
கழகங்களுக்கிடைக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கிய Enchanteur நிறுவனம்
உலகப் புகழ் பெற்ற நறுமண பொருள் வர்த்தகநாமமான Enchanteur, இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கியுள்ளது. மேற்படி போட்டித் தொடர் மார்ச் மாதம் 02 மற்றும் 03 ஆந் திகதிகளில் நடைபெற்றது. 400 வீராங்கனைகளுடன் ஏராளமான பார்வையாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற மேற்படி போட்டித் தொடர் விளயாட்டுத் திறன், ஐக்கியம் மற்றும் சமூகப் பங்களிப்பு போன்ற பல்வேறு அம்சங்களை ஊக்குவிப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Enchanteur நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமையாளர் விவேக் வேட் மற்றும் Enchanteur Sri Lanka நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உதய நிஸ்சங்க உள்ளிட்ட நிறுவனத்தின் உயர் மட்ட அதிகாரிகள் பலரும் இந் நிகழ்வில் பங்கேற்றனர். ஆசிய வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினதும் இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினதும் தலைவி திருமதி லக்ஷ்மி விக்டோரியா மற்றும் வலைப்பந்தாட்டத் துறையின் முன்னணி ஆளுமைகள் பலரும் இதில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான விளையாட்டு போட்டித் தொடரொன்றுக்கு அனுசரணை வழங்க முடிந்தமையிட்டு பெருமிதம் கெள்வதாக Enchanteur நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டை அடிப்படையாக கொண்டு நறுமணப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பல்வேறு உற்பத்திகளை சந்தைக்கு விநியோகிக்கும் Enchanteur நிறுவனம் சுமார் 40 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தமது வலையமைப்பை விரிவுபடுத்தியுள்ளது. சமூகத்தை வலுவூட்டும் வகையிலான சாதகமான பல்வேறு திட்டங்களுக்கு மேற்படி நிறுவனம் தொடர்ந்தும் அனுசரணை வழங்கி வருகின்றது. கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கு அனுசரணை வழங்கியதன் ஊடாக தமது அபிலாஷைகளை அடியொட்டியதான குழு உணர்வு மற்றும் விளையாட்டுத் திறன் போன்ற பண்புகளை மேம்படுத்துவதற்கு வீராங்களைகளுக்கு வலு சேர்ப்பதற்கும் அதன் மூலம் பொறுப்புணர்வுமிக்க நிறுவனமாக தாம் பெற்றுள்ள மக்கள் அபிமானத்தை மேலும் உறுதிப்படுத்துவதற்கும் Enchanteur நிறுவனம் எதிர்பார்க்கின்றது.