September 16, 2024
சன்ரச இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு சிறந்த கைத்தொழிலுக்கான IDB வெங்கலப் பதக்க விருது
செய்தி

சன்ரச இன்டர்நெஷனல் நிறுவனத்துக்கு சிறந்த கைத்தொழிலுக்கான IDB வெங்கலப் பதக்க விருது

Feb 15, 2024

இலங்கையின் முன்னணி நொறுக்கு தீனி மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி நிறுவனமான சன்ரச இன்டர்நெசனல் தனியார் நிறுவனம், இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) ஏற்பாடு செய்த தேசிய கைத்தொழில் உயர் விருது விழாவில் நொறுக்கு தீனிகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி பிரிவின் சிறியளவிலான பிரிவின் வெங்கலப் பதக்க விருதை வென்றுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு நெலும் பொக்குன மகிந்த ராஜபக்ச அரங்கில் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதன் போது நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு ஆர். சிவகுமார் குறித்த விருதை பெற்று கொண்டார்.

1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சன்ரச நிறுவனமானது, தமது உற்பத்திகளுக்கு எப்பொழுதும் சிறந்த தரமான மூலப்பொருட்களையே பயன்படுத்தி வருகிறது. அதன் தரம் தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய நொறுக்குதீனிகள் மற்றும் இனிப்பு பண்டங்களை தயாரிப்பதில் பல தசாப்தங்களாக அனுபவம் பெற்ற சிறப்புப் பணியாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. மிக்சர், பூண்டு பைட்ஸ், முறுக்கு, சர்க்கரை எள், பச்சை கடலை, நிலக்கடலை பைட்ஸ், மோதிர முறுக்கு, மணியோக் சிப்ஸ், இனிப்பு முறுக்கு, மஞ்சள் கிராம் மற்றும் பெட்டி பைட்ஸ் ஆகியவை இந் நிறுவனத்தின் உற்பத்திகளில் அடங்கும். அவர்களின் அனைத்து தயாரிப்புகளும் 100 கிறாம் மற்றும் 01, 03 மற்றும் 05 கிலோகிறாம் பொதிகளில் சந்தையில் கிடைக்கின்றன. உள்நாட்டு சந்தைக்கு மேலதிகமாக, அவர்களின் தயாரிப்புகள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் தொடக்கத்தில் இருந்தே, சன்ரச நிறுவனம் நூற்றுக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை மக்களுக்கு வழங்கியுள்ளது, அதே நேரத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் சீராக முன்னேறி பல சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. அவற்றின் உற்பத்தி மற்றும் பொதியிடல் செயல்முறைகளின் போது உயர் தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சன்ரச எப்பொழுதும் தங்கள் தயாரிப்புகள் எல்லா நிலைகளிலும், கண்காணிக்கப்பட்டு, அளவிடப்பட்டு, மிகுந்த உத்தரவாதத்துடன் கவனித்துக் கொள்ளப்படுவதை உறுதி செய்கிறது. உற்பத்தி மற்றும் தர உத்தரவாத செயல்முறைகளை கைமுறையான தலையீட்டின் மூலம் கண்காணிக்க அவர்கள் மிகவும் திறமையான மற்றும் பயிற்சி பெற்ற நிபுணர்களைக் கொண்டுள்ளனர். நிறுவனம் இதற்கு முன்னர் பல விருதுகளையும் தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *