Vito Wood Fired Pizza இன் புதிய கிளை City of Dreamsஇன் The Shoppesஇல் திறந்துவைப்பு
இலங்கையின் மிகத் துரிமாக வளர்ந்து வரும் உணவகத் துறையில் தனது வர்த்தகநாமத்தின் இருப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், Vito Wood Fired Pizza (www.vitopizza.lk) தனது 6வது கிளையை City of Dreams இன் The Shoppes இல் திறந்துள்ளது. இந்த புதிய கிளையின் திறப்புடன், Vito Pizza உலகப் புகழ்பெற்ற இத்தாலிய விறகு அடுப்பு பீட்சாவை இலங்கையின் முன்னணி சொகுசு ஷாப்பிங், பொழுதுபோக்கு மற்றும் உணவு மையமாகத் திகழுமொரு இடத்திற்குக் கொண்டு வருகிறது. 2017 இல் கண்டியில் இரண்டு ஊழியர்களால் தொடங்கப்பட்ட Vito Wood Fired Pizza, இப்போது நாட்டின் முன்னணி விறகு அடுப்பு பீட்சா உணவக பிராண்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. உள்ளூர் சுவைகளுடன் கூடிய, பாரம்பரிய விறகு அடுப்பு இத்தாலிய மெல்லிய மேலோடு பீட்சாவின் நவீன வடிவத்திற்காக Vito Pizza பிராண்ட் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த புதிய உணவகம் கையால் தயாரிக்கப்பட்ட பீட்சா மாவு, உயர்தர சீஸ்கள், புதிதாக உள்ளூரில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் பாரம்பரிய இத்தாலிய சமையல் முறைகளை வழங்குகிறது. பல்வேறு வகையான பீட்சாகளுடன், மெனுவில் லசான்யா, கால்சோன்கள், பாஸ்தா, ஃப்ரெஷ் சாலடுகள், இனிப்பு வகைகள், மில்க்ஷேக்குகள், மாக்டெயில்கள் மற்றும் பலவிதமான பானங்களும் இங்கு பரிமாறப்படுகின்றன. புதிய கிளையின் திறப்பு விழாவில் பல வாடிக்கையாளர்கள், வணிகப் பங்காளர்கள் மற்றும் அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழாவில், கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வர்த்தகநாமத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த தனது விசுவாசமான வாடிக்கையாளர்கள், அர்ப்பணிப்புள்ள ஊழியர்கள் மற்றும் வணிகப் பங்காளர்களுக்கு Vito Pizza நிர்வாகம் தனது நன்றியைத் தெரிவித்தது. இந்தப் புதிய கிளையின் திறப்புடன், City of Dreams இன் உணவு மற்றும் பான அனுபவம் மேலும் வலுப்படுத்தப்பட்டு, அதன் சொகுசு ஹோட்டல்கள், உலகத் தரம் வாய்ந்த வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் உணவு, பான சேவைகளுக்குப் புதிய மதிப்பைச் சேர்க்கிறது. கண்டி, கொழும்பு, பேராதெனிய, நீர்கொழும்பு, காலி மற்றும் தற்போது City of Dreams என ஆறு கிளைகளுடன், Vito Wood Fired Pizza, உயர்தர உணவு, உண்மையான இத்தாலிய சுவை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் மறக்க முடியாத உணவு மற்றும் பான அனுபவங்களை வழங்கி, இலங்கை முழுவதும் தனது பரவலை மேலும் விரிவுபடுத்தத் தயாராக உள்ளது.

