான் மொழி கற்கை நிலையமாக புகழ் பெற்று விளங்குகிறது. அதன் புதிய கற்கை பாடசாலை திவுலபிடிய தபால் அலுவலகத்துக்கு முன்னால் வரும் ஆகஸ்ட் மாதத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. இந் நிறுவனத்தின் புதிய தவணைக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். மாணவர் மைய கற்கை செயன்முறையொன்றின் கீழ் சேவைகளை வழங்கும் அந் நிறுவனம் பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் வழிகாட்டுதல்களை வழங்குவதோடு பல்வேறு பின் புலங்களிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஜப்பான் மொழித் தேர்ச்சியையும் கலாசார அறிவையும் பெறுவதற்கு வாய்ப்பளிக்கும் கற்பித்தல் சூழலொன்றை உருவாக்கியுள்ளது. Datatech Lanka நிறுவனம் கல்வி அல்லது தொழில் பயிற்சிக்கு ஜப்பானுக்கு செல்வதற்கு எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு ஜப்பான் நாட்டுக்கு செல்வதற்கான விசாவை பெறுவதற்கும் உதவுகிறது. அனுபவமிக்க ஆலோசகர்கள் மிகப் பொருத்தமான பாடநெறிகளை தெரிவு செய்வதற்கும், தொழில் வாழ்க்கையை திட்டமிடுவதற்கும் வழிகாட்டுகின்றனர். இந் நிறுவனம் முறையாக பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் கீழ் நெகிழ்வுதன்மையுடைய செயன்முறை மற்றும் உளவியல் கற்பித்தல் முறையின் கீழ் மாணவர்களின் மொழி அறிவை மேம்படுத்துகிறது. இதற்கு முன்னரும் இந் நிறுவனம் தேசிய தொழில்முயற்சியாண்மை ஜனாதிபதி விருது, ஆசிய தேசிய தொழில்முயற்சியாண்மை விருது, ஸ்வர்ணசிங்க தேசிய விருது மற்றும் பினக்கல் 2025 விருது உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.