November 2, 2026
கொழும்பு நகரம் இதுவரை கண்டிராத முற்றிலும் வேறுபட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகிறது
செய்தி

கொழும்பு நகரம் இதுவரை கண்டிராத முற்றிலும் வேறுபட்ட கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகிறது

Nov 2, 2026

இலங்கையின் கிறிஸ்மஸ் பண்டிகைக்கால கொண்டாட்டங்களுக்கு ஒரு புதிய சர்வதேச பரிமாணத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் அவுஸ்திரேலியாவின் ‘ஒன்ஸ் அபான் எ கிறிஸ்மஸ் – தி கிரேட்டஸ்ட் எக்ஸ்மாஸ் ஷோ’ (Once Upon a Christmas – The Greatest Xmas Show) என்ற பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி எதிர்வரும் டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.

சீலோ என்டர்பிரைசஸ் (Ceilao Enterprises) நிறுவனம் இந்த உலகத்தரம் வாய்ந்த கலை நிகழ்ச்சியை இலங்கைக்குக் கொண்டு வருகிறது. உள்ளூர் ரசிகர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த சர்வதேச பொழுதுபோக்கு அனுபவங்களை அறிமுகப்படுத்துவதில் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது காட்டுகிறது. சீலோ என்டர்பிரைசஸ் நிறுவனம் முன்னதாக 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பீட்டர்ஸின் நிகழ்ச்சியை இலங்கையில் வெற்றிகரமாக நடத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, தற்போது நாட்டின் நேரலை பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் நோக்கில், பிரம்மாண்டமான அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் கலை நிகழ்ச்சியை நடத்துவதில் தனது கவனத்தைச் செலுத்தியுள்ளது.

‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ வளாகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த நிகழ்ச்சி உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு, ஏற்பாட்டாளர்கள் தங்களின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்டனர்.

கூகா புரொடக்ஷன்ஸ் (Kooka Productions) மற்றும் ஐக்ரேவ் என்டர்பிரைன்மென்ட் (ICrave Entertainment) ஆகியவற்றின் ஆக்கப்பூர்வமான கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள இந்த நிகழ்ச்சி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற அவுஸ்திரேலிய சர்க்கஸ் கலைஞர்களையும் முழுமையான அவுஸ்திரேலிய தயாரிப்புக் குழுவையும் கொழும்புக்கு அழைத்து வருகிறது. கண்கவர் சர்க்கஸ் கலைகள், விறுவிறுப்பான நிகழ்ச்சிகள் மற்றும் கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சியின் மாயாஜாலம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, அனைத்து வயதுடைய பார்வையாளர்களையும் கவரும் வகையில் அமையும். திறந்தவெளியில் விண்மீன்களின் கீழ் அமைந்திருக்கும் இதற்கான அரங்கம் பண்டிகைக்கால அழகை மேலும் கூட்டுவதோடு, இலங்கையர்களுக்கு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமலேயே சர்வதேச தரத்திலான சர்க்கஸ் பொழுதுபோக்கை அனுபவிக்கும் அரிய வாய்ப்பையும் வழங்குகிறது.

சீலோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்த நிகழ்ச்சி வெறும் பருவகால பொழுதுபோக்கு நிகழ்வு மட்டுமே அல்ல. மாறாக, தனித்துவமான சர்வதேச தயாரிப்புகளை இலங்கைக்குக் கொண்டுவந்து, உள்ளூர் மக்களுக்குப் பிரம்மாண்டமான அனுபவங்களை எளிதில் கிடைக்கச் செய்யும் அவர்களின் பரந்த தொலைநோக்குப் பார்வையையே இது பிரதிபலிக்கிறது.

இது குறித்து சீலோ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மஞ்சுள குலதுங்க கருத்து தெரிவிக்கையில், “அவுஸ்திரேலிய சர்க்கஸ் இசைத் தயாரிப்பான இந்த நிகழ்ச்சியை முதன்முறையாக இலங்கைக்குக் கொண்டு வருவது ஒரு கனவு நனவான தருணமாகும். கொழும்பு மற்றும் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் வரும் குடும்பங்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யாமல் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் கண்கவர் சர்க்கஸ் காட்சிகளை அனுபவிக்கக்கூடிய உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கை எங்களது வாசற்படிக்கே கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். இந்த நிகழ்ச்சி கொழும்பின் இரவு நேர வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என்றும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் உண்மையிலேயே சிறப்புமிக்க அனுபவத்தை வழங்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி டிக்கெட் விற்பனை தொடங்கும் போது உங்கள் டிக்கெட்டுகளை பதிவு செய்ய தயாராக இருங்கள்.” என்று தெரிவித்தார்.

கலை நிகழ்ச்சிகளைத் தாண்டி, நேரலை பொழுதுபோக்கு மற்றும் பிரீமியம் உணவு அனுபவங்களைச் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸில் ஒருங்கிணைத்து, குடும்பங்கள், நண்பர்கள்,வெளிநாட்டவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சிறந்த பண்டிகைக் கால இரவை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. மேலும், இதில் கூடுதல் சிறப்புச் சலுகை ஒன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.  20,000 ரூபாவிற்கும் அதிகமான மதிப்புள்ள டிக்கெட்டுகளை வாங்கும் விருந்தினர்கள், ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ வளாகத்தில் உள்ள சிறந்த உணவுகளைச் சுவைப்பதற்காக 5,000 ரூபா மதிப்புள்ள முழுமையாகப் பயன்படுத்தக்கூடிய உணவு மற்றும் பான வவுச்சரைப் பெறுவார்கள்.

அத்துடன், வழக்கமான ஆண்டின் இறுதி களியாட்டங்களுக்குப் பதிலாகப் புதிதாக எதையாவது செய்யத் திட்டமிடும் பெரு நிறுவனங்களுக்கு, தங்களின் ஆண்டின் சாதனைகளைக் கொண்டாடவும், குழுக்களைக் கௌரவிக்கவும், வாடிக்கையாளர்களை உபசரிக்கவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த மாற்று வழியை வழங்குகிறது. குறைந்தபட்சம் 20 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நிறுவனங்களுக்குச் சிறப்பு அட்டவணை அமைப்புகளும், முன்கூட்டிய உணவு உபசரிப்பு ஏற்பாடுகளும், தேவைக்கேற்ப மாற்றியமைக்கக்கூடிய விருந்தோம்பல் தொகுப்புகளும் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சியின் உத்தியோகபூர்வ விருந்தோம்பல் பங்காளியாக ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ்’ திகழ்கிறது. கொழும்பின் முன்னணி வாழ்க்கைமுறை மையங்களில் ஒன்றான இங்கு, பிரீமியம் விருந்தோம்பலும் சர்வதேச பொழுதுபோக்கும் ஒன்றுசேர்கின்றன. இது குறித்து சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் ரிசார்ட்ஸின் கொழும்பு ஹோட்டல்களின் சிரேஷ்ட துணைத் தலைவரும், சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் சின்னமன் லைஃப் நிறுவனத்தின் பொது முகாமையாளருமான கமல் முனிசங்க கூறுகையில், “கிறிஸ்மஸ் என்பது மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு காலமாகும். சர்வதேச பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பலை ஒருங்கிணைக்கும் ஒரு சிறப்பான அனுபவத்தின் மூலம் இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடும் நல்ல வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. இந்தத் நிகழ்ச்சியின் விருந்தோம்பல் பங்காளியாக இருப்பதிலும், குடும்பங்கள் மற்றும் பார்வையாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பான ஒன்றை அனுபவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுடன் பண்டிகைக் காலத்தைக் கொண்டாட பார்வையாளர்களை வரவேற்கவும், கொழும்பின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சூழலை அவர்களுக்கு வழங்கவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்று கூறினார்.

சர்வதேச கலைஞர்கள், நேரலை நிகழ்ச்சிகள் மற்றும் பிரீமியம் விருந்தோம்பல் ஆகியவற்றின் கலவையுடன், கொழும்பு நகரைத் தனித்துவமான பொழுதுபோக்கு மையமாக மாற்றும் முயற்சியை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. மேலும், இலங்கையின் சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் நிகழ்வு மேலாண்மை துறைகளுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் கொழும்பு நகரில் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவதற்கான ஒரு சிறந்த வழியையும் இது அமைத்துக் கொடுக்கிறது.

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் வேளையில், இந்த பிரம்மாண்ட நேரலை நிகழ்ச்சியின் மாயாஜாலத்தைப் பகிர்ந்து கொள்ளவும், மறக்க முடியாத நினைவுகளை உருவாக்கவும் Once Upon a Christmas உங்களை அன்போடு அழைக்கின்றது.

இதன் டிக்கெட் விற்பனை 2026 நவம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close