எவல்யூஷன் ஒட்டோ, அதன் முதன்மையான பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை கொழும்பு 05 இல் அதிகாரப்பூர்வமாகத் திறக்கிறது
எவல்யூஷன் ஒட்டோ நிறுவனம், ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பம்பலப்பிட்டியில் தனது பல்வகை வர்த்தகநாம மின்சார வாகன காட்சியறையை பிரமாண்டமாக திறப்பதாக பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த காட்சியறையை, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகனங்களை ஆராய்ந்து வாங்கும் போது ஒரு பிரீமியம், தடையற்ற அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்சியறை இலங்கையின் மிகப்பெரிய மின்சார வாகன தொகுப்பைக் கொண்டுள்ளது, இதில் சாங்கனின் Avatr> SAIC மோட்டரின் IM மோட்டார்ஸ், Geely ஒட்டோ குழுமத்தின் Xpeng & Riddara போன்ற முன்னணி வர்த்தகநாம ங்கள் அடங்கும், ஒவ்வொரு உற்பத்தியாளரிடமிருந்தும் வௌ;வேறு வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வகையான முதன்மை மாதிரிகளை வழங்குகிறது.
‘இந்த முதன்மையான எவல்யூஷன் ஒட்டோ காட்சியறை மூலம், பிரீமியம் EV உரிமையை வரையறுக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம், இது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் EV பயணம் முழுவதும் உலகத்தரம் வாய்ந்த அனுபவம், நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் முழுமையான ஆதரவை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது’ என்று பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டீ சொய்சா கூறுகிறார்.
Avatr மற்றும் IM போன்ற உயர்ந்த வர்த்தகநாமங்களுடன் இணைந்திருப்பதில் எவல்யூஷன் ஒட்டோ பெருமை கொள்கிறது. டூப்ளிகேஷன் வீதியில் உள்ள இந்த அணுகக்கூடிய இடத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இங்குள்ள எங்கள் நுகர்வோருக்கு விதிவிலக்கான சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்’ என்று பணிப்பாளர் தீரன் குந்தன்மால் மேலும் கூறுகிறார்.
காட்சியறைக்கு வருபவர்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகள், விரிவான வாகன விளக்கங்கள், நேரடி சோதனை ஓட்டங்கள் மற்றும் EV தொழில்நுட்பம் மற்றும் உரிமை குறித்த நிபுணர் ஆலோசனைகளை எதிர்பார்க்கலாம்.

