இலங்கையில் உண்ணக்கூடிய இஞ்சிப் பாணை (ஜிஞ்சர்பிரெட்) இந்தநத்தார் பண்டிகைக் காலத்தில் காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் முதன் முதலாக அறிமுகம் செய்கிறது டெய்ன்டீ
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயர்தர மிட்டாய்களுக்குப் பெயர் பெற்ற வர்த்தக நாமமான டெய்ன்டீ, இந்த பண்டிகைக் காலத்தில் தனது தனித்துவமான அனுபவத்தின் வாயிலாக குழந்தைகளையும் அவர்களது மற்றும் குடும்பங்களையும் ஆச்சரியப்படுத்தவும் மகிழ்ச்சியடையச் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன்முறையாக காலிமுகத்திடல் வணிக வளாகத்தில் ஆரம்பிக்கவுள்ள தனது ஜிஞ்சர்பிரெட் உணவகத்துக்கு வருகை தருமாறு குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் டெய்ன்டீ அன்புடன் அழைப்பு விடுக்கின்றது.
சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் டெய்ன்டீ, “நாளைய உலகிற்கு சிறந்த குழந்தைகளை தயார்படுத்தும் ” அற்புதமான பணியில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உயரதரமான தின்பண்ட சந்தையில் டெய்ன்டீ நம்பகமான வர்த்தக நாமமாக தன்னை நிலைநாட்டிக் கொண்டுள்ளது.
ஜிஞ்சர்பிரெட் என்பது டெய்ன்டீயின் ஏனைய தயாரிப்புகளான ஜூஜூப்ஸ், சீவீஸ், எக்லெயர்ஸ் மற்றும் ஹார்ட்ஸ் சொக்கலேட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான தயாரிப்புகளின் வரிசையில் இணைந்துள்ள ஒரு அசாதாரண உருவாக்கம் ஆகும். இந்த ஜிஞ்சர்பிரெட் உணவகத்தில் பரிமாறப்படும் தின்பண்டங்கள் குழந்தைகளை குதூகலிக்கச் செய்வதுடன் அவர்களுக்கான வேடிக்கை, உற்சாகம் மற்றும் உத்வேகம் நிறைந்த சூழலில் பண்டிகைக் கால மாயாஜால அனுபவத்தையும் பெற்றுத் தருகின்றது.
ஜிஞ்சர்பிரெட் உணவகம் முழுவதும் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரத்தை உறுதி செய்வதில் டெய்ன்டீ நிறுவனம் மேலதிக அக்கறை எடுத்துள்ளது. அனைத்து வருகையாளர்களுக்கும் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான சூழலை உறுதிசெய்யும் வகையில், இலங்கையின் பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) சங்கத்தினால் முழு செயற்பாடுகளும் கண்காணிக்கப்பட்டு வழிநடத்தப்படும். குழந்தைகள் இனிமையான சூழலில் சுவையான உணவுகளை ரசித்துச் சுவைக்கும் அதே வேளை, அவர்களின் படைப்பாற்றலை ஆராய்வதற்கும் புதுமைகளைத் தூண்டுவதற்கும் தளமொன்றை வழங்குவதற்கான ஏற்பாட்டையும் டெய்ன்டீ செய்யவுள்ளது.
“குழந்தைகளுக்கு அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அனுபவமொன்றை வழங்குவதன முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம், அதே சமயம் அவர்கள் தங்களுக்கு தரப்பட்டுள்ள எல்லைகளுக்கு அப்பால் சிந்திக்கவும், அதன் மூலம் உத்வேகம் பெறவும் ஊக்குவிக்கிறோம். கைமுறையாக உற்பத்தி செய்யப்படும் எங்கள் மிட்டாய்களைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் கைவினைத்திறனை ஆதரிப்பதில் டெய்ன்டீ பின்பற்ற வேண்டிய அர்ப்பணிப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்று டெய்ன்டீயின் வர்த்தக இலச்சினை வல்லுநர் திரு. தில்ஷன் பள்ளியகுருகே கூறினார்.
"குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதில் டெய்ன்டீ எப்போதும் அக்கறை காட்டி வருகின்றது. இந்த ஜிஞ்சர்பிரெட் ஹவுஸ் அந்த பணிக்கு ஒரு மேலதிக சான்றாகும். இலங்கையின் சிறந்த தின்பண்டங்களைக் காட்சிப்படுத்தும்போது, குடும்பங்களை ஒன்றிணைக்கும் வகையில் படைப்பாற்றல், மகிழ்ச்சி மற்றும் புதுமைகளை வளர்ப்பதே எங்கள் குறிக்கோள்" என சன்ஷைன் கன்ஸ்யூமர் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி (CMO) திருமதி கவி ராஜபக்ஷ தேசப்பிரிய தெரிவித்தார்.
Daintee Gingerbread House நிகழ்வு 2024 டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை L1, One Galle Face Mall, Bera Lake நுழைவாயிலில் நடைபெறும். இந்த மாயாஜால, வேடிக்கை நிறைந்த நிகழ்வை அனுபவிக்கவும், அதன் மூலம் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் நத்தார் பண்டிகையைக் கொண்டாடவும், இலங்கை முழுவதும் உள்ள குடும்பங்களுக்கு டெய்ன்டீ அழைப்பிதழ் விடுக்கின்றது.
25 ஆண்டுகளுக்கு முன்பு அதன் எளிமையான தொடக்கத்தில் இருந்து, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் நுகர்வோர் பிரிவு இப்போது நாட்டின் FMCG துறையில் முன்னணி வர்த்தக ஜாம்பவான்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. கடின வேகவைத்த மிட்டாய் வகையின் துணைப்பிரிவுத் தலைமையுடன், நாட்டின் மிகப்பெரிய வர்த்தக தேயிலை நிறுவனத்தை உள்ளடக்கிய இந்தத் துறையின் ஆண்டு வருமானம் 19 பில்லியன் ரூபாவாகும். மூன்று பிரசித்தம் பெற்ற தேயிலை வர்த்தக நாமங்களான Zesta, Watawala மற்றும் Ran Kahata ஆகியவை அந்தந்த பிரிவுகளில் சிறப்பாக விற்பனையாகின்றன. அதே சமயம் சமீபத்தில் கையகப்படுத்தப்பட்ட டெய்ன்டீ லிமிடெட்டின் டெய்ன்டீ (டோ ஃபிகள் மற்றும் சொகோஸ்), மைலேடி மிட்டாய்கள் மற்றும் எக்ஸ்ட்ரா லொசன்ஜ்கள் மற்றும் பபிள்கம்கள்) உள்ளிட்ட 75+ தயாரிப்புகள் இந்த நிறுவனத்தின் ஆதிக்கத்தில் உள்ளன. நாட்டில் புழக்கத்திலுள்ள மிகவும் பிரபலமான சில மிட்டாய் வகைகளில், டேன்டீயின் 90% க்கும் அதிகமான ஊடுருவல் உள்ளது. ஷன்ஷைன் குழுமத்தால் 2022 இல் முழுமையாகக் கையகப்படுத்தப்பட்டசன்ஷைன் டீ (பிரைவேட்) லிமிடெட், சன்ஷைன் ஹோல்டிங்ஸின் ஏற்றுமதிப் பிரிவாகச் சேவையாற்றுகிறது. இந்த தயாரிப்பு “சிலோன் தேயிலையின் சிறந்த ஏற்றுமதியாளர்களின்” தரவரிசையில் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றது. இந்த நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட சிறந்த தேயிலை வகைகளை ஏற்றுமதி செய்கிறது, இதில் Zesta ,AvanTea, Gordon Frazer Teazup ஆகிய பெயர் பெற்ற தயாரிப்புகள் உள்ளடங்கும். 40 க்கும் அதிகமான வெளிநாடுகளுக்கு தனது தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்த நிறுவனம் பெருமளவு அந்நிய செலாவணியை சம்பாதித்து வருகின்றது.