
பிட்டுமிக்ஸ் நிறுவனத்தின் மாணவர் உதவித் தொகை திட்டம் முன்னெடுப்பு
இலங்கையில் தார் மற்றும் அது சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதில் முன்னணியில் திகழும் பிட்டுமிக்ஸ் தனியார் நிறுவனம் தமது சமூகக் கடமையை தொடர்ந்தும் நிறைவேற்றும் வகையில், குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கும் பிட்டுமிக்ஸ் மாணவர் கருணை மற்றும் பிட்டுமிக்ஸ் மாணவர் உதவிக் கரம் திட்டங்களின் புதிய கட்டத்தை அண்மையில் செயற்படுத்தியுள்ளது. வட மத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மாவட்டத்தை மையப்படுத்தியதாக கல்வி கற்பதில் திறமையுள்ள மாணவர்களை தெரிவு செய்து அவர்கள் பாடசாலைக் கல்வி கற்கும் காலத்திலும் அதற்கு பின்னர் அவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறுவார்களானால் பல்கலைக்கழக கல்வி கற்று முடிக்கும் வரைக்கும் மேற்படி மாணவர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை அளிக்கப்படுகின்றது.
பிட்டுமிக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு அசோக்க சிறிவர்தனவின் எண்ணக்கருவுக்கமைய 2014 ஆம் ஆண்டில் 06 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இத் திட்டத்தின் கீழ் அனுகூலங்களை பெற்று தமது பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியை வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்ட ஏராளமானோர் இச் சமூகத்தில் உள்ளனர். மாதாந்தம் உதவித் தொகை அளிப்பதற்கு மேலதிகமாக மாணவர்களுக்கு பாடசாலைக் கொப்பிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதற்கும் பிட்டுமிக்ஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. மாணவர் உதவித் தொகையை பெறும் மாணவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை கல்விக்காக ஊக்குவிப்பதோடு அவர்களின் கல்வித் தேவை தொடர்பாக ஆராய்ந்து அவர்களுடன் நெருங்கிய உறவை பேணுவதே இத் திட்டத்தின் தனித்துவமான சிறப்பம்சமாகும். உதவித் தொகை பெறும் மாணவர்களுள் சாதாரணத் தரம் அல்லது உயர் தரப் பரீட்சையில் சித்திப் பெற தவறும் மாணவர்களை தொழில் கல்விக்கு ஆற்றுப்படுத்தி அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெறுவதேற்கேற்ற தொழில் திறன்களையும் தகைமைகளையும் பூர்த்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பையும் மாணவர் கருணை திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாணவர் கருணை திட்டத்துக்கு மேலதிகமாக பிட்டுமிக்ஸ் நிறுவனத்தின் பணியாட்டொகுதி குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் பிட்டுமிக்ஸ் மாணவர் உதவிக் கரம் திட்டத்தின் கீழ் வருடாந்தம் பாடசாலை கொப்பிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பிட்டுமிக்ஸ் மாணவர் கருணை மற்றும் பிட்டுமிக்ஸ் மாணவர் உதவிக் கரம் திட்டங்களை இந் நாட்டு மாணவர் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி மேலும் விரிவுப்படுத்தி முன்னெடுத்துச் செல்வதே பிட்டுமிக்ஸ் நிறுவனத்தின் நோக்கமாகும்.