
Agro HarvestCultivation தனியார் நிறுவனத்தின் புத்தாக்க விவசாய சுற்றுலா கருத்திட்டத்துக்கு BWIO 2025 விருது
Agro Harvest Cultivation தனியார் நிறுவனத்தின் Greensprout Agro Escape கருத்திட்டம் BWIO 2025 விருது விழாவில் ஆண்டின் சிறந்த புத்தாக்க கருத்தியலுடன் கூடிய கருத்திட்டத்துக்கான பிளெடினம் விருதை வென்றுள்ளது. Greensprout Agro Escape எண்ணக்கருவானது, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டதொரு விவசாய சுற்றுலா மற்றும் நிலைபேறான கருத்திட்டமாகும். 3.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத் திட்டத்தின் மூலம் விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து வாழ்க்கை, சூழல் நேய பயிர்ச் செய்கை மற்றும் சுகவாழ்வு தொடர்பான கவர்ச்சிகரமான அனுபவத்தை சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அது உள்நாட்டு விவசாயம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளினதும் வளர்ச்சிக்கு ஏதுவாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்றளவில் இத்திட்டத்துக்கான ஆரம்ப நடவடிக்கைகளை Agro Harvest Cultivation நிறுவனம் ஆரம்பித்துள்ளதோடு அதன் பயிரிடல் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஆராய்ச்சி பயிர்ச்செய்கையாக பப்பாசி மற்றும் கொடித் தோடை செய்கை மாத்தளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கருவின் கீழ் இயற்கை விவசாயத்துக்கு உதவும் நோக்கத்தில் வணிக vermi-compost (மண்புழு உரம்) உற்பத்தி நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கறுவா, மிளகு, ஏலக்காய் போன்ற உயர் பெறுமதியுடைய வாசனைத் திரவியங்களையும் மரக்கறி மற்றும் பழ வகைகள் உள்ளிட்ட ஏராளமான பயிர்களையும் பயிரிட்டு வருங்காலத்தில் இந் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பசுமையகங்களை பயன்படுத்தி பாதுகாப்பான செயன்முறைகளில் கீழ் பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது இத் திட்டத்தின் நோக்கமாகும். இத் திட்டத்தில் கபானா வகையிலான 06 சூழல் நேய விலாக்கள் (Villa), “பண்ணையில் இருந்து மேசைக்கு” (Farm to Table) எண்ணக்கருவை அடிப்படையாக கொண்ட உணவகம், ஆயுர்வேத மசாஜ் மற்றும் தியான நிலையமொன்றும் அடங்கும். பறவைகளை பார்வையிடல், சைக்கிள் மிதித்தல் போன்ற சூழலை மையப்படுத்திய செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படுகின்றது. Agro Harvest Cultivation பொறுப்புமிக்க சுற்றுலாத் துறைக்கும் நிலைபேறான இருப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் தொழில் வல்லுநர்களை கொண்டதொரு நிறுவனமாகும்.