இவென்ட் மெக்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம் முறை கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி மார்ச் 15, 16 மற்றும் 17 திகதிகளில்
இலங்கை கட்டுமானத் துறையின் முதன்மை வர்த்தக கண்காட்சியான கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி மார்ச் மாதம் 15,16, மற்றும் 17 ஆகிய திகதிகளில் கொழும்பு BMICH வளாகத்தில் நடைபெறவுள்ளதோடு இம் முறை அதன் பூரண ஏற்பாட்டு பணிகளை இவென்ட் மெக்ஸ் நிறுவனம் மேற்கொள்கின்றது. வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதில் 19 ஆண்டு கால நீண்ட நெடிய அனுபவத்தை கொண்டுள்ள புகழ்மிக்க நிறுவனமான இவென்ட் மெக்ஸ் நிறுவனம் இம் முறை கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சியை 100 இற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்களையும் விற்பனைக் கூடங்களையும் கொண்டதொரு கோலாகல நிகழ்வாக ஏற்பாடு செய்கின்றது. கன்ஸ்ட்ரக்சன் எக்ஸ்போ கண்காட்சி யாழ்ப்பாணம், காலி மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ள அதேவேளை, அவற்றின் ஏற்பாட்டு பணிகளையும் இவென்ட் மெக்ஸ் நிறுவனமே மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கண்காட்சிகள், வைபவங்கள் மற்றும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் மற்றும் நெறியாள்கை, பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தல், ஊடக சந்திப்புகளை நடாத்துதல், கலந்துரையாடல்கள், நிகழ்ச்சிகள் மற்றும் செயலமர்வுகளை ஏற்பாடு செய்தல் போன்ற பல்வேறு சேவைகளை இவென்ட் மெக்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. ”இலங்கையில் இவென்ட் மெனேஜ்மென்ட் துறையில் முதல்வனாவதே எமது பிரதான இலக்காகும். பல்வேறு வர்த்தக நிகழ்வுகளின் போது சில இவென்ட் மெனேஜ்மென்ட் நிறுவனங்கள் நியாயமான முறையில் சேவைகளை வழங்குவதில்லை என்பதை நாம் கண்டிருக்கின்றோம். அந் நிலைமையினை மாற்றி வர்த்தகர் மற்றும் வாடிக்கையாளர் ஆகிய இரு தரப்புக்கும் மேம்பட்ட சேவையினை வழங்குதல், சர்வதேச மட்டத்திலான விழுமியங்கள் மற்றும் புதிய அம்சங்களை இவென்ட் மெனேஜ்மென்ட் துறைக்கு கொண்டு வருவதே எமது எதிர்பார்ப்பாகும். சிறிய, பெரிய எந்தவொரு தொழில்முயற்சியோ அல்லது அமைப்போ சகலருக்கும் எமது சேவையினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளதோடு அப் பணியை அர்ப்பணிப்புடனும் உயர் பெறுபேறுகளை அடையும் வகையிலும் மேற்கொள்வதை எமது கடமையாக கருதி செயற்படுகின்றோம்,” என இவென்ட் மெக்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு பிரசாத் பெரேரா தெரிவித்தார்.