February 23, 2025
தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்
செய்தி

தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆண்டுக்கு பாடசாலைக் கொப்பிகளையும் உபகரணங்களையும் வழங்கியுள்ள மெல்வா நிறுவனம்

Feb 4, 2025

இலங்கையின் முதல் தர உறுக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம் அண்மையில் தமது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அப்பியாசக் கொப்பிகளையும் பாடசாலை உபகரணங்களையும் பகிர்ந்தளித்துள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி கருதி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஊழியர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் அதனை உறுதிப்படுத்துவதற்கு மெல்வா நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு இதன் மூலம் மீண்டுமொருமுறை நிரூபணமாகியுள்ளது. ஒவ்வொரு வருட முடிவிலும் செயற்படுத்தப்படுகின்ற இத் திட்டத்தின் மூலம் ஏராளமான பாடசாலை மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

தமது நிறுவன ரீதியான சமூகக் கடமையை செவ்வனே புரிந்து கொண்டு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் மெல்வா நிறுவனம் அதன் ஊழியர்களினது மாத்திரமின்றி நாடெங்கிலும் வசிக்கும் பல்வேறு சமூகக் குழுவினரினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி வருகிறது. குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் அளிக்கும் திட்டம் அதில் முக்கியமானதாகும். கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் அத் திட்டத்தின் அனுகூலங்களை பெற்று உயர் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 3,000 விடவும் அதிகமாகும். புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் நிறைவு பெறும் வரைக்கும் பூரண நிதி அனுசரணை வழங்கப்படுகிறது. தற்பொழுது சுமார் 300 பேர் இத் திட்டத்தில் பயனடைகின்றனர். வறுமை புலமைப்பரிசில் பெறுநர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடை இல்லை என்பதை உறுதிப்படுத்தும் மெல்வா நிறுவனம் அவர்களின் இதர கல்வித் தேவைகளுக்கும் உதவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close