October 24, 2025
Great Place to Work® சான்றிதழை வென்ற முதலாவது சீன உணவகமாக Chinese Dragon Café தெரிவு
செய்தி

Great Place to Work® சான்றிதழை வென்ற முதலாவது சீன உணவகமாக Chinese Dragon Café தெரிவு

Oct 23, 2025

Chinese Dragone Café (பி.வி.டி) லிமிடெட், இலங்கையின் உணவு மற்றும் விருந்தோம்பல் துறையில் மிகவும் குறிப்பிடத்தக்க பெயர்களில் ஒன்றாகும். மனிதர்களை மையமாகக் கொண்ட பண்பாட்டையும், பணியாளர்களின் நலனுக்கான அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், இது அதிகாரப்பூர்வமாக “Great Place to Work” சான்றிதழைப் பெற்றுள்ளது. 1942 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இலங்கையின் முதலாவது சீன உணவக வர்த்தகநாமமான Chinese Dragone Café பல தலைமுறைகளாக தரமான சீன உணவுகளை இந் நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது. ஆரம்பம் தொடக்கமே பெரும் வளர்ச்சியை அடைந்துள்ள அந் நிறுவனத்தின் கிளைகள் பம்பலபிடிய, கல்கிஸ்ச, ராஜகிரிய, பெலவத்த, வத்தளை, கந்தானை, கடுவளை, நுகேகொடை, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் டுபாயிலும் அமைந்துள்ளன. இந் நிறுவனம் அதன் சிறப்புமிக்க பாரம்பரியம், சமையல் புதுமை, மற்றும் சேவைச் சிறப்பிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காகப் போற்றப்படுகிறது.

Great Place to Work நிறுவனம் Chinese Dragon Café உணவகத்தை சேவையாற்றுவதற்கு மிகவும் உகந்த நிறுவனமாக அடையாளங் கண்டுள்ளதோடு அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற Trust Index கருத்துக்கணிப்பு மற்றும் விரிவான பணியிட கலாச்சார மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களில் 75% இற்கு மேற்பட்டோர் நிறுவனத்தை உயர் மட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளமை தனித்துவமானதொரு விடயமாகும். குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்கையில் ஒரு குழுவாக செயற்படுதல், நம்பகத்தன்மை, ஆர்வம், புதுமை, உயர் சேவை போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. எங்கள் பணியாளர்களே எங்கள் வெற்றியின் இதயம். அவர்களின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் குழுப் பணியே எங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றது. சேவையாற்றுவதற்கு மிகவும் உகந்த நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாம் அனைவருமே பெற்ற வெற்றியாகும். அதன் மூலம் புதுமை மற்றும் வளர்ச்சி ஆகிய விடயங்களில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது” என அதன் தலைமை செயல் அதிகாரி, திரு. கயான் பெர்னாண்டோ தெரிவித்தார். Chinese Dragon Café “ஊழியர்களுக்கு முதலிடம்” என்ற தத்துவத்தின் மூலம் தீர்மானம் எடுக்கையிலும் தொழில் விருத்தி நடவடிக்கைளிலும் சகல குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது. சேவை நிலையத்தில் இடம்பெறும் தொல்லைகள் தொடர்பாக Zero Tolerance கொள்கையொன்றை பின்பற்றும் அந் நிறுவனம் தெளிவான தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் பயிற்சி திட்டங்கள், ஊழியர் ஈடுபாட்டுத் திட்டங்கள், மற்றும் சுகாதார முயற்சிகள் மூலமாக பணியாளர் நலனை முன்னுரிமையாகக் கருதுகிறது. பல்வகைத்தன்மை மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் Chinese Dragon Café புதிய கருத்துக்கள் மற்றும் சமையல் புதுமை சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. தொழில் விருத்தி வாய்ப்புகள், விருதுகள், நவீன வசதிகள், விளையாட்டு, கலாசாரம் மற்றும் சமுதாய நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு மேலதிகச் செயற்பாடுகளில் இணைவதற்கு பணியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. Chinese Dragon Café சமையற் துறை வர்த்தகநாமமாகவும் மேலான சேவைச் சூழலை கொண்ட நிறுவனமாகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளது.Great Place to Work நிறுவனம் Chinese Dragon Café உணவகத்தை சேவையாற்றுவதற்கு மிகவும் உகந்த நிறுவனமாக அடையாளங் கண்டுள்ளதோடு அதற்காக சர்வதேச அங்கீகாரம் பெற்ற Trust Index கருத்துக்கணிப்பு மற்றும் விரிவான பணியிட கலாச்சார மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்களில் 75% இற்கு மேற்பட்டோர் நிறுவனத்தை உயர் மட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளமை தனித்துவமானதொரு விடயமாகும். குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்கையில் ஒரு குழுவாக செயற்படுதல், நம்பகத்தன்மை, ஆர்வம், புதுமை, உயர் சேவை போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.எங்கள் பணியாளர்களே எங்கள் வெற்றியின் இதயம். அவர்களின் அர்ப்பணிப்பு, படைப்பாற்றல் மற்றும் குழுப் பணியே எங்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றது. சேவையாற்றுவதற்கு மிகவும் உகந்த நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை நாம் அனைவருமே பெற்ற வெற்றியாகும். அதன் மூலம் புதுமை மற்றும் வளர்ச்சி ஆகிய விடயங்களில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதியாகியுள்ளது” என அதன் தலைமை செயல் அதிகாரி, திரு. கயான் பெர்னாண்டோ தெரிவித்தார். Chinese Dragon Café “ஊழியர்களுக்கு முதலிடம்” என்ற தத்துவத்தின் மூலம் தீர்மானம் எடுக்கையிலும் தொழில் விருத்தி நடவடிக்கைளிலும் சகல குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகிறது. சேவை நிலையத்தில் இடம்பெறும் தொல்லைகள் தொடர்பாக Zero Tolerance கொள்கையொன்றை பின்பற்றும் அந் நிறுவனம் தெளிவான தொடர்பாடலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் பயிற்சி திட்டங்கள், ஊழியர் ஈடுபாட்டுத் திட்டங்கள், மற்றும் சுகாதார முயற்சிகள் மூலமாக பணியாளர் நலனை முன்னுரிமையாகக் கருதுகிறது. பல்வகைத்தன்மை மற்றும் சமத்துவத்தை ஊக்குவிக்கும் Chinese Dragon Café புதிய கருத்துக்கள் மற்றும் சமையல் புதுமை சிந்தனைகளை ஊக்குவிக்கிறது. தொழில் விருத்தி வாய்ப்புகள், விருதுகள், நவீன வசதிகள், விளையாட்டு, கலாசாரம் மற்றும் சமுதாய நலத்திட்டங்கள் போன்ற பல்வேறு மேலதிகச் செயற்பாடுகளில் இணைவதற்கு பணியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. Chinese Dragon Café சமையற் துறை வர்த்தகநாமமாகவும் மேலான சேவைச் சூழலை கொண்ட நிறுவனமாகவும் மக்கள் மத்தியில் புகழ் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close