March 23, 2026
பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு மாற்றாக International Foundation Programme திட்டத்தை அறிமுகப்படுத்தும் IIHS
செய்தி

பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு மாற்றாக International Foundation Programme திட்டத்தை அறிமுகப்படுத்தும் IIHS

Mar 23, 2026

IIHS (International Institute of Health Sciences) நிறுவனம் IIHS International Foundation Programme என்ற பெயரில் புதிய வேலைத்திட்டமொன்றை  அறிமுகப்படுத்தியுள்ளது, இது இலங்கையில் உள்ள பாரம்பரிய உயர்தர (A/L) கல்வி முறைக்கு நவீன மற்றும் முற்போக்கான மாற்றாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் தொழில் வாழ்க்கை குறித்து விஷேட கவனம் செலுத்தப்படுகின்றது. நீண்ட காலமாக, இலங்கையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான பிரதான வழியாக A/L கல்வி முறை காணப்படுகிறது. அது இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான பரீட்சையை மையமாகக் கொண்ட கல்வி முறையொன்றை கொண்டுள்ளதோடு, தனியார் வகுப்புகளுக்கு பெருமளவு தொகையை செலவிட வேண்டிய கடுமையான மன அழுத்தம் மிக்க ஒரு செயன்முறையாகவும் விளங்குகிறது. இதனால், பல மாணவர்களுக்கு தமது பரீட்சை முடிவுகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதபோது மன அழுத்தம், நிச்சயமற்ற தன்மை மற்றும் விரக்தி நிலையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த சவால்களைக் கருத்தில் கொண்டு, IIHS நிறுவனம் International Foundation Programme திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது மாணவர்களுக்கு கல்வி மற்றும் தொழில்சார் துறைகளில் சமநிலையான அடித்தளத்தை உருவாக்குவதற்கான ஒரு பாதையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்தத் திட்டம் மாணவர்களை உயர்கல்விக்குத் தயார்படுத்துவதோடு நின்று விடாமல்,, அவர்களின் நுண்ணறிவு, மன வலிமை மற்றும் தொழில் பாதைகள் குறித்த புரிதலை வளர்ப்பதற்கும் உதவுகிறது.

பல்கலைக்கழகக் கல்வி முறைமைக்கேற்ப வடிவமைக்கப்பட்ட இந்த Foundation திட்டத்தின் மூலம் சுயாதீன ஆய்வுத் திறன்கள், ஆராய்ச்சி முறைகள், விளக்கக்காட்சித் திறன்கள் மற்றும் Project-based Assessment முறைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்ப்பதற்கு IELTS வாசிப்பு, எழுதுதல், கேட்டல் மற்றும் பேசும் திறன்களில் சிறப்புப் பயிற்சியையும் இது வழங்குகிறது. கல்வி மற்றும் அறிவை வளர்ப்பதற்கு மேலதிகமாக, இந்தத் திட்டம் ஆளுமை மேம்பாடு மற்றும் தொழில்களை உருவாக்குவதிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. மாணவர்களின் நம்பிக்கை, தகவல் தொடர்பாடல் ஆற்றல்கள், விமர்சன ரீதியான சிந்தனை, நுண்ணறிவு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தின் கவனிக்கத்தக்க விடயம் யாதெனில் தொடக்கத்திலிருந்தே வழங்கப்படும் தொழில் வழிகாட்டுதலாகும். முதல் ஆறு மாதங்களில் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை அமர்வுகள் மூலம் அவர்களின் திறமைகள், ரசனைகளை அடையாளங் கண்டு, Engineering, Health Sciences, Information Technology, Business and Management மற்றும்  Education போன்ற தொழில் துறைகளைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மேலும் தொழில் துறைகளை அடையாளங் காணும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து நடாத்தப்படும் வழிகாட்டுதல் அமர்வுகள் மூலம் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கு முன்னரே மாணவர்களுக்கு அதன் நேரடி அனுபவத்தை  பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகின்றது. IIHS International Foundation Programme ஒரு பொதுக் கல்வி வேலைத்திட்டமாக மாத்திரம் இல்லாமல், மாணவர்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், சரியான தொழில் முடிவுகளை எடுப்பதற்கு வழிகாட்டவும், உலகளாவிய கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளில் நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கவும் உதவும் ஒரு தளமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close