December 23, 2024
“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான பயன்பாடு தொடர்பான தயாரிப்புக்களில் கவனம் செலுத்துகிறது”
செய்தி

“மிச்செலின், அதிக மதிப்புள்ள கட்டுமான பயன்பாடு தொடர்பான தயாரிப்புக்களில் கவனம் செலுத்துகிறது”

Dec 10, 2024

இதன்படி, Michelin நிறுவனம் இலங்கையில் bias டயர்கள் மற்றும் டிராக்குகளை உற்பத்தி செய்யும் இரண்டு தொழிற்சாலைகளை தொழில்துறையில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளரான CEAT குழுமத்திற்கு விற்பதாக அறிவித்துள்ளது. அதே நேரத்தில், 3 ஆண்டு உரிமக் காலத்தின் முடிவில், உற்பத்தி வசதிகளுக்கு மேலதிகமாக, குழுவானது Michelinஇன் பிரபலமான வர்த்தக நாமமான Camsoவின் உரிமையாளராகும் வாய்ப்பு உள்ளது. பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உயர் செயல்திறன் மற்றும் உற்பத்தி வசதிகளின் தரம் ஆகியவை இந்த கொடுக்கல் வாங்கல்களின் வெற்றிக்கு முக்கியமானவை. அதனால்தான், இந்த கொடுக்கல் வாங்களில் தனது உறுப்பினர்களின் வேலைப் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்திய Michelin, CEAT உடன் முழு உடன்பாட்டிற்கு வருவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், நிறுவனம் தனது தயாரிப்புகளை உலகெங்கிலும் உள்ள Michelin வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை நிறுவனங்களின் ஒப்புதல்களின்படி செய்யப்பட்டுள்ளன.

இந்த கொடுக்கல் வாங்கலில், Michelin மற்றும் CEATஇன் அனைத்து ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் நட்பு பரிமாற்றத்தைக் குறிக்க உறுதிபூண்டுள்ளனர்.

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் கட்டுமான சந்தைக்கான Michelinஇன் அர்ப்பணிப்பு தொடர்கிறது

தற்போது, Radial டயர்கள், Solid டயர்கள் மற்றும் கட்டுமானம் தொடர்பான தயாரிப்புகளுக்கான Assemblieகள் போன்ற உயர் மதிப்புள்ள தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது, மேலும் Compact Line bias டயர்கள் மற்றும் மேம்பட்ட டிராக்குகளின் உற்பத்தியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.

ஆனால் இலங்கையில் தனது ஏனைய அனைத்து தயாரிப்புகளையும் தொடர எண்ணியுள்ள Michelin, தனது தொழிலுக்கு இலங்கையின் தனித்துவத்தை வலியுறுத்தி தனது தொழிற்சாலைகளின் வினைத்திறனை அதிகரிப்பதுடன் உற்பத்தி வசதிகளை நவீனப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

கொடுக்ககல் வாங்கல்களில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகளின் உறுப்பினர்கள் அனைவரும் நட்பு பரிமாற்றத்தின் கீழ் CEAT இன் உறுப்பினர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

இந்த கொடுக்கல் வாங்கலில் கையளிக்கப்படும் இரண்டு தொழிற்சாலைகளில் உறுப்பினர்களுக்கு வேலை இழப்பு ஏற்படாது என்று Michelin நிறுவனம் தெரிவிக்கிறது.

தற்போது மிதிகம டயர் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் Casting உற்பத்தி பிரிவில் பணியாற்றும் உறுப்பினர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளை வழங்கும் 1,587 பணியாளர்கள் குழுவில் பணியமர்த்தப்படுவார்கள் மேலும் அவர்கள் இந்த கொடுக்கல் வாங்கலுடன் Michelin நிறுவனத்தால் CEATக்கு ஒப்படைக்கப்படுவார்கள். Michelin தனது வணிகக் குழுக்களின் போட்டித்தன்மைக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சிறப்பு கவனம்

Michelin, வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான தனது சேவைகளை தொடர்ந்து செயல்படுத்த CEATக்கு அதிகாரத்தை வழங்குகிறது, மேலும் CEAT அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த Michelin Beyond Road Business Line இன் சிரேஷ்ட துணைத் தலைவர் திரு. Nour Bouhassoun, “குழுவின் நிலையான வளர்ச்சி மூலோபாயத்திற்கு ஏற்ப, அதிக மதிப்புள்ள கட்டுமானப் பொருட்களில் கவனம் செலுத்தும் Michelin, Bias டயர் மற்றும் டிராக் தொழிற்சாலைகளை தொடர்ந்து இயக்குவதற்கான வாய்ப்பை CEATக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இங்கே, அந்த நிறுவனங்களில் பணிபுரியும் எமது ஊழியர்கள் அனைவரையும் நட்பு பரிமாற்றம் மூலம் CEATஇடம் ஒப்படைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு தொடர்ச்சியான சேவையை உறுதி செய்வதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.’’ என தெரிவித்தார்.

இங்கு கருத்து தெரிவித்த CEATஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. Arnab Banerjee, “எங்கள் டயர் வணிகத்தின் வெற்றிக்கு சிறந்த பொருத்தமாக இருக்கும் Camso வர்த்தக நாமத்துடன் எங்களது இலாபத்தை அதிகரிக்கவும் வாய்ப்புக்கள் அதிகமுள்ளது. இங்கு நாம் சாதித்துள்ள மிக முக்கியமான விஷயம், திறன்களைக் கொண்ட சரியான பணியாளர்கள். மேலும், பிரத்தியேக வாடிக்கையாளர் சமூகம் மற்றும் விநியோகஸ்தர்களும் இங்கு மிகவும் முக்கியமானவர்கள். தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தடங்கள் துறையில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. எனவே, CEAT மற்றும் Camso வர்த்தக நாமங்களுக்கு இடையே அதிக அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் மூலம், இந்தத் தொழிற்சாலைகள் பெரிதும் பயனடையும் என்று நாங்கள் நம்புகிறோம். ‘’ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *