March 12, 2025
அசல் கோப்பி பானத்தின் சுவையை வழங்கும் Cloé Café நாவலவில் திறப்பு
செய்தி

அசல் கோப்பி பானத்தின் சுவையை வழங்கும் Cloé Café நாவலவில் திறப்பு

May 16, 2024

பல்வேறு வகையான கோப்பி பானங்கள் மற்றும் தித்திக்கும் சுவையான உணவுகளை ருசிப்பதற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் அவுஸ்திரேலிய சுவையினால் ஈர்க்கப்பட்ட Cloé Café இலங்கையில் நாவல வீதி, நாவல 196 ஆம் இலக்க முகவரியில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய துணை உயர்ஸ்தானிகர் திருமதி லலிதா கபூர் அவர்களின் தலைமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. WishQue தலைமை அலுவலகத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள Cloé Café கோப்பி பானங்கள் மற்றும் உணவு வகைகளின் உயர் தரத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது. “An Australian roast where every cup tells a story” என்ற தொனிப்பொருளின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Cloé Café அவுஸ்திரேலிய கோப்பியுடன் பிணைந்திருக்கும் கலாசாரத்தை இலங்கையில் பிரபல்யப்படுத்துவதாக உள்ளது. இலங்கையின் முன்னணி இலத்திரனியல் வணிக நிறுவனமான WishQue நிறுவனத்துடன் இணைந்ததான Cloé Café அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற கோப்பி மூலம் நுகர்வோருக்கு தனித்துவமானதொரு அனுபவத்தை வழங்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

கோப்பியை அடிப்படையாக கொண்ட பானங்கள், பபள் ரீ மற்றும் ஆசியாவின் சுவையை உள்ளடக்கியதான பல்வேறு உணவு வகைகள் உள்ளிட்ட பல்வகை தன்மையினை கொண்ட மெனு அட்டையை Cloé Café கொண்டுள்ளது. இலங்கையில் கேக் உற்பத்தியில் முதல்வனாக திகழும் WishQue நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற கேக் உள்ளிட்ட பல்வேறு இனிப்பு வகைகளை ருசிக்கும் வாய்ப்பினை Cloé Café வழங்குகிறது. உணவு, பானங்களுக்கு மேலதிகமாக இயற்கையின் எழிலை எவ்வித சமரசமுமின்றி ரசிப்பதற்கான வாய்ப்பினையும் வழங்கும் Cloé Café சூழல் நேயமிக்கதாக தாவரச் செடிகள், மரங்களை கொண்டதொரு ரம்மியமான சூழலை கண் முன்னே கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விஷேட வைபவங்கள், மறக்க முடியாத நிகழ்வுகள் மற்றும் வணிக நடவடிக்கைகளுக்கு பொருத்தமான இடத்தை தேடுவோருக்கு முன் கூட்டியே Cloé Café ஐ அதற்காக ஒதுக்கி கொள்ள முடியும். அதற்கு மேலதிகமாக Wi-Fi, Customer Experience Center, Parking, Washrooms, Smoking Area, Outdoor Area வசதிகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர அனுபவத்தை உறுதிப்படுத்தும் Business Suite ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. காலை 8.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை 0112474455 தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு கோப்பி பானங்களை ஆடர் செய்து கொண்டு செல்ல முடியும். Uber மற்றும் Pick Me செயலிகள் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும்.

“எமது நிறுவனத்துக்கு வருகை தரும் சகலருக்கும் மகத்தான அனுபவத்தினை வழங்கிட தயாராக உள்ளோம். உயர் தரத்திலான மூலப்பொருட்களிலிருந்து சௌகரியமான சுற்றுச்சூழல் வரை சகல துறைகளிலும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கிட தயாராக உள்ளோம். எம்முடன் இணைந்து இந்த அரிய அனுபவத்தை பெறுவதற்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.” என Cloé Café தலைமை நிறைவேற்று அதிகாரி திரு சிந்தக ஜயசேக்கர தெரிவித்தார். ஆகச் சிறந்த பயணத்துக்கு தம் வசமுள்ள நோக்கத்தின் ஒரு பகுதியாக Cloé Café மூலப்பொருட்கள், ஆக்கத்திறன், கொண்டாட்டங்கள் மற்றும் நம்பிக்கை ஆகிய அடிப்படை 04 விழுமியங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறது. அதுவே, நுகர்வோர்களுக்குள் அவர்கள் மீது கௌரவமான உணர்வொன்றை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக உள்ளது. உணவகம் திறக்கபட்ட தினத்தன்று நாள் முழுவதும் விஷேட ஊக்குவிப்பு திட்டங்களை Cloé Café ஏற்பாடு செய்திருந்தது. Cloé Café நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பான மேலதிக விபரங்களை FB: @Cloecafe மற்றும் IG: @CloecafeSL ஆகிய சமூக ஊடகங்களில் பெற முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close