August 17, 2025
Vegolicious உயர் புரோட்டீன் நூடில்ஸ் மற்றும் குக்கீஸ் சந்தைக்கு அறிமுகம்
செய்தி

Vegolicious உயர் புரோட்டீன் நூடில்ஸ் மற்றும் குக்கீஸ் சந்தைக்கு அறிமுகம்

Mar 2, 2025

தாவர உணவுகளை அடிப்படையாக கொண்ட இலங்கையின் முதலாவது புரோட்டீன் உணவு உற்பத்தியாளரான Vegolicious உயர் புரோட்டீன் பல்வகை தானிய நூடில்ஸ் மற்றும் உயர் புரோட்டீன் பல்வகை தானிய குகீஸ் எனும் பெயர்களில் புத்தம் புதிய உற்பத்திகளை சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. போசாக்கு, சுவை மற்றும் நிலைத்தன்மையை முதன்மை கொள்கையாக கொண்டு செயற்படும் இந் நிறுவனம் சமவலு போசாக்கை தரும் சுவையும் ஆரோக்கியமும் கொண்ட மாற்று உணவுகளை உற்பத்தி செய்கிறது. பல்வகை தானிய நூடில்ஸ் சாதாரண நூடிலுசுக்கு பதிலாக உண்ணக்கூடிய புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகளை அதிகமாக கொண்ட சிறந்த பதிலீடாகும். பரந்தளவிலான ஆய்வுகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயறு வகைகள், அவரையினங்கள் மற்றும் தானிய வகைகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ள மேற்படி 100 கிறாம் நூடில்சில் 17.8 கிறாம் புரோட்டீனும் 5 கிறாம் நார்ச்சத்துகளும் அடங்கியுள்ளன. இந்த நூடில்ஸ் உண்பதன் மூலம் அத்தியாவசிய போசாக்கு தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். உற்சாகமான வாழ்க்கைமுறையை கொண்ட ஆரோக்கிய உணவை பெற விரும்பும் எவருக்கும் இந்த நூடில்ஸ் மிகவும் உகந்ததாகும்.

பல்வகை தானிய சொக்கலட் சிப் குக்கீஸ் கொக்கோவா, சொக்கலட் சிப்ஸ் மற்றும் புரோட்டீன்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பழுத்த வாழை, ஓட்ஸ், தாவரங்களை அடிப்படையாக கொண்ட புரோட்டீன்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ள பல்வகை தானிய பனானா ஓட்ஸ் குக்கீஸ் சீனியற்ற போசாக்கு மிக்க மேலதிக உணவாகும். இயற்கை பாணி சுவையுடைய மேலதிக உணவுகளை விரும்புவோருக்கு பல்வகை தானிய பேரீச்சம்பழ குக்கீஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஒட்சிசன் ஏற்றிகளை உள்ளடக்கிய இந்த உற்பத்திகள் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. தமது உற்பத்தி வகைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வரும்  Vegolicious நிறுவனம் வருங்காலத்தில் Vegolicious பெஸ்டா, Vegolicious பப்படம், Vegolicious பல்வகை தானிய கஜு மற்றும் நிலக்கடலை குக்கீஸ் போன்ற ஏராளமான உற்பத்திகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச தர நியமங்களுக்கேற்ப உற்பத்திகளின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இந் நிறுவனத்தின் நோக்கம் சுவைக்கு பாதிப்பேற்படுத்தாத வகையில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான உணவுகளை சந்தைக்கு வழங்குவதாகும். அனுபவமிக்க உணவு நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த உணவுகளை உற்பத்தி செய்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close