August 15, 2025
Doctor J Premium DentalCareஸ்தாபகர் டாக்டர் தனுஷ்க ஜீவந்தவுக்கு BWIOவிருது
செய்தி

Doctor J Premium DentalCareஸ்தாபகர் டாக்டர் தனுஷ்க ஜீவந்தவுக்கு BWIOவிருது

May 6, 2025

Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட BWIO 2025 விருது விழாவில் டாக்டர் தனுஷ்க ஜீவந்த ஆண்டின் சிறந்த புத்தாக்க பல் மருத்துவர் எனும் விருதை வென்றுள்ளார். பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவப் பீடத்தின் பட்டதாரியான அவர் இலங்கையின் புகழ்பெற்றதொரு பல் மருத்துவர் ஆவார். கராபிடிய போதனா மருத்துவமனை உள்ளிட்ட அரச மருத்துவமனைகள் பலவற்றில் கடமையாற்றி அனுபவம் பெற்றுள்ள அவர் முன்னணி தனியார் மருத்துவமனையொன்றிலும் பணியாற்றிய பின்னர் Doctor J Premium Dental Care எனும் நிறுவனத்தை தொடங்கினார். அது நுகேகொடை தெல்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. அந் நிறுவனம் அதி நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி Restorative Dentistry, Cosmetic Procedures மற்றும் Implantology போன்ற பல்வேறு பல் மருத்துவச் சிகிச்சைகளை அளிக்கிறது. American Academy of Implant Dentistry நிறுவனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ரோஸ்மன் பல்கலைக்கழகத்தில் மறுசீரமைப்பு பல் மருத்துவம் தொடர்பான வதிவிட பாடநெறியையும் பூர்த்தி செய்துள்ள டாக்டர் ஜீவந்த தனது தனித்துவமான ஆற்றலை கொண்டு பல் மறுசீரமைப்பு சிகிச்சையில் பெரும் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறார்.

அவர் International College of Continuing Dental Education (FICCDE) மற்றும்  Pierre Fauchard Academy (USA) போன்ற நிறுவனங்களின் புகழ்பூத்த உறுப்பினருமாவார். டிஜிட்டல் பல் மருத்துவம், , All-on-Four  மற்றும் Zygomatic Systems போன்ற முறைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் Full-Arch மறுசீரமைப்பு உத்திகளையும் டிஜிட்டல் 3D ஸ்கேன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி சிரிப்பை உருவாக்குதல் போன்ற துறைகள் தொடர்பாக அவர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பயிற்சித்திட்டங்களையும் பூர்த்தி செய்துள்ளார். ஆசிய – பசுபிக் பல் மருத்துவ மாநாடு போன்ற சர்வதேச மாநாடுகளிலும் பங்கேற்றுள்ள அவர் ஐக்கிய இராச்சியத்தின் Manchester University மற்றும் ரஷ்யாவின் North Western State Medical University ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளார். வாயின் உட்பகுதியில் ஸ்கேன் தொடக்கம்  சிக்கலான பல் மறுசீரமைப்பு வரையான சகல துறைகள் தொடர்பாகவும் அவர் பாடநெறிகளை கற்றுள்ளார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ள டாக்டர் ஜீவந்த முழு இலங்கைக்குமான சமாதான நீதவானுமாவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close