August 17, 2025
2024 SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சன்ஷைன் விற்பனை நிபுணர்கள்
செய்தி

2024 SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெற்ற சன்ஷைன் விற்பனை நிபுணர்கள்

Feb 27, 2025

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற புகழ்பெற்ற SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனை நிபுணர்கள் 14 பேர் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றனர். இதில், அவர்கள் “ஆண்டின் சிறந்த பிராந்திய முகாமையாளர்” விருது உட்பட 3 தங்க விருதுகள், 6 வெள்ளி விருதுகள் மற்றும் 5 வெண்கல விருதுகளைப் பெற்று சாதனை படைத்தனர். இந்த வெற்றிகள், சன்ஷைன் குழுமம் தனது குழுவினரின் திறன்களை மேம்படுத்துவதற்கும் சிறந்த நெகிழ்வு தன்மையை ஊக்குவிப்பதற்கும் வழங்கும் அர்ப்பணிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

இந்த வெற்றிகள் Sunshine Consumer Lanka மற்றும் Sunshine Healthcare Lankaவின் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஹெல்த்கார்ட் ஃபார்மசி மற்றும் விநியோகப் பிரிவுகள் உள்ளிட்ட விற்பனை குழுக்களால் பெறப்பட்டுள்ளன. சவால்மிக்க சந்தை நிலைமைகளின் கீழ் அவர்களின் விதிவிலக்கான திறன்கள் நிறுவனம் பல வெற்றிகளை கைப்பற்றுவதற்கு தூண்டுதலாக அமைந்தன. சன்சைன் ஹோல்டிங்சின் சந்தைப்படுத்தல் படையணியின் தனிப்பட்ட திறமைகள் மற்றும் கூட்டு வலிமையை இந்த அங்கீகாரங்கள் வெளிப்படுத்துகின்றன.  நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் நுகர்வோர் மைய அணுகுமுறையின் முதுகெலும்பாக இவை உள்ளன.

இந்த வெற்றிகள் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “2024 SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் கிடைத்த விருதுகள், சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் விசேட திறன்கள் மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும், இந்த ஒவ்வொரு விருதும், எங்கள் விற்பனை நிபுணர்களின் கடின உழைப்பு, புத்தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, சிறந்த மற்றும் தொடர் அபிவிருத்தி கலாசாரத்தை வளர்க்கும் பணிகள் சன்ஷைனில் இடம்பெறுகிறது. பகிரப்பட்டுள்ள எமது வெற்றிக்கு வழிவகுத்த எமது குழுவினரின் பங்களிப்பு குறித்து நான் மிகவும் பெருமைப்படுகின்றேன்.”

Healthguard Distributionஇன் சிரேஷ்ட Modern Trade முகாமையாளர் உதுல் கருணாரத்ன, “ஆண்டின் சிறந்த பிராந்திய முகாமையாளர்” என்ற வகையில் தங்கப் பதக்கம் வென்றமை இந்த விருது வழங்கும் நிகழ்வில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த விருதைத் தவிர, “ஹெல்த்கெயார் துறையில் ஆண்டின் சிறந்த பிராந்திய முகாமையாளர்” என்ற வகையில் மற்றொரு தங்கப் பதக்கத்தையும் வென்றார். மேலும், ஹெல்த்கார்ட் ஃபார்மசியின் விற்பனை முகாமையாளர் இசுரு மதுஷங்க மற்றும் Healthguard Distributionஇன் விற்பனை நிறைவேற்று அதிகாரி மேரியன் லோரன்ஸ் ஆகியோர் தமக்குரிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஆண்டுதோறும் நடத்தும் தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வு என்பது, இலங்கையின் அனைத்து வணிகத் துறைகளிலும் உள்ள விற்பனை நிபுணர்களின் வெற்றியை மதிப்பீடு செய்யும் முக்கியமான விருது வழங்கும் நிகழ்வாகும். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெறும், இந்த விருது வழங்கும் நிகழ்வில் பல்வேறு தொழில்துறைகளில் சிறந்த விளங்கும் விற்பனை நிபுணர்கள் அங்கீகரிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வு தெற்காசியாவின் சிறந்த விற்பனை விருது வழங்கும் நிகழ்வாக, சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப விற்பனை நிபுணர்களால் அங்கீகரித்து மதிப்பீடு செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு SLIM தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் அடைந்த வெற்றியானது, இலங்கை வணிக உலகில் முன்னேற்றமடையவும் புதிய தரங்களை தயாரிக்கும் வகையிலும் தமது குழுவினரை ஊக்குவிப்பதற்கென நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close