December 20, 2024
DSI TyresSLIM Brand Excellence, NCE மற்றும் Dragons of Asia விருதுகளை வென்று சாதனை
செய்தி

DSI TyresSLIM Brand Excellence, NCE மற்றும் Dragons of Asia விருதுகளை வென்று சாதனை

Dec 20, 2024

இலங்கையின் டயர் மற்றும் இறப்பர் சார்ந்த உற்பத்தித் துறையின் முன்னோடியாக திகழும் புகழ்மிக்க நிறுவனமாக பல தசாப்தங்களாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ள டயர் உலகின் முன்னோடியான DSI Tyres நிறுவனம் உள்ளிட்ட அதன் பல்வேறு இணை  நிறுவனங்கள் SLIM Brand Excellence, Dragons of Asia  மற்றும் NCE உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளன. இலங்கையில் நடாத்தப்படுகின்ற உயரிய அங்கீகாரத்துடன் கூடிய போட்டித்தன்மை மிக்கதும் கோலாகலமானதுமான வர்த்தக நாம விருது விழாவாக கருதப்படும் SLIM Brand Excellence 2024 விருது விழாவில் DSI Tyres, ‘Agile Brand of the Year’ எனும் உயர் விருதை வென்றுள்ளது. துரிதமாக மாறி வரும் உலகில் சந்தை மற்றும் சமூக மாற்றங்களுக்குட்பட்டு வெற்றிகரமான தொழில்முயற்சி முறைகள் மற்றும் உத்திகளை சந்தர்ப்பத்துக்கேற்ற முறையில் பின்பற்றியமையே மேற்படி விருதை அளித்தமைக்கான காரணமாகும். DSI Tyres செயற்படுத்திய சந்தைப்படுத்தல் தொடர்பாடல் ஊக்குவிப்பு திட்டத்துக்கு 24 ஆவது Dragons of Asia’ விருது விழாவில் ‘Best Brand Building or Awareness Campaign இற்கு Black Dragon விருதை பெற்றதன் மூலம் DSI Tyres முதலாவது சர்வதேச விருதை வென்று சாதனை படைத்துள்ளது. மேலும்,  Dragons of Sri Lanka விருது விழாவில் DSI Tyres  வெள்ளிப் பதக்க விருதையும் வென்றுள்ளது.

தேசிய ஏற்றுமதி சபை (NCE) ஏற்பாடு செய்த 2024 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி உயர் விருது விழாவில் சேம்சன் இறப்பர் இன்டரீஸ் நிறுவனம் இறப்பர் டயர் மற்றும் அது சார்ந்த துணைப்பாகங்கள் பிரிவின் பாரியளவிலான பிரிவின் வெள்ளிப் பதக்க விருதையும், SRG ஹோல்டிங்ஸ் நிறுவனம் உற்பத்தி செய்யப்பட்ட விவசாயப் பயிர் பிரிவின் சிறிய அளவிலான பிரிவின் வெள்ளிப் பதக்க விருதையும், சேம்சன் பைக்ஸ் நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் இலகு பொறியியல் உற்பத்திகள் பிரிவின் பாரியளவிலான பிரிவின் வெங்கலப் பதக்க விருதையும், சேம்சன் ரீக்லேம் இறப்பர் நிறுவனம் இறப்பர் மற்றும் அது சார்ந்த உறபத்திகள் பிரிவின் வெங்கலப் பதக்க விருதையும் வென்றுள்ளன. சர்வதேச நம்பிக்கையை திடமாக உறுதிப்படுத்தி  85 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு DSI Tyres தமது உற்பத்திகளை ஏற்றுமதி செய்கிறது. உலகின் முன்னணி சந்தைப்படுத்தல் வலையமைப்புகள் பலவற்றின் மூலம் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்தி வரும் DSI Tyres இதற்கு முன்னரும் தொடர்ச்சியாக பல்வேறு விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *