‘மெல்வா சவால் கிண்ணம் 2026’கிரிக்கெட் போட்டித் தொடரின் இரத்தினபுரி மாவட்ட சாம்பியன் கிண்ணத்தை வென்ற சன்னஸ்கம ஹார்ட்வெயார்
மெல்வா குழுமத்தினால் நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மெல்வா சவால் கிண்ணம் 2026’ கிரிக்கெட் போட்டித் தொடரின் இரத்தினபுரி மாவட்ட சாம்பியன் பட்டத்தை சன்னஸ்கம ஹார்ட்வேர் அணி கைப்பற்றியுள்ளது. எம்பிலிப்பிட்டிய மகாவலி விளையாட்டரங்கில் நடைபெற்ற இத்தொடரின் இரண்டாம் இடத்தை டி.என்.ஆர். பலாங்கொடை அணி பெற்றுக்கொண்டது. இலங்கையின் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் வல்லுநர்களிடையே நல்லுறவு, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இத்தொடரில் 10 அணிகள் பங்கேற்றிருந்தன. இந்த அணிகளின் வீரர்களில் பெரும்பாலானோர் மேசன் தொழிலாளர்கள் (கொத்தனார்கள்), ஒட்டுநர்கள் (வெல்டர்ஸ்) மற்றும் வன்பொருள் (Hardware) வர்த்தகத் துறைப் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொடரில் யசோதா ஹார்ட்வேர் பலாங்கொடை, டி.என்.ஆர். பலாங்கொடை, சன்னஸ்கம ஹார்ட்வேர், சிட்டி எலக்ட்ரிக் ஹார்ட்வேர், ஃபேஸ் செரமிக் ஹார்ட்வேர், விக்ரம ஹார்ட்வேர், எம்பிலிப்பிட்டிய ஸ்டோர்ஸ், சென்ட்ரல் ஹார்ட்வேர், ஃபிரூஸ் ஹார்ட்வேர் பலாங்கொடை மற்றும் சந்தன ஹோல்டிங் ஆகிய அணிகள் இணைந்திருந்தன. பல விறுவிறுப்பான போட்டிகளுக்குப் பிறகு, சிறந்த குழு உணர்வு, அர்ப்பணிப்பு மற்றும் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய சன்னஸ்கம ஹார்ட்வேர் அணி இரத்தினபுரி மாவட்ட சாம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. இதன்படி, மாவட்ட சாம்பியன்கள் பங்கேற்கும், கொழும்பில் நடைபெறவுள்ள மெல்வா சவால் கிண்ணம் 2026 இறுதிப் போட்டித் தொடருக்குத் தகுதி பெற அந்த அணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மெல்வா குழுமம் முன்னெடுக்கும் இந்த நாடளாவிய கிரிக்கெட் தொடரானது, நாட்டின் கட்டுமானத் துறையின் முன்னேற்றத்திற்காக விசேட பங்களிப்பை வழங்கும் தொழில் வல்லுநர்களைப் பாராட்டுவதுடன், அவர்களிடையேயான தொழில் ரீதியான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். நாட்டின் பல மாவட்டங்களை உள்ளடக்கியதாக நடைபெறும் இத்தொடரின் மூலம், பல்வேறு பிரதேசங்களில் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தமது கிரிக்கெட் திறமைகளை வெளிப்படுத்தவும், விளையாட்டின் ஊடாக பரஸ்பர நட்புறவை வளர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்யும் கட்டுமானத் துறை வல்லுநர்களை ஒன்றிணைத்து, அவர்களின் தொழில் வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட நல்லுறவையும் ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் பாரம்பரியத்தைக் கட்டியெழுப்ப மெல்வா குழுமம் இத்திட்டத்தின் ஊடாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

