November 8, 2026
சொத்து விற்பனைத் துறையில் ஐரோப்பாவின் பிரபல்யமான இலங்கை நிறுவனமாக Calin Popular Awards 2026விருதை வென்றுள்ள Lighthouse நிறுவனம்
செய்தி

சொத்து விற்பனைத் துறையில் ஐரோப்பாவின் பிரபல்யமான இலங்கை நிறுவனமாக Calin Popular Awards 2026விருதை வென்றுள்ள Lighthouse நிறுவனம்

Nov 7, 2026

ஐரோப்பாவில் வசிக்கும் இலங்கைச் சமூகத்தினர் மத்தியில் தமது சேவைகளை விரிவுபடுத்தி வரும் Lighthouse நிறுவனம், Calin Popular Awards 2026 விருது விழாவில், ஐரோப்பாவின் மிகவும் பிரபல்யமான இலங்கை சொத்துச் சேவை வழங்குநர் என்ற விருதை வென்றுள்ளது. இந்த அங்கீகாரமானது,  நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. Lighthouse நிறுவனரும் பணிப்பாளருமான தினேஷ் பத்திரகே மற்றும் இணை நிறுவனர் கலாநிதி மார்கோ ரகுவி ஆகியோரால் நிறுவப்பட்ட இந்நிறுவனம், சொந்த வீடு வாங்க விரும்பும் மக்களுக்கு, சொத்து வாங்கும் செயல்முறையைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

தான் சொந்த வீடு வாங்கும்போது ஏற்பட்ட அனுபவமே Lighthouse  என்ற நிறுவனத்தை தொடங்குவதற்கு அடிப்படையாக அமைந்ததாக அதன் நிறுவனர் தினேஷ் பத்திரகே தெரிவித்துள்ளார். “நான் முதன்முதலில் வீடு வாங்க முடிவு செய்தபோது, அந்த செயல்முறை பற்றி எனக்குத் தெளிவான புரிதல் இருக்கவில்லை. நான் சந்தித்த சிரமங்கள், இதே போன்ற பிரச்சனைகளை வேறு பலரும் எதிர்கொள்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது. அந்த நேரத்தில் எனக்கு தேவையாக இருந்த வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் பிறருக்கு வழங்குவதற்கே நான் இந்த நிறுவனத்தை தொடங்கினேன்,” என அவர் மேலும் தெரிவித்தார். இத்தாலியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட Lighthouse, பின்னர் தனது செயல்பாடுகளைப் பல நகரங்களுக்கு விரிவுபடுத்தியது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் தற்போது ரோம் நகரில் அமைந்துள்ளது, மேலும் மிலான், வெரோனா, புளோரன்ஸ் மற்றும் லூக்கா ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இத்தாலியின் நாபொலி அல்லது நேபிள்ஸ் நகரில் ஒரு புதிய கிளையை திறக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. நிறுவனத்தின் வளர்ச்சியில் வாடிக்கையாளர் நம்பிக்கையும் வெளிப்படைத்தன்மையும் முக்கியக் காரணிகளாக இருந்துள்ளன என்று பத்திரகே வலியுறுத்தினார். நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளை அளிப்பதும், தொடர்ந்து நம்பகமான சேவையை வழங்குவதுமே Lighthouse இன் முன்னுரிமைகள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “எங்களால் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நாங்கள் அளிப்பதில்லை. நம்பிக்கைதான் எங்கள் வணிகத்தின் மிக முக்கியமான அடித்தளம். அது வாடிக்கையாளர்களுடன் நீண்டகால உறவுகளைக் கட்டியெழுப்ப எங்களுக்கு உதவியுள்ளது,” என்று அவர் கூறினார். நிறுவனம் மேலும் வளரும்போது, திறமையான குழுவை உருவாக்குதல் மற்றும் உள்ளகச் செயல்முறைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில், அமைப்புகளை மேம்படுத்தவும், மாறிவரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவையை வழங்கவும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இத்தாலிக்கு அப்பால் தனது சேவைகளை விரிவுபடுத்துவதையும், ஐரோப்பா முழுவதும் தனது இருப்பை நிலைநாட்டுவதையும் Lighthouse நோக்கமாகக் கொண்டுள்ளது. பிற சர்வதேச சந்தைகளில் வாய்ப்புகளை ஆராயவும், இந்த விரிவாக்கத்திற்கு ஆதரவளிக்கக்கூடிய நீண்டகால முதலீட்டாளர்களை ஈர்க்கவும் நிறுவனம் முயல்கிறது. ஐரோப்பாவில் தனது ரியல் எஸ்டேட் சேவைகள் வலையமைப்பை விரிவுபடுத்தி வரும் Lighthouse இற்கு, Calin Popular Awards 2026 விருதுகள் மற்றொரு முக்கியமான அங்கீகாரமாகும். மேலும் தகவலுக்கு, +390598770693 என்ற இலக்கத்தில் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close