August 17, 2025
Kho Kho உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை Kho Khoஅணிக்கு Ceylon Sapphire Miningநிறுவனம் அனுசரணை
செய்தி

Kho Kho உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை Kho Khoஅணிக்கு Ceylon Sapphire Miningநிறுவனம் அனுசரணை

Mar 2, 2025

இந்தியாவில் நடைபெற்ற Kho Kho உலகக் கிண்ண போட்டித் தொடரில் பங்கேற்ற இலங்கை Kho Kho அணிக்கு Ceylon Sapphire Mining தனியார் நிறுவனம் அனுசரணை வழங்கியுள்ளது. இலங்கை அணிக்கான பிரதான அனுசரணையை இந்திய Kho Kho சம்மேளனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி போட்டித் தொடர் இந்திய தலைநகர் புதுடில்லி நகரில் அமைந்துள்ள இந்திரா காந்தி உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆர்ஜென்டினா, ஐக்கிய இராச்சியம், ஜேர்மனி, நெதர்லாந்து, போலந்து, அமெரிக்கா, பிரேசில், பேரு, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கானா, கென்யா, தென் ஆபிரிக்கா, இந்தியா, வங்காளதேசம், பூட்டான், இந்தோனிசியா, ஈரான், மலேசியா, நேபாளம், உகண்டா, தென் கொரியா, இலங்கை உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த அணிகள் இதில் பங்கேற்றன.

ஐக்கிய இராச்சியத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 111 புள்ளிகளை பெற்றதோடு ஐக்கிய இராச்சியம் வெறும் 22 புள்ளிகளையே பெற்றது. இரண்டாவது போட்டியில் இலங்கை அணி 91 புள்ளிகளை பெற்ற நிலையில் தென் கொரியா 22 புள்ளிகளை பெற்றது. மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 105 புள்ளிகளையும் போலந்து அணி 40 புள்ளிகளையும் பெற்றது. அசாத்தியமான இந்த திறமைகளின் வெளிப்பாடாக இலங்கை அணி C பிரிவில் முதலிடத்தை பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியதோடு அப் போட்டியில் இலங்கை அணி இந்தியாவுடன் கடுமையாக போட்டியிட்டது. இலங்கை மகளிர் அணி 04 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றது. இலங்கை Kho Kho சம்மேளனத்தின் செயலாளர் அத்துல விஜேநாயக்க Kho Kho மற்றும் Beach Kho Kho விளையாட்டை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் பல ஆண்டுகளாக பெரும் பங்காற்றியுள்ளார். உலகக் கிண்ண Kho Kho போட்டித் தொடரில் பங்கெடுத்த இலங்கை அணியின் முகாமையாளராக பணியாற்றிய Ceylon Sapphire Mining நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ பிரியந்த பொன்சேகா இலங்கை Kho Kho சம்மேளனத்தின் உப தலைவருமாவார். இச் சம்மேளனத்தின் உப தலைவர்களான லெப்ரினன்ட் கொமாண்டர் சந்திரலால் நாணாயக்கார, தயானந்த நவரத்ன மற்றும் பொருளாளர் புத்திக பத்திராஜ ஆகியோர் இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றனர். Ceylon Sapphire Mining நிறுவனத்தின் பணிப்பாளர் மேஜர் அருண குமாரகேவும் பெரும் சேவையாற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close