August 16, 2025
மெல்லிய திரையுடன் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும் Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம் 
செய்தி

மெல்லிய திரையுடன் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும் Samsung இன் 32″-அங்குல HD ஸ்மார்ட் தொலைக்காட்சி அறிமுகம் 

Aug 15, 2025

தொடர்ச்சியாக 19 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முன்னணி நிறுவனமாக திகழும் Samsung, 32″-அங்குல உயர்-தெளிவுத்திறன் கொண்ட மெல்லிய திரையுடைய HD ஸ்மார்ட் தொலைக்காட்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய இந்த தொலைக்காட்சி, கவர்ச்சிகரமான விலையில் சிறிய அளவிலான, ஆனால் அனைத்து வசதிகளையும் கொண்ட தொலைக்காட்சியை தேடும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது.

உயர் வரம்பு தெளிவுத்திறன் (Ultra Clean View) மற்றும் பியூர்கலர் (PurColor) தொழில்நுட்பங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காட்சி, இருளான மற்றும் ஒளிமயமான காட்சிகள் இரண்டிலும் சிறந்த படத்தரத்தை வழங்க பல்வேறு வண்ணங்களை காட்சிப்படுத்துகிறது. அல்ட்ரா கிளீன் வியூ (Ultra Clean View) தொழில்நுட்பம் முதன்மை உள்ளடக்கத்தை ஆராய்ந்து, மிகக் குறைந்த திரிபுடன் உயர்தர படங்களை வழங்குகிறது, மேலும் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர் (Contrast Enhancer) அம்சம் மேம்படுத்தப்பட்ட ஆழத்துடன் பார்வையாளரை உள்ளிழுக்கும் வகையில் அற்புதமான படத்தரத்தை வழங்குகிறது.

சிறிய இடங்களுக்கு ஏற்ற அழகிய வடிவமைப்புடன் கூடிய இந்த நவீன தொலைக்காட்சி, கணினி முறை (PC Mode), விளையாட்டு முறை (Game Mode), திரை பிரதிபலிப்பு (Screen Mirroring) உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. இது வாடிக்கையாளருக்கு அதிக பயன்பாட்டை வழங்குகிறது. உள்ளடக்கத்தை விரும்புவோருக்கு, யுனிவர்சல் கைட் (Universal Guide) அம்சம் பார்வையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எதைப் பார்க்க வேண்டும் என்பதை விரைவாக தேர்ந்தெடுக்க உதவுகிறது.

32″-அங்குல மெல்லிய வடிவமைப்பு கொண்ட ஸ்மார்ட் தொலைக்காட்சி, ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசையில் ஒரு சிறந்த சேர்க்கையாகும். சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும் இந்த சிறிய தொலைக்காட்சியை வீட்டு அலுவலக திரையாகவோ அல்லது கேமிங் மானிட்டராகவோ பயன்படுத்தலாம். நிறுவனம் இந்த பல்செயல்பாட்டு தொலைக்காட்சியை வாங்குவதற்கு நெகிழ்வான தவணை முறை கட்டண திட்டங்களையும் வாடிக்கையாளருக்கு வழங்குகிறது.

ஸ்மார்ட் அம்சங்கள்

யுனிவர்சல் கைட் (Universal Guide)

32″-அங்குல தொலைக்காட்சி யுனிவர்சல் கான்டென்ட் வழிகாட்டியுடன் வருகிறது, இது தொலைக்காட்சியில் சரியான உள்ளடக்கத்தைத் தேடுவதில் பாவனையாளர்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்கிறது. இந்த ஸ்மார்ட் அம்சம், பிரபலமான ஸ்ட்ரீமிங் செயலிகளில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கப் பட்டியலில் இருந்து பாவனையாளர்கள் தங்களுக்குப் பிடித்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எளிதாகக் கண்டுபிடிக்க உதவுகிறது.

கணினி முறை (PC Mode)

இன்றைய கலப்பு பணிச்சூழல் கலாச்சாரத்திற்கு ஏற்ப, இந்த தொலைக்காட்சியை எளிதாக தனிப்பட்ட கணினியாக மாற்றலாம். இந்த அம்சம் வாடிக்கையாளர் ஆவணங்களை உருவாக்கவோ அல்லது cloud இலிருந்து தடையின்றி வேலை செய்யவோ உதவுகிறது. பாவனையாளர்கள் பெரிய திரை அனுபவத்திற்காக இணைய இணைப்பு இல்லாமல் Wireless திரை பிரதிபலிப்பு வசதியையும் பயன்படுத்தலாம்.

கேமிங் முறை (Game Mode)

நீண்ட நாள் வேலைக்குப் பிறகு வாடிக்கையாளர் ஓய்வெடுக்க உதவும் வகையில், 32″-அங்குல உயர்-தெளிவுத்திறன் தொலைக்காட்சி கேமிங் முறை அசம்சத்துடன் வருகிறது. இது சிறந்த பிரேம் மாற்றம் மற்றும் குறைந்த தாமதத்தை வழங்கி, சிறந்த கேமிங் அனுபவத்தை உறுதிசெய்கிறது.

வெப் பிரவுசர் (Web Browser)

இந்த தொலைக்காட்சி, ஸ்கிரீன் மிரரிங் வசதி மூலம் பாவனையாளர்கள் தங்கள் கையடக்கத் தொலைபேசிகள் அல்லது வேறு எந்த சாதனத்திலிருந்தும் உள்ளடக்கத்தை தொலைக்காட்சியில் எளிதாக இயக்க அனுமதிக்கிறது. இது தடையற்ற ஒத்துழைப்பிற்கும் பொழுதுபோக்கிற்கும் வழிவகுக்கிறது.

இந்த தொலைக்காட்சியுடன் HDR, Object Tracking Sound Lite, Samsung Knox Security மற்றும் One UI Tizen ஆகிய அம்சங்களும் உள்ளடங்கியுள்ளன.

Samsung நிறுவனம் 32″-அங்குல ஸ்மார்ட் HD மற்றும் அதற்கு மேற்பட்ட மாதிரிகளுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான அனுபவத்திற்காக 7 ஆண்டுகள் இலவச இயக்க முறைமை மேம்படுத்தல்களை வழங்குகிறது.

Samsung 32” HD மற்றும் ஸ்மார்ட் HD தொலைக்காட்சிகளை Singer, Singhagiri, Damro மற்றும் Softlogic விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close