August 17, 2025
புதிய அனுபவ மையம் (Senaro Experience Lounge) மற்றும் Click 150 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி Senaro 22வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
செய்தி

புதிய அனுபவ மையம் (Senaro Experience Lounge) மற்றும் Click 150 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி Senaro 22வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

Mar 3, 2025

இலங்கையில் மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்வதிலும் சந்தைப்படுத்துவதிலும் வெற்றிகரமான நிறுவனமான செனாரோ மோட்டார் கம்பெனி (பிரைவேட்) லிமிடெட், அதன் 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது. Senaro Experience Lounge திறப்பு விழாவும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செனாரோ Click 150 ஸ்கூட்டரின் அறிமுகமும் இதனுடன் இணைந்தே நிகழ்ந்தன. இரண்டு நிகழ்வுகளும் யூனியன் பிளேஸில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன் இலங்கை வங்கியின் தலைவர் கவிந்த டி சில்வா உட்பட பல சிறப்பு விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

2003 ஆம் ஆண்டில் மோட்டார் சைக்கிள் இறக்குமதி நிறுவனமாகத் தொடங்கிய செனாரோ, தற்போது பல்வேறு வகையான வாகன மாடல்களை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதேவேளை பல வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை தயாரித்தும்  போருத்தியும் வருகிறது. இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உற்பத்தி மற்றும் பொருத்தல் உரிமத்தைப் பெற்றதே அவர்கள் சமீபத்தில் அடைந்த குறிப்பிடத்தக்க சாதனையாகும். தொழில்துறை அமைச்சகத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைக்கு (SOP) இணங்க செயல்படும் உரிமத்தைப் பெற்றுள்ளமை உள்ளூர் உற்பத்தித் துறையின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் அவர்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

நிறுவனத்தின் உதிரிப்பாக பொருத்தல் வியாபாரம் செனாரோ ஜிஎன் 125 மோட்டார் சைக்கிளை தொருத்தும் செயற்பாட்டுடன் ஆரம்பமானது. இது மிகக் குறுகிய காலத்தில் நுகர்வோரின் வரவேற்பைப் பெற்றதுடன் தற்போது அதிகம் விற்பனையாகும் தயாரிப்பாகவும் உள்ளது. செனாரோ என்பது 100% இலங்கை நாமமாகும். இது பல சர்வதேச தயாரிப்புக்களுடன் வெற்றிகரமாக போட்டியிடுகிறது. வேகமாக வளர்ந்து வரும் ஸ்கூட்டர் சந்தையில் செனாரோ clock 150 ஸ்கூட்டர் ஒரு வலுவான போட்டியாளராக மாறுவது உறுதி. செனாரோ அனுபவ மையத்தைப் பார்வையிடும் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் பிற நன்மைகள் பற்றிய அனைத்து தகவல்களையும் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை பொருத்தும் போது செனாரோ நிறுவனம் குறைந்தது 30% உள்ளூர் மதிப்பைச் சேர்க்கிறது. இந்த நிறுவனம் பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, இலங்கை பணியாளர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்கிறது. எதிர்காலத்தில் ஏற்றுமதி சந்தையில் நுழைய திட்டமிட்டுள்ள செனாரோ, இலங்கையின் பொறியியல் சிறப்பை உலகளவில் வெளிப்படுத்தவும், ஏற்றுமதி வணிகங்கள் மூலம் நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவும் தயாராகிவருகிறது.

4 Comments

  • Hiya! I know this is kinda off topic however I’d figured I’d ask. Would you be interested in trading links or maybe guest writing a blog post or vice-versa? My site addresses a lot of the same topics as yours and I believe we could greatly benefit from each other. If you’re interested feel free to send me an e-mail. I look forward to hearing from you! Awesome blog by the way!

  • Merely wanna input on few general things, The website pattern is perfect, the subject matter is really great. “The way you treat yourself sets the standard for others.” by Sonya Friedman.

  • Thank you for sharing excellent informations. Your web site is very cool. I’m impressed by the details that you?¦ve on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched everywhere and just couldn’t come across. What a perfect site.

  • WONDERFUL Post.thanks for share..more wait .. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close