July 8, 2025
இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன
செய்தி

இலங்கையின்மெடிஹெல்ப்மருத்துவமனைகள்மற்றும்இந்தியாவின்அப்பல்லோமருத்துவமனைகள்மருத்துவகூட்டுஒப்பந்தத்தில்கையெழுத்திட்டுள்ளன

Jul 2, 2025

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு கிங்ஸ்பரி ஹோட்டலில் அண்மையில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தம் ஒருங்கிணைந்த மருத்துவச் செயல்பாடுகள், அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள், சிறப்புப் பராமரிப்பு வசதிகள், நோய்த் தடுப்பு உத்திகள், தொழில் மேம்பாடு ஆகியவற்றுக்கான மூலோபாய கட்டமைப்பை நிறுவும். சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை ஊக்குவிப்பதையும் இலங்கையில் சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் மெடிஹெல்ப் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. நிஷாந்த ஜெயமான்ன மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் சர்வதேச துணைத் தலைவர் திரு. ஜித்து ஜோசப் ஆகியோர் கையெழுத்திட்டனர். அதிகரித்து வரும் சுகாதார அபாயங்கள் மற்றும் நோய்களின் தொடர்ச்சியான வளர்ச்சியின் தன்மையைக் கருத்தில் கொண்டு இத்தகைய கூட்டு மிகவும் முக்கியமானது என்று திரு. நிஷாந்த ஜயமான்ன வலியுறுத்தினார்.

தேசிய எல்லைகளுக்கு அப்பால் உயர்தர சுகாதாரத்திற்கான அணுகலை விரிவுபடுத்துவது அவசியம். இந்த ஒருங்கிணைப்பு திட்டத்தில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்” என்று திரு. ஜித்து ஜோசப் கூறினார்.

இதேபோல், கல்லீரல் நோயாளிகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களிடமிருந்து நேரடி வழிகாட்டுதலைப் பெறுவதற்காக ஒரு பிரத்யேக தொலைபேசி இணைப்பு நிறுவப்பட்டுள்ளது. 0764584622 என்ற எண்ணுக்கு சாதாரண அழைப்பு, WhatsApp செய்தி அல்லது குறுஞ்செய்தி செய்வதன் மூலம் நோயாளிகள் தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டார். ரோபோடிக்-உதவி அறுவை சிகிச்சை போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களால் இயக்கப்படும், குறிப்பாக வயது வந்தோர் மற்றும் குழந்தைகளுக்கான மாற்று அறுவை சிகிச்சைகளில், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இத் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் எடுத்துரைத்தார். கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல் மாற்று சிகிச்சைக்கான உலகின் முதன்மையான மையங்களில் ஒன்றாக அப்பல்லோ மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர் அப்பாஜி கிரிஷன், முன்னர் குறிப்பிட்ட சிகிச்சைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றி விவாதித்தார். அவர் மருத்துவமனையில் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் இலங்கையில் பயன்படுத்தப்படும் ஸ்கோலியோசிஸ் சிகிச்சை முறை பற்றிய நுண்ணறிவுகளை வழங்கினார். கூடுதலாக, அவர் சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் நிறுவப்பட்ட அதிநவீன குளோபஸ் ரோபோடிக் ஸ்பைன் சிஸ்டத்தை எடுத்துரைத்தார்.

ஆரம்ப சுகாதாரம், தொற்று நோய், கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டு அமைச்சின் முன்னாள் செயலாளர் டாக்டர் அமல் ஹர்ஷ டீ சில்வா, சிரேஷ்ட வைத்திய நிபுணர்கள், இதர மருத்துவர்கள் பலரின் பங்கேற்புடன் இந்த வைபவம் நடைபெற்றது. அப்பல்லோ மருத்துவமனையின் மேம்பட்ட வசதிகள் மற்றும் அதிநவீன திறன்களை எடுத்துக்காட்டும் காணொளி நிகழ்வின் போது காட்சிப்படுத்தப்பட்டது.

நான்கு தசாப்தங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்டுள்ள மெடிஹெல்ப் மருத்துவமனை குழாம், 16 மருத்துவ நிலையங்கனையும் 02 பன்முக சிறப்பு நிபுணத்துவ மருத்துவமனைகளையும் கொண்ட இலங்கையின் மிகப் பெரிய மருத்துமனை வலையமைப்பாகும்

இந்தியாவின் முதலாவது நிறுவனம் சார் மருத்துவமனையாக டாக்டர் பிரதாப் ரெட்டியினால் 1983 ஆம் ஆண்டில் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட அப்பலோ மருத்துவமனை தற்போது ஆசியாவின் மிகப் பெரியதும் நம்பிக்கைமிக்கதுமான மருத்துவமனை குழுமமாக விளங்குகிறது. அது 74 மருத்துவமனைகள், 10,000 கட்டில்கள், 7,000 இற்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 100 ஆரம்ப நிலையங்கள், 25 நாடுகளுக்கு வியாபித்துள்ள 100 டெலிமிஷன் அலகுகள், மருத்துவ வணிக செயற்பாட்டு வெளிவாரி சேவைகள், சுகாதார காப்புறுதி சேவைகள், சர்வதேச கருத்திட்ட ஆலோசனைகள், 15 தாதியர் மற்றும் மருத்துவமனை முகாமைத்துவக் கல்லூரிகள், மருத்துவ பரிட்சார்த்த முயற்சிகள், கொள்ளை நோய் ஆய்வுகள், செல் மற்றும் மரபணு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிலையம் ஆகியவற்றை கொண்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு அப்பலோ மருத்துவமனை ஆற்றியுள்ள பங்களிப்பை பாராட்டி இந்திய அரசு நினைவு முத்திரையொன்றையும் வெளியிட்டுள்ளதோடு சுகாதார சேவை நிறுவனமொன்று அவ்வாறானதொரு கௌரவத்தை பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அப்பலோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டிக்கு 2010 ஆம் ஆண்டில் பத்மவிபூஷன விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close