காலி கடற்கரையில் ‘Bring Your Best Cake’கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தும் Yazu at the Beach
காலி, திங்கட்கிழமை, நவம்பர் 16, 2026: கடற்கரையோரத்தில் உங்களுக்குப் விருப்பமான கேக்கை சுவைத்துக் கொண்டே கொண்டாட முடியாது என்று யார் சொன்னது? இந்த நவம்பர் மாதத்தில், கேக் பிரியர்கள் தென்னிலங்கையை நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு சுவையான காரணத்தை ‘யாசு அட் த பீச்’ (Yazu at the Beach) வழங்குகிறது. இதற்கமைய, 2026 நவம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை காலி ரொடிசன் புளூ ரிசார்ட்டில் (Radisson Blu Resort, Galle) ‘Bring Your Best Cake’ எனும் உற்சாகமான கடற்கரைக் கொண்டாட்டம் நடைபெறவுள்ளது.
வழக்கமான கேக் வெட்டும் நிகழ்வுகளைப் போலல்லாமல், இம்முறை விருந்தினர்கள் தங்களுக்கு மிகவும் விருப்பமான கேக்குகளைத் தங்களுடன் எடுத்து வந்து, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு யாசு அழைப்பு விடுக்கிறது. அது வீட்டிலேயே தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, குடும்பத்தினரின் விருப்பத்திற்குரியதாக இருந்தாலும் சரி அல்லது பேக்கரியில் வாங்கப்பட்ட சிறப்பான கேக்காக இருந்தாலும் சரி, ஒவ்வொரு கேக்கிற்கும் தனித்துவமான அங்கீகாரமும் பாராட்டும் இங்கே காத்திருக்கிறது. இனிப்பான தருணங்கள், இதமான கடற்காற்று மற்றும் நட்புகளுடன் கழியும் ஒரு மறக்க முடியாத மாலைப்பொழுதாக இது அமையும்.
இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வரம்பற்ற சிற்றுண்டிகள், தேநீர் மற்றும் கோப்பி என்பன வழங்கப்படுவதுடன், நேரடி கேக் தயாரிப்பு (Live cake mixing), கடற்கரையோர DJ இசை மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை தெரிவு செய்யப்பட்ட பானங்களுக்கு ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்ற விசேட சலுகையும் வழங்கப்படவுள்ளது. ஒருவருக்கு 1,500 இலங்கை ரூபா என்ற நுழைவுச்சீட்டு விலையில், வாழ்க்கையின் இனிமையான பக்கத்தை ‘யாசு’ பாணியில் கொண்டாடுவதற்கான ஓர் அரிய வாய்ப்பாக இது அமைகிறது. ஆனால், இந்த நிகழ்வு வெறும் கேக் மற்றும் இனிப்புகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை.
இந்த ஆண்டின் முற்பகுதியில் இலங்கையில் காலடி பதித்ததிலிருந்து, காலியின் உணவு மற்றும் வாழ்வியல் கலாச்சாரத்திற்கு ‘யாசு அட் தி பீச்’ தனக்கென ஒரு தனித்துவமான சுவையைச் சேர்த்து வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற பான்-ஏசியன் விருந்தோம்பல் நாமத்தின் முதலாவது சர்வதேசக் கிளையாகத் தென் கடற்கரையில் தடம் பதித்துள்ள யாசு, புதுமையான உணவு வகைகள், துடிப்பான பொழுதுபோக்கு மற்றும் சமூக ஒன்றுகூடல் அனுபவங்களின் தனித்துவமான கலவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜப்பானிய பாணியிலான உணவுகள் மற்றும் கான்டோனீஸ் (Cantonese) சுவையுணவுகள் முதல், புதுமையான பானங்கள் மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட விருந்துபசாரங்கள் வரை, ‘உணவகம் என்பது வெறுமனே உணவருந்துவதற்கான இடம் மட்டுமல்ல’ என்ற புதிய சிந்தனையை யாசு முன்னிறுத்துகிறது. உணவு, இசை மற்றும் மக்களை ஒன்றிணைத்து, வழக்கமான இரவு நேரக் கொண்டாட்டங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய அனுபவத்தை இது வழங்குகிறது.
‘பிரிங் யுவர் பெஸ்ட் கேக்’ நிகழ்வும் அந்தத் தத்துவத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகும். எளிமையானதொரு மகிழ்ச்சியை அனைவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு சிறப்பான தருணமாக இது மாற்றுகிறது. இயல்பான, சற்று வித்தியாசமான இந்த நிகழ்வு, கடற்கரையையே கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றி மக்களை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான புதுமையான நிகழ்வுகளின் ஊடாக, உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் காலியின் சமூக மற்றும் பொழுதுபோக்குச் சூழலைப் புதிய கோணத்தில் கண்டறிவதற்கான வாய்ப்புகளை யாசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
இந்நிகழ்விற்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. விருந்தினர்கள் +94 70 748 6486 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் தமது இடங்களை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில், யாசுவைப் பொறுத்தவரை கேக் சுவைக்கும் ஒரு சாதாரண பிற்பகல் கூட, கொஞ்சம் கூடுதல் சுவையுடனும் சிறப்பம்சத்துடனும் இருக்க வேண்டும்.

