September 2, 2026
சர்வதேச நம்பிக்கை தினமும், மனித நேயத்தைப் பகிரும் TikTok இன் #HopeCore தளமும்
செய்தி

சர்வதேச நம்பிக்கை தினமும், மனித நேயத்தைப் பகிரும் TikTok இன் #HopeCore தளமும்

Sep 2, 2026

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் TikTok தளத்திற்குள் நுழையும் போது, அவர்கள் எதிர்பாராத புதிய விடயங்களை தற்செயலாக பார்ப்பார்கள். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், தங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒருவரின் விசேட தருணங்களையும் சாதனைகளையும் ஆயிரக்கணக்கான முன்பின் அறியாத நபர்கள் பாராட்டி, வாழ்த்துச் செய்திகளைப் பகிர்வதாகும்.

TikTok-இல் மிகவும் பிரபலமடைந்து வரும் #HopeCore சமூகப் பக்கம் இத்தகைய கதைகளையே உள்ளடக்கியுள்ளது. அதில் காணப்படும் தயவு, தளராத முயற்சி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த எளிய தருணங்கள், இந்த உலகில் இன்னமும் நல்ல விடயங்கள் ஏராளமாக எஞ்சியுள்ளன என்பதை மக்களுக்கு நினைவூட்டுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் ‘சர்வதேச நம்பிக்கை தினத்தை’ (UN International Day of Hope) அறிவித்தது. சமூகத்தைப் பலப்படுத்தும், விடாமுயற்சியை ஊக்குவிக்கும் மற்றும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக அனைவரையும் இணைந்து பணியாற்றத் தூண்டும் ஒரு சக்திவாய்ந்த ஆற்றலாகவே ‘நம்பிக்கையை’ ஐ.நா வரைவிலக்கணப்படுத்துகிறது. பலருக்கு இந்நாள் வழக்கம்போலவே கடந்து சென்றாலும், TikTok டிஜிட்டல் தளத்திற்குள் இந்த நம்பிக்கை ஏற்கனவே மிக உயர்ந்த அளவில் ஒலித்துக் கொண்டிருந்தது.

சமூக ஊடகங்கள் பெரும்பாலும் மனநலனில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்கள் காரணமாகக் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. அந்த விவாதங்கள் முக்கியமானது என்றாலும், #HopeCore போன்ற சமூகக் குழுக்கள் டிஜிட்டல் தளங்கள் ஊடாக மக்களை ஊக்குவிக்கும், மகிழ்ச்சிப்படுத்தும் மற்றும் ஒருவரையொருவர் இணைக்கும் ஒரு நேர்மறையான சூழலை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளன.

#HopeCore போன்ற ஆரோக்கியமான சமூகங்கள் தற்செயலாக உருவாகிவிடுவதில்லை. பயனர்களின் மனநலனுக்காக ஒதுக்கப்பட்ட வளங்கள், மனநல வழிகாட்டல்கள், கட்டுப்படுத்தப்பட்ட தேடல் அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தி, ஆரோக்கியமான டிஜிட்டல் அனுபவத்தை உருவாக்க TikTok நிறுவனம் நேரடியாக முதலீடு செய்துள்ளது. அத்துடன் பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான சுமுகமான தொடர்புகளை ஏற்படுத்த சமூக வழிகாட்டுதல்களும் (Community Guidelines) தயாரிக்கப்பட்டுள்ளன.

ஆக்கபூர்வமான திறமை மற்றும் பொழுதுபோக்கிற்கு அப்பால், இந்த முயற்சியானது நேர்மறையான சமூகக் குழுக்கள் சுதந்திரமாக வளர்வதற்குப் பொருத்தமான சூழலை உருவாக்கியுள்ளது.

நம்பிக்கை என்பது எப்போதும் மிக வேகமாகப் பரவக்கூடிய ஒன்றாகும். ஒருவரின் தைரியம் இன்னுமொருவருக்கு ஊக்கமளிக்கிறது. ஒரு நற்செயல் மற்றொரு நற்செயலைச் செய்யத் தூண்டுகிறது. விடாமுயற்சி பற்றிய ஒரு கதை, முயற்சியைக் கைவிடாதிருக்க மற்றொருவருக்கு நினைவூட்டுகிறது.

உங்களுக்குப் பயமோ அல்லது கவலையோ ஏற்பட்டால், நூறு முறை “இல்லை” என்ற பதிலைக் கேட்ட பிறகும், இறுதியில் அனைத்தையும் மாற்றியமைத்த ஒரே ஒரு “ஆம்” என்ற பதிலைப் பெற்ற இளம் தொழிலதிபரின் கதையை நீங்கள் அங்கு காணலாம். அனைத்தையும் கைவிட்டுவிடலாம் என்று தோன்றினால், புற்றுநோயை வென்று குணமடைந்த ஒருவர் மருத்துவமனை மணி அடிப்பதையோ, பல மாத சிகிச்சைக்குப் பின் வெற்றி இலக்கைக் கடப்பதையோ, அல்லது குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவெடுப்பதைக் கொண்டாடுவதையோ பாருங்கள்.

TikTok சத்தமில்லாமல் செய்யும் மாயாஜாலம் இதுதான். வெறும் பொழுதுபோக்கிற்கு அப்பால் சென்று, மில்லியன் கணக்கான மக்கள் ஒருவரையொருவர் கொண்டாடும், கடினமான தருணங்களில் பரஸ்பரம் தோள்கொடுக்கும் மற்றும் மனிதநேயப் பிணைப்பில் இயங்கும் ஒரு சிறந்த சமூகமாக இது மாறியுள்ளது.

சர்வதேச நம்பிக்கை தினம் வருடத்திற்கு ஒருமுறை வரலாம், ஆனால் ‘நம்பிக்கை’ என்ற உணர்வு நாட்காட்டியின் திகதிக்காகக் காத்திருப்பதில்லை. அது மனிதர்கள் தினமும் பகிர்ந்து கொள்ளும் கதைகளிலும், அவற்றை ஒன்றாகக் கொண்டாட இணையும் மில்லியன் கணக்கான இதயங்களிலும் வாழ்கிறது.

எனவே, அடுத்த முறை நீங்கள் TikTok தளத்திற்குள் நுழையும் போது, #HopeCore பக்கத்தைப் பார்வையிடுங்கள். அங்கே முன்பின் தெரியாத ஒருவரின் வெற்றியைக் கண்டு நீங்களும் புன்னகைப்பீர்கள் அல்லது நாம் தேடத் தயாராக இருந்தால், கருணை என்பது இன்னமும் எல்லா இடங்களிலும் நீடிக்கிறது என்பதை நீங்கள் உணர்வீர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close