தேயிலை வழங்கலுக்கான ZeroCarbon®சான்றிதழைப் பெற்ற முதலாவது நிறுவனமாக தடம் பதித்துள்ள Asia Siyaka Logistics Centre
இலங்கையின் முதன்மையான தேயிலை ஏல வழங்கல் சேவை வழங்குநரான Asia Siyaka Warehousing தனியார் நிறுவனம் உலகளவில் தனித்துவமானதொரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் ZeroCarbon® சான்றிதழை பெற்ற முதலாவது தேயிலை வழங்கல் நிறுவனமாக தடம் பதித்துள்ளது. அதன் மூலம் நிலைபேறானதன்மை, தொழில்பாட்டு உயர்தரம் மற்றும் பொறுப்புடன் கூடிய வழங்கல் முகாமைத்துவத்துக்காக அந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு மேலும் உறுதிப்படுத்துப்பட்டுள்ளது. Sustainable Future Group (SFG) அமைப்பு பச்சை வீட்டு வாயு வெளியேற்றலை விஞ்ஞானபூர்வமாகவும் பரந்துபட்டதாகவும் கணக்கிடல், வெளியேறும் வாயுவை குறைக்கும் பொருட்டு வினைத்திறன் மிக்க மூலோபாயங்களை பின்பற்றுதல் மற்றும் கார்பன் எரிப்பு தொடர்பான சர்வதேச தர நிமயங்களுக்குட்பட்டு வாயு உமிழ்வை துறத்தல் ஆகிய துறைகளில் ஆகச் சிறந்த செயலாற்றுகையை கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ZeroCarbon® சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
Asia Siyaka நிறுவனத்தின் சிறப்பு களஞ்சியம் LEED (வலுசக்தி மற்றும் சுற்றாடல் ஆக்கத்திறன் தலைமைத்துவ) சான்றிதழையும் பெற்றுள்ளது. LEED மற்றும் ZeroCarbon® ஆகிய இரண்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ள ஒரே தேயிலை வழங்கல் நிறுவனமாக இந் நிறுவனம் திகழ்கின்றது. தரம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச நல்ல நடைமுறைகள் ஆகியவற்றை மேலாக மதிக்கும் இந்நிறுவனம் உணவுப் பாதுகாப்புக்கான ISO 22000 சான்றிதழையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. சான்றிதழ் செயல்முறையின் கீழ் Asia Siyaka நிறுவனத்தின் வலுசக்தி பயன்பாடு, வள வினைத்திறன் மற்றும் வெளியேற்றல் முகாமைத்துவம் உள்ளிட்ட ஒட்டுமொத்த செயற்பாடு துல்லியமாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. இந்நிறுவனம் கார்பன் வெளியேற்றலை முழுமையாக இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் நிலையான சூழல் சார்ந்த திட்டங்கள் பலவற்றை செயற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உற்பத்தியாளர்கள், தரகர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வழங்கல் சார்ந்த வாயு வெளியேற்றலை குறைத்துக்கொண்டு சுற்றாடல், சமூக மற்றும் நிர்வாக செயலாற்றுகையை மேம்படுத்துவதற்கு ஊக்கம் பெறுவார்கள். Asia Siyaka நிறுவனத்தின் ZeroCarbon® சான்றிதழை பெற்ற தொழிற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் செயற்பாட்டில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தும் சர்வதேச கொள்வனவாளர்களுக்கும் அது வசதியாக இருக்கும். கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமான Asia Siyaka Commodities PLC பூரண உரித்தைக் கொண்டுள்ள இணை நிறுவனமான Asia Siyaka Warehousing Pvt Ltd கொழும்பு துறைமுகத்துக்கு சமீபமாக வத்தளை முத்துராஜவெல பகுதியில் அமைந்துள்ளது. அது எந்நேரத்திலும் 11 மில்லியன் கிலோகிராம் தேயிலையை களஞ்சியப்படுத்த வல்ல 29,000 ராக்கைகளை கொண்டுள்ளதோடு 06 ஏக்கர் பரப்பளவு காணியில் 240,000 சதுர அடி விசாலமானது.

