December 31, 2025
உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை.
செய்தி

உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று KIU பல்கலைக்கழகம் சாதனை.

Dec 31, 2025

KIU பல்கலைக்கழகமும் KIU குழுமமும் சுகாதாரச் சேவைகள், நிலைத்தன்மை, தொழிற்படை அபிவிருத்தி மற்றும் சமுதாயச் சேவை போன்ற பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்று நாட்டின் மிகக் கூடுதலான சர்வதேச பாராட்டை பெற்ற நிறுவனம் எனும் பெருமையை பெற்றுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தின் மிகப் பெரிய பராமரிப்புச் சேவை வழங்கும் பயிற்சி நிலையம் என்ற வகையில் இலங்கையின் இளம் தலைமுறையினரை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட உடன் இருந்து பராமரிக்கும் சேவை வழங்குநர்களாக (Global Caregiver) மாற்றியமை KIU நிறுவனத்தின் தனித்துவமான வெற்றிகளில் ஒன்றாகும். அதன் ஊடாக தொழிலின்மை பிரச்சனையை இல்லாதொழித்து நாட்டின் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கவும் சர்வதேச அளவில் நிலவும் சுகாதாரச் சேவை தொழில்வல்லுநர்களின் பற்றாக்குறைக்கு தீர்வு காணவும் அவர்களால் முடிந்துள்ளது. 30,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட KIU பல்கலைக்கழகம் நாட்டின் சுகாதாரச் சேவை பயிற்சி மற்றும் சர்வதேச தொழில் துறைகளுக்கு புதிய தர நியமங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் சர்வதேச தர நியமங்களுக்குட்பட்ட மொழிப் பயிற்சியுடன் கூடிய உயர் மட்டத்திலான பயிற்சியினையும் மாணவர்களுக்கு பெற முடியும். பயிற்சியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு ஜப்பான், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து, ஜேர்மனி, சவுதி அறேபியா மற்றும் குவைட் போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெற முடியும்.

கருத்திட்ட முகாமைத்துவக் கற்கை நிறுவகத்தினால் (PMI) ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேசிய கருத்திட்ட முகாமைத்துவ விருது விழாவில் NPME) சுகாதாரச் சேவைப் பிரிவின் தங்கப் பதக்க விருதை KIU குழுமத்தின் Green Cross Sri Lanka செயற்படுத்திய லாவுகல பல்பரிமான நீர் கருத்திட்டம் வென்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் லாவுகல பகுதியில் வசிக்கும் 1,900 இற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் மேற்படி திட்டமானது, 141 நாடுகளைச் சேரடந்த 2000 இற்கும் மேற்பட்ட கருத்திட்டங்களுடன் போட்டியிட்டு அவுஸ்திரியா வழங்கும் National Energy Globe விருதையும், NPME விருது விழாவில் ஆகச் சிறந்த பசுமை கருத்திட்டத்துக்கான வெள்ளிப்பதக்க விருதையும் வென்றுள்ளது. KIU பல்கலைக்கழகத்தின் செயலாளர், மூலோபாய சர்வதேச கூட்டிணைவின் பிரதானி நிஷானி ரொட்ரிகோ 80 நாடுகளைச் சேர்ந்த சுமார் 12,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரிகளில் ஆகச் சிறந்த 4% விண்ணப்பதாரிகளின் குழுவில் சேர்க்கப்பட்டு Global Recognition விருதை வென்றுள்ளார். சிறந்த சர்வதேசக் கல்வி கூட்டிணைவின் உயர் சிறப்பு, தாபன ரீதியான நிர்வாகம் மற்றும் கண்ணியமான ஆட்சேர்ப்பு செயன்முறைகள் ஆகியவற்றில் வெளிப்படுத்திய சிறந்த திறன்களுக்காகவே அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அவரின் தலைமையில்  KIU பல்கலைக்கழகமும் அதன் இணை நிறுவனங்களும் ஜப்பான், அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், கனடா, நியூசிலாந்து, ஜேர்மனி, சவுதி அறேபியா, குவைட் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் கூட்டிணையை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. அவர் ஆற்றியுள்ள காத்திரமான சேவையினை பாராட்டி, ஐக்கிய இராச்சியத்திலிருந்து வெளிவரும் Business Insider இல் அவரை பற்றிய கட்டுரையொன்றும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கல்விப் பொறுப்புகளை தாண்டி சர்வதேச பல்கலைக்கழகமாக  KIU பல்கலைக்கழகம் ஆற்றி வரும் ஆகச் சிறந்த பணியினையே இச் சகல வெற்றிகளும் பிரதிபலிக்கின்றது. சர்வதேச உறவுகளில் முன்னிலையிலுள்ள KIU பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க முடிகின்றமை இந் நாட்டு மாணவர்களுக்கு பெரும் வாய்ப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close