February 23, 2025
மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை
செய்தி

மூன்றாவது ஆண்டில் கால்பதிக்கும் Coca-Cola – Clean Ocean Force உடனான கூட்டாண்மை

Jan 31, 2025

Coca-Cola நிறுவனம், Clean Ocean Force உடன் இணைந்து ‘Adopt a Beach’ திட்டத்திற்காக தங்களது கூட்டாண்மையை ஜனவரி 30ஆம் திகதி மூன்றாவது ஆண்டிற்கு மேலும் நீட்டித்துள்ளது. இந்த முன்னோடி கூட்டாண்மை இலங்கையின் கடற்கரையோரத்தை பாதுகாக்கும் முயற்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. Clean Ocean Force இன் தலைவர் மற்றும் நிறுவனர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் Coca-Cola இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பணிப்பாளர் கௌஷாலி குசுமபால ஆகியோரின் முன்னிலையில் இந்த விசேட நிகழ்வு கொண்டாடப்பட்டது.

கொழும்பு-15 இல் அமைந்துள்ள Crow Island Beach Park இல் நடைபெற்ற இந்த கூட்டாண்மையானது, சுத்தம் செய்தல் மற்றும் மறுசுழற்சி திட்டங்கள் மூலம் கடல் மாசுபாட்டை எதிர்த்துப் போராடுகிறது. மேலும், ‘Adopt a Beach’ திட்டமானது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாக்க, நிலைத்தன்மையை ஊக்குவிக்க மற்றும் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த சமூகங்களை ஒன்றிணைக்கிறது. இது கடலின் அழகை மீட்டெடுப்பதிலும், உலகளாவிய இயக்கத்தை ஊக்குவிப்பதிலும் கூட்டு நடவடிக்கையின் வலிமையை வெளிப்படுத்துகிறது. அத்துடன், தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பங்களிப்பின் தாக்கத்தை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close