August 15, 2025
சமையல் பாத்திரங்கள் உற்பத்தியில் உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருதை வென்றுள்ள Bristo Products நிறுவனம்
செய்தி

சமையல் பாத்திரங்கள் உற்பத்தியில் உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருதை வென்றுள்ள Bristo Products நிறுவனம்

May 16, 2025

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் Bristo நிறுவனம் Products 2024 தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் இதர கைத்தொழில் பிரிவின் (சிறிய அளவிலான) சிறந்த கைத்தொழில் வர்த்தகநாமத்துக்கான விருதை வென்றுள்ளது. ஒரு தசாப்த காலத்துக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள  D & A Marketing நிறுவனம் சிங்கர் ஸ்ரீ லங்கா, ஆர்பிக்கோ, தம்ரோ, காகில்ஸ், கீல்ஸ், கூல் பிளனெட் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றுக்கும் சர்வதேச சந்தைக்கும் Bristo உற்பத்திகளை விநியோகிக்கின்றது. பண்டாரகமவில் அமைந்துள்ள நவீன கைத்தொழி்ற்சாலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற மேற்படி உற்பத்திகள் நீண்ட கால பாவனை மற்றும் தரத்திலும் உயர்வாக காணப்படுவதோடு எளிதில் பயன்படுத்தவும் முடியும்.

சகல Bristo உற்பத்திகளுக்கும் உயர் தரத்திலான மூலப்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. மூன்று அடுக்குகளை கொண்ட ஜேர்மன் வெல்பர்கர் ஒட்டாத தன்மையுடைய பூச்சு காரணமாக Bristo பாத்திரங்கள் சமையலை இலகுபடுத்துகிறது. அவை உணவுகளின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துகிறது. பாதுகாப்பான மற்றும் நம்பகரமான சமையல் அனுபவத்தை அளிக்கும், Perfluorooctanoic அமிலம் உள்ளடக்கப்படாத, சூழல் நேய Bristo உற்பத்திகள் மீது வாடிக்கையாளர்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். Bristo வர்த்தகநாமத்தில் பல வகையான, உயர் தர Non-Stick சமையல் பாத்திரங்களை கொள்வனவு செய்ய முடியும். பிரைன் பான், ஹொப்பர் பான், விசிலுடன் கூடிய கேத்தல்கள், Non-Stick கொக்கிஸ் அச்சுகள் அவற்றில் முதன்மையானவை ஆகும். Platinum மற்றும் Ceramic Coated போன்ற இரண்டு மாதிரிகளில் மேற்படி உற்பத்திகளை பெற முடியும். சகல உற்பத்திகளும் பிடிப்பதற்கு வசதியாக பேக்லைட் ஹென்ட்ல் ஒன்றையும் கண்ணாடி மூடியொன்றையும் கொண்டுள்ளது. Bristo உற்பத்திகளை பல வர்ணங்களில் தமது விருப்பத்துக்கேற்ப தெரிவு செய்திட முடியும். Bristo பிரெசர் கக்கர்கள் 3, 5 மற்றும் 7.5 லீற்றர் கொள்ளளவுகளில் பெற முடிவதோடு மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு செயன்முறைகளையும் கொண்டுள்ளது. கடந்த காலங்களில் இந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் சமையலறைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்குவதே இந் நிறுவனத்தின் அடுத்த இலக்காகும். சர்வதேச தேவைகளுக்கேற்ற உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குவதை இலக்காக கொண்டுள்ள இந் நிறுவனம் வருங் காலத்தில் தமது உற்பத்தி நடவடிக்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் மேலும் விரிவுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close