March 16, 2026
T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை ஊக்குவிக்கும் Coca-Cola வின் ‘Give Back Life’ செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு
செய்தி

T20 உலகக் கிண்ணத்தில் பிளாஸ்டிக் மீள்சுழற்சியை ஊக்குவிக்கும் Coca-Cola வின் ‘Give Back Life’ செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுப்பு

Mar 16, 2026

இந்தியா மற்றும் இலங்கையில் அண்மையில் நிறைவுக்கு வந்த 2026 ஐசிசி ஆடவர் T20 உலகக் கிரிக்கெட் தொடரின் அதிகாரப்பூர்வ பானப் பங்காளராக சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் (ஐசிசி) Coca-Cola நிறுவனம் கைகோர்த்தது. இந்த உலகளாவிய கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, இலங்கை முழுவதும் மறுசுழற்சி மற்றும் சமூக ஈடுபாடு தொடர்பான பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களை Coca-Cola நிறுவனம் முன்னெடுத்திருந்தது.

இந்த முயற்சியானது, Coca-Cola நிறுவனத்தின் பிடரதான தூண்களில் ஒன்றான ‘பொதியிடல்’ முறையை வலுப்படுத்துகின்றது. இது ‘வடிவமைப்பு’ மற்றும் ‘சேகரிப்பதற்கான கூட்டாண்மை’ (Partner to Collect) ஆகிய இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது. 2035 ஆம் ஆண்டுக்கான Coca-Cola நிறுவனத்தின் தன்னார்வ சுற்றுச்சூழல் பாதுகாப்பு இலக்குகளுக்கு இணங்க, வலுவான சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி கட்டமைப்புகளை உருவாக்க இந்த முயற்சி பெரிதும் துணைபுரிகின்றது. இதன் மூலம், தான் சந்தையில் அறிமுகப்படுத்தும் போத்தல்கள் மற்றும் டின்களில் 70 முதல் 75 சதவீதத்திற்குச் சமமானவற்றை சேகரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என்ற நிறுவனத்தின் இலக்கை அடைய இது பங்களிக்கிறது.

இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்ற ஐசிசி ஆவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது, Coca-Cola பிவரேஜஸ் ஸ்ரீலங்கா (CCBSL) நிறுவனம், ‘நெப்டியூன் ரீசைக்கிளர்ஸ்’ (Neptune Recyclers) நிறுவத்துடன் இணைந்து Coca-Cola நிறுவனத்தின் முன்னோடித் திட்டமான Give Back Life திட்டத்தின் கீழ் PET போத்தல்களைச் சேகரித்து மறுசுழற்சி செய்யும் பாரிய செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மைதானங்களில் PET போத்தல்கள் மற்றும் அலுமினிய டின்களைச் சேகரிக்கும் களப் பணிகளை CCBSL நிறுவனம் நேரடியாக மேற்பார்வை செய்தது. அத்துடன், இப்பணியில் ஈடுபடும் தன்னார்வர்களுக்கு முறையான கழிவு சேகரிப்பு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் கழிவுகளைத் தரம் பிரித்தல் குறித்த விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டன. மேலும், Coca-Cola அறக்கட்டளையின் திட்டங்களைச் செம்மையாகச் செயற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), சர்வதேச கிரிக்கெட் பேரவை மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகியவற்றுடன் இணைந்து CCBSL நிறுவனம் ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுத்தது. இதன் மூலம் போட்டி நடைபெற்ற காலப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய CCBSL நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் குறித்து கருத்து தெரிவித்த Coca-Cola பிவெரேஜஸ் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதீப் பாண்டே கூறுகையில், “ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரானது இலங்கையர்களிடையே ஒரு தனித்துவமான பெருமையையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டைச் சுற்றி இத்தகையதொரு நேர்மறையான சூழல் நிலவும் வேளையில், போட்டி நடைபெறும் போதும் சரி, கடைசி ஓவர் வீசி முடிக்கப்பட்ட பின்னரும் சரி, அந்த அனுபவத்தை அனைவருக்கும் மகிழ்ச்சிகரமானதாகவும், தூய்மையானதாகவும் தொடரச் செய்வதில் ஒரு சிறு பங்கினை ஆற்றுவதை நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்.” எனத் தெரிவித்தார்.

மேலும், “ஒரு போத்தல் அல்லது அலுமினிய டின்னைச் சரியான முறையில் அப்புறப்படுத்துவது போன்ற மிகச் சிறிய பழக்கவழக்கங்கள் கூட, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றிணைந்து செய்யும்போது ஒரு பாரிய மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் நம்புகிறோம். அதனால்தான், களத்தில் மறுசுழற்சி செயற்பாடுகளை வலுப்படுத்த எமது கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படுகிறோம். அத்துடன், உள்ளூர் மறுசுழற்சி பெறுமதிச் சங்கிலிகளையும், அதனை வாழ்வாதாரமாகக் கொண்டவர்களையும் வலுவூட்டும் திட்டங்களுக்குத் தொடர்ந்து எமது ஆதரவை வழங்கி வருகின்றோம்.” என அவர் குறிப்பிட்டார்.

இன்றுவரை, “Give Back Life” திட்டமானது இலங்கை முழுவதும் 650-க்கும் மேற்பட்ட PET பிளாஸ்டிக் சேகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது. இதில் தலா சுமார் 5,000 கிலோ PET பிளாஸ்டிக்கைச் சேகரிக்கக்கூடிய 21 பாரிய அளவிலான கூடாரங்களும், 28 சேகரிப்பு நிலையங்களும், 15 மூலப்பொருள் மீட்பு வசதிகளும் அடங்கும். மேலும், ‘கடற்கரையைத் தத்தெடுத்தல்’ (Adopt A Beach) திட்டத்தின் ஊடாக எட்டு கடற்கரைகள் மற்றும் நீர்வழிகள் தத்தெடுக்கப்பட்டு, அவை நாளாந்தம் தூய்மைப்படுத்தப்படுகின்றன. மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளைத் திறம்படவும், சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சேகரித்து கொண்டு செல்வதற்காக, இலங்கையில் தனது முதலாவது மின்சார முச்சகர வண்டியை இத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறைந்த கார்பன் வெளியேற்றத்துடன் கூடிய சிக்கனமான தீர்வாக அமைந்துள்ளதுடன், மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகளை வினைத்திறனாகவும் நிலையான முறையிலும் சேகரிப்பதற்கும் கொண்டு செல்வதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close