February 22, 2025
அமெரிக்கன் பிளாஸ்டிக் தனியார் கம்பனிக்கு ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்துக்கான விருது
செய்தி

அமெரிக்கன் பிளாஸ்டிக் தனியார் கம்பனிக்கு ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனத்துக்கான விருது

Feb 18, 2025

அமெரிக்கன் பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி தனியார் கம்பனி Pinnacle Sri Lanka 2024 விருது விழாவில் ஆண்டின் சிறந்த பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் எனும் விருதை வென்றுள்ளது. மேற்படி விருது விழா அண்மையில் கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

மேற்படி நிறுவனம் 2024 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடைபெற்ற தரம் மற்றும் உற்பத்திதிறன் தொடர்பான தேசிய மாநாட்டில் தரக் கட்டுப்பாடு தொடர்பான தங்கப் பதக்க விருதையும், 2024 ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் நடைபெற்ற தரக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் தரம், உற்பத்திதிறன் மற்றும் புத்தாக்கத்துக்கான சர்வதேச தங்கப் பதக்க விருதையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு செப்தம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்கன் பிளாஸ்டிக் தளபாட உற்பத்தி நிறுவனம் (American Plastics Company) 2023 ஆம் ஆண்டு நொவம்பர் மாதத்தில் இலக்கம் 273, புத்தளம் வீதி, குருணாகல் எனும் முகவரியில் பிரமாண்டமான கிளையொன்றையும் திறந்துள்ளது. பிரென்வயிஸ் மன்றத்தின் பேரில் நாடெங்கிலும் மேலும் அவ்வாறான பல கிளைகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளது. Injection, Blow மற்றும் Parison உள்ளிட்ட ஏராளமான பிளாஸ்டிக் உற்பத்தி இயந்திர மாதிரிகள் மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான ஆட்டிகல, பானலுவவில் அமைந்துள்ள கைத்தொழிற்சாலையில் செயற்படுகின்றன. அமெரிக்கன் பிளாஸ்டிக் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கண்கவர் வர்ணங்கள் பலவற்றிலான உயர் தர பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close