October 5, 2026
இசை, நீர் விளையாட்டுக்களுடன் பாணந்துறையை அதிரவைக்க வரும் ‘Sprite Heat Down Festival’
செய்தி

இசை, நீர் விளையாட்டுக்களுடன் பாணந்துறையை அதிரவைக்க வரும் ‘Sprite Heat Down Festival’

Oct 5, 2026

கோடை வெப்பத்தைத் தணித்து, மக்களுக்கு அளப்பரிய உற்சாகத்தை வழங்கும் வகையில் ‘ஸ்ப்ரைட்’ (Sprite) நிறுவனம் வழங்கும் ‘ஹீட் டவுன் திருவிழா’ (Heat Down Festival) எதிர்வரும் செப்டம்பர் 11 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் பாணந்துறை கடற்கரை பூங்காவில் நடைபெறவுள்ளது.

கடற்கரைச் சூழலில் அமைந்த இந்த உற்சாகக் கொண்டாட்டத்தில் நீர் சார்ந்த விளையாட்டுக்கள், சுவாரஸ்யமான பொழுதுபோக்கு மற்றும் இசை நிகழ்ச்சிகள் எனப் பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன. இதில் கலந்துகொள்ளும் அதிஷ்டசாலிகளான எட்டு பேருக்கு மறக்க முடியாத ஹெலிகாப்டர் சவாரி அனுபவமும் வழங்கப்படவுள்ளது.

அதேபோல, மாலை வேளையில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ரவி, யூக்கி, உமாரியா, ரவி ரோயஸ்டர், அமெலியா மற்றும் யாகா க்ரூ ஆகியோரின் நேரலை இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

‘ஸ்ப்ரைட்’ வழங்கும் இந்த ‘ஹீட் டவுன்’ கொண்டாட்டத்தின் மூலம் பார்வையாளர்கள் மறக்க முடியாத புத்துணர்ச்சி நிறைந்த ஒரு மாலைப் பொழுதை அனுபவிக்கலாம். இலங்கையின் கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில், த்ரில்லான நீர் விளையாட்டுக்கள், துள்ளல் இசை மற்றும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு சிறந்த கொண்டாட்டமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒரு ‘ஸ்ப்ரைட்’ லேபிளைக் கொண்டுவருவதன் மூலம் அனைவரும் இதில் பங்கேற்க முடியும் என்பதுடன், நீர் விளையாட்டுக்களில் நனைந்து மகிழவும், கடற்கரையில் மாலைப் பொழுதைக் கழிக்கவும் உங்களைத் தயார்படுத்திக் கொண்டு வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close