
Phoenix Industries நிறுவனத்திடமிருந்து 2024 ஆம் ஆண்டுக்கு புதிய உற்பத்திகள் அறிமுகம்
இலங்கையின் முன்னணி தளபாட வர்த்தகநாமமான Phoenix Industries நிறுவனம் 2024 ஆம் ஆண்டுக்கான தமது புதிய உற்பத்திகளை பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி பத்தரமுல்ல காட்சியறையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்றாட பாவனைக்கு தேவையான, உயர் தரத்திலான நவீன வடிவமைப்புகளுடன் கூடிய மேற்படி உற்பத்திகள் பலதரப்பட்ட உற்பத்திகளை கொண்டவை ஆகும்.
நவீன வாழ்க்கை முறைக்கு தேவையான கதிரைகள், கொள்கலன்கள் மற்றும் இதர 10 தளபாடங்கள் மேற்படி உற்பத்திகளில் அடங்கும். Duo Chair – சொகுசு அனுபவத்தை உறுதிப்படுத்தும் பலகையினாலும் உலோகத்தினாலும் உற்பத்தி செய்யப்பட்ட மாற்றக்கூடியதும் சுற்றக்கூடியதுமான கால்களை கொண்ட குசன் செய்யப்பட்ட கதிரைகள், Breeze Chair – ஓய்வாக அமரக்கூடிய சௌகரியமான கதிரைகள், Hola Chair – நகரவாசிகளுக்கான நவீன சாதாரண கதிரைகள், POP Stool – எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் உகந்த பல்வகை பயனுடைய குடிமனை அல்லது திறந்த வெளி சிறிய மேசைகள், OLI Kids Chair – குட்டீஸ்களுக்கான அழகிய வர்ணக் கதிரைகள், WAVE Drawers – சக்கரத்துடன் கூடிய அல்லது சக்கரமற்ற, மடிக்கக்கூடிய லாச்சிகள் (இழுப்பறை) (03 அளவுகளில்) New 40L & 100L Storage Boxes – பெறுமதியான பொருட்களை பாதுகாப்பாக வைக்கக்கூடிய, அப்புறப்படுத்தக்கூடிய தகடுடன் கூடிய லாச்சிகள், Button L – மேம்படுத்தப்பட்ட கொள்ளளவுடன் கூடிய சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆடை சலவைக் கூடைகள், COCO Basket – பலவற்றை இடக்கூடிய கூடைகள், Little Monsoon – ஐந்து லீற்றர் கொள்ளளவுடன் கூடிய வீட்டுத் தோட்டத்துக்கு பயன்படக்கூடிய நீரூற்றும் வாளிகள் ஆகியவையே மேற்படி புதிய உற்பத்திகளாகும். சௌகரியமான வாழ்க்கை முறைக்காக Phoenix நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள மேற்படி உற்பத்திகள் சிறந்த செயற்பாட்டையும் அழகியலையும் பிரதிபலிக்கக்கூடியவை ஆகும். மேற்படி அத்தனை உற்பத்திகளையும் இணைய வழி ஊடாகவும் வெலிசர, பாணந்துறை மற்றும் பத்தரமுல்ல காட்சியறைகளிலும் கொள்வனவு செய்ய முடியும். மகத்தான தரம் மற்றும் நவீன வடிவமைப்புகளிலான மேற்படி உற்பத்திகள் இலங்கை தளபாடக் கலையில் புதிய அனுபவத்தை தரக்கூடியது. shop.phoenix.lk ஊடாகவும் மேற்படி உற்பத்திகளை பார்வையிட முடியும்.