இலங்கையில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற பாடங்களை போதிப்பதில் உச்சத்தைத் தொடும்AIBS
Asian Institute of Business & Science (AIBS) ஆனது 2018ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதாகும். எளிமையான முறையில் தொடங்கப்பட்டு உயர்கல்வித் துறையில் மகோன்னத நிலையை எட்டிய நிறுவனமாக அது ஆறாண்டு கால சிறப்பான பயணத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. 2022ஆம் ஆண்டு ஐக்கிய இராஜ்ஜியத்தின் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழக இணை நிறுவனமாக கைகோர்த்து, நாடுகளின் எல்லை கடந்த உலகத் தரம் வாய்ந்த கல்வி சாம்ராஜ்யத்தில் பின்னிப் பிணைந்த AIBS, சமகாலத்தில் 600 இற்கு மேற்பட்ட பயிலுனர்களுக்காக 14 உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து 21 கற்கைநெறிகளையும், பாட நிகழ்ச்சிகளையும் முன்னெடுத்து வருகிறது.
கார்டியன் தரப்படுத்தலில் எட்ஜ்-ஹில் பல்கலைக்கழகம் 35ஆவது இடத்தில் உள்ளது. இதன் இணை துணைவேந்தர் பேராசிரியர் ஜோர்ஜ் டெல்பொட் தகவல் தருகையில், எட்ஜ்-ஹில் பல்கலைக்கழகமானது 2022ஆம் ஆண்டின் நவீன பல்கலைக்கழகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்றார். ‘நாம் STEM (விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆங்கில, கணித பாட) கல்வி போதனையில் சிறப்பான நிலையை எட்டியுள்ளோம்;. அதற்கான அங்கீகாரமும் உள்ளது. நாம் AIBS உடன் கைகோர்த்ததால், இலங்கை மாணவர்களுக்கு, குறிப்பாக உயிரியல் விஞ்ஞானத்துறையில், இணையில்லா கல்வி அனுபவங்களை வழங்குவதற்கு வழிபிறந்து உள்ளது. AIBS உடனான பங்குடையானது சர்வதேச பட்டங்கள் கோரும் உயர்ந்த நியமங்களை எட்டக்கூடிய பாடவிதானங்களின் கீழ் கல்வி போதித்து, ஆற்றல் அபிவிருத்தி வழங்கி, ஆய்வு உதவிகளையும் தங்கு தடையின்றி பெற்றுக் கொடுக்க வழிவகுத்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பட்டப் பின்படிப்பு திட்டங்களுடன் சேர்ந்து சுற்றாடல் விஞ்ஞானம், உணவு விவசாயம் மற்றும் தொழில்நுட்பம், உயிரியல் விஞ்ஞானம், வணிக பகுப்பாய்வு, இணைவெளி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற பாடங்களை உள்ளடக்கியவாறு நாம் பட்டப் பின்படிப்பு கற்கைநெறிகளை முன்னெடுக்கும் வகையில் கற்பிப்பத்தலை விஸ்தரிக்க திட்டமிட்டு வருகிறோம்’ என்று அவர் கூறினார்.
விஞ்ஞானத்தை மையப்படுத்திய நிறுவனமொன்றை ஸ்தாபித்தல் என்ற தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட AIBS ஆனது, உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியலில் சிறப்பு தேர்ச்சி பெறக்கூடியதாக பிரயோக விஞ்ஞானங்கள் சார்ந்த Pearson BTEC உயர் தேசிய டிப்ளோமா பாடநெறிகளை நடத்தும் அங்கீகாரம் பெற்றதொரு உயர் கல்வி நிறுவனமாக பயணத்தைத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, வணிகம், சந்தைப்படுத்தல், கணக்கியல் மற்றும் நிதியியல், கணினி மற்றும் மென்பொருள் பொறியியல் அடங்கலாக ஐந்து சிறப்புத் தேர்ச்சிகளுடன் கூடிய வணிகமும் கணினியியலும் என்ற பாடம் சேர்க்கப்பட்டது. இந்த வெற்றியின் அடித்தளத்தில், எட்ஜ்-ஹில் பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து, உயரியல் மருத்துவ விஞ்ஞானம், உயிர்த் தொழில்நுட்பம், மரபணுவியல், சர்வதேச வர்த்தகம், கணினி மற்றும் மென்பொருள் பொறியியல் துறைகள் சார்ந்த பட்டப்படிப்பு கற்கைநெறிகளை நடத்த AIBS நடவடிக்கை எடுத்தது.
ஆண்டு நிறைவு வைபவத்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் மூலோபாய பங்காளிகள் மத்தியில் உரையாற்றிய AIBS இன் ஸ்தாபகரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ஹிரான் டி சில்வா, ‘இலங்கையில் கல்வியைப் பொறுத்தவரையில், நாம் முதன்மைத் தெரிவாக இருக்கிறோம்,’ என்று தெரிவித்தார். ‘2019ஆம் ஆண்டு தொடக்கம் எல்லை கடந்த கல்விவெளி நோக்கி விஸ்தரிப்பது பற்றி பார்வை செலுத்தியிருந்தோம். பல்கலைக்கழக கல்விக்கு முந்திய மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கு பிந்திய கல்வித் தகைமைகளை வழங்கும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் Pearson Education, எட்ஜ்ஹில் பல்கலைக்கழகம், Rosedale Global High School> NCC Education ஆகியவற்றுடனான எமது பங்காளித்துவத்தின் மூலம் இதனை செய்தோம். நாம் இலங்கையில் ஒன்டாரியோ இரண்டாம் நிலை பாடசாலை டிப்ளோமா கற்கை நெறியை நடத்தினோம். கொவிட் பெருந்தொற்றின் சீர்கேடுகளைத் தாண்டிச் செல்லும் வகையில், உயர் கல்வியில் சர்வதேச அடிப்படை டிப்ளோமாவையும், விஞ்ஞானம், வணிகம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகியவை சார்ந்து ஓராண்டு கால அவுஸ்திரேலிய அடிப்படை கற்கை நெறிகளையும் நடத்தினோம்.’
AIBS அடைந்த மைல் கற்களை திரு.சில்வா விபரித்துப் பேசினார். இலங்கையில் மூன்றாம் மட்டத்திலான NCC பட்டதாரிகளை உருவாக்குவதில் அந்நிறுவனம் முதலாம் இடத்தில் உள்ளதுடன், இந்தப் பிராந்தியத்தில் பல்கலைக்கழகத்திற்கு முநதிய கல்விக்கான தராதரங்களை வகுத்துள்ளது எனவும் அவர் கூறினார். ‘கனடாவின் ஒன்டாரியோ கல்வியமைச்சு அங்கீகரித்துள்ள பெறுமதி வாய்ந்த ஒன்டாரியோ இரண்டாம் நிலை பாடசாலை டிப்ளோமாவை (OSSD) அறிமுகப்படுத்துவதற்காக Rosedale Global International நிறுவனத்துடன் ஏற்படுத்திய பங்காளித்துவத்தின் மூலம் வருடந்தோறும் நிறுவனம் நூறு OSSD பட்டதாரிகளை உருவாக்குகிறது.’
தனது மாணவர்கள் வகுப்பறையில் கற்ற பாடங்களை நடைமுறை உலகிற்கு கொண்டு செல்லும் வகையில், AIBS ஆனது Gene Labs Medical, Derana Medical Labs, Institute for Research & Development போன்ற முன்னணி கைத்தொழில் நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
உயிரியல் விஞ்ஞானம், வணிகம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளில் வலுவாக கவனத்தைக் குவித்து, கல்வியில் புதுமையாக்கத்திற்கும் சமூக அபிவிருத்திக்கும் பங்களிப்பு நல்கும் AIBS ஆனது, உலகத் தரம் வாய்ந்த கல்வியால் மாணவர்களை வலுவூட்டி, துடிப்பான அனைத்துலக வெளியில் தலைவர்களாகவும், புதுமை படைப்பவர்களாகவும் மாற தயார்ப்படுத்துகிறது.