August 17, 2025
Booking.com இணையதளத்தில் 9.6 உயர் தரப்படுத்தலை பெற்றுள்ள Yala Yakkaduru
செய்தி

Booking.com இணையதளத்தில் 9.6 உயர் தரப்படுத்தலை பெற்றுள்ள Yala Yakkaduru

Feb 25, 2025

யால தேசிய வனப்பூங்காவின் எல்லையில் அமைந்துள்ள, நிலைபேறான அபிவிருத்திக்கு சிறந்த உதாரணமாக திகழும் யக்கதுரு யால சபாரி முகாம் 2025 ஆம் ஆண்டில் booking.com ஊடாக சுற்றுலா மீளாய்வின் மூலம் 9.6 உயர் தரப்படுத்தல் மட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை பல நாடுகளைச் சேர்ந்த 30,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முகாம் வளாகம் கிராமத்துச் சேனைப் பயிர்ச்செய்கை காணிக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. யக்கதுரு நிலைபேறான அபிவிருத்தி மற்றும் நிலைபேறான சுற்றுலாக் கைத்தொழில் துறையை தமது தொனிப்பொருளாக கொண்டு இயங்கி வருகிறது. முழுமையாக சூரிய ஒளியிலான மின்சாரத்தில் செயற்படும் யக்கதுரு முகாம் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் மீளப் பயிரிடும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. விருந்தினர்களுக்கு சொகுசான தங்குமிட வசதிகளை வழங்குவதற்கு உகந்த வெப்பத்தை பேணுவதற்கென வடிவமைக்கப்பட்ட களி மண்ணிலான சுவர்களும் பனை இலையிலான கூரையும் கண் கவர் தோற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Booking.com இணையதளத்தின் ஊடாக எளிதில் தங்குமிடங்களையும் சபாரிகளையும் ஒதுக்கி கொள்வதற்கான வசதி செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அனுபவமும் திறமையும் கொண்ட சபாரி சாரதிகளினதும் சூழல் ஆர்வலர்களினதும் வழிகாட்டுதலின் கீழ் வன விலங்குகள் மற்றும் இயற்கைச் சூழல் தொடர்பாக மேலான அறிவையும் அனுபவத்தையும் சுற்றுலா பயணிகளுக்கு பெற்றுக்கொள்ள முடியும். பாரம்பரிய சேனைப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை பார்வையிடுவதோடு அடர்ந்த காடுகளில் நடமாடி தகவல்களை ஆய்வு செய்யவும், கடற்கரையில் பொழுதை கழிப்பதற்கும் யக்கதுரு வசதி செய்து கொடுக்கின்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க புராதன இடங்களுக்கு அழைத்துச் செல்வது இன்னுமொரு பயன்மிக்க அனுபவமாகும். யக்கதுருவில் இரவுப் பொழுதை மேலும் இனிமையாக அனுபவிப்பதற்கு வசதியாக குளர்ச்சியான சூழலில் சுவையான உள்நாட்டு உணவுகளோடு பாரம்பரிய நாட்டிய, நடனங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. உள்ளூர் மக்களுடன் பரஸ்பர புரிதலுடன் நிலைபேறான சுற்றுலாக் கைத்தொழிலை பேணுவதோடு இயற்கைச் சூழலை பாதுகாத்து சுதேச அடையாளமும் சம்பிரதாயமும் கலந்த விருந்தோம்பலை வழங்குகின்றமையே யக்கதுருவின் வெற்றியின் இரகசியமாகும். இலங்கையின் செழுமையான தன்னிறைவு அடையாளங்கள், சம்பிரதாயபூர்வ மற்றும் இயற்கை எழிலை கலந்து விருந்தினர்களுக்கு இனிமையான பல அனுபவங்களை பரிசளிப்பதற்கு யக்கதுரு நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close