ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast விருதை வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த Stefan de Alwis-இன் The 3i Show
கொழும்பு, புதன்கிழமை 07 ஜனவரி 2026: ஸ்டீபன் டி அல்விஸ் வழங்கும் தி 3ஐ ஷோ (The 3i Show), மதிப்புமிக்க ஏஷியா விருதுகள் நிகழ்வில் 2025-2026 ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast நிகழ்ச்சி விருதை வென்றுள்ளது. இதன் மூலம், ஆசியாவின் டிஜிட்டல் ஊடகம் மற்றும் சிந்தனைத் தலைமைத்துவ துறையில் இலங்கையின் வளர்ந்துவரும் செல்வாக்கு பிராந்திய அரங்கில் சிறப்பிடம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் Podcast-ஐ ஒரு வளர்ந்துவரும் பிராந்திய மேடையாக மட்டுமல்லாமல், தேசிய பெருமையின் அடையாளமாகவும் நிலைநிறுத்துகிறது. மேலும், ஆசியாவின் மாறிவரும் தலைமைத்துவ மற்றும் ஊடக சூழலில் இலங்கையின் நிலைப்பாட்டை பலப்படுத்துகிறது.
ஆசியாவின் முதன்மை வர்த்தக நாமம் மற்றும் தலைமைத்துவ விருதுகள் தளமாக பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஏஷியா விருதுகள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இவ்விருது, வேர்ல்ட் ரிசர்ச் காங்கிரஸுடன் இணைந்து செயல்படுகிறது. Times of London இதன் ஆன்லைன் ஊடக பங்களாராக உள்ளது. ஆசியா முழுவதும் ஊடகம், தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் சிறப்பாக செயல்படுவோரை இது கௌரவிக்கிறது. இலங்கை தலைமையிலான அறிவுசார் தளங்களின் உலகளாவிய தாக்கம் வளர்ந்து வருவதையும், பிராந்திய உரையாடலுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதையும் இவ்விருது பிரதிபலிக்கிறது.
இதுதொடர்பில் The 3i Show-வின் நிறுவனரும், தொகுப்பாளருமான ஸ்டீபன் டி அல்விஸ் கூறுகையில், “ஆசியாவின் சிறந்த வளர்ந்துவரும் Podcast நிகழ்ச்சிக்கான விருதை வெல்வது The 3i Show இற்கு மட்டுமல்லாமல், ஆசியாவின் தலைமைத்துவம், வர்த்தக நாமம் மற்றும் டிஜிட்டல் ஊடக துறையில் இலங்கையின் வளர்ந்துவரும் பிரதிநிதித்துவத்திற்கும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த தளம் உலகளவில் தனது வீச்சை தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், உள்ளூர் மற்றும் உலகளாவிய குரல்களை முன்னிலைப்படுத்துவதிலும், எல்லைகளைக் கடந்த உரையாடல்களை ஊக்குவிப்பதிலும், ஆசியாவின் சிந்தனைத் தலைமைத்துவ எதிர்காலத்திற்கு இலங்கையை பங்களிப்பாளராக நிலைநிறுத்துவதிலும் எங்கள் குழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.” என்றார்.
The 3i Show அதன் அடிப்படையில், ஆர்வத்தை தூண்டுவதிலும், தைரியத்தை வளர்ப்பதிலும், சிந்தனை முறைகளுக்கு சவால் விடுவதிலும் கவனம் செலுத்துகிறது. கற்றுக்கொள்ளவும், வளரவும், செயல்படவும் தயாராக உள்ளவர்களை சாத்தியமற்றதை சாதிக்கவும், அவர்களின் வாழ்க்கையையும் சமூகத்தையும் நேர்மறையாக மாற்றவும் இது ஊக்குவிக்கிறது. உண்மையான கதைகள், பிராந்திய வெற்றிப் பயணங்கள் மற்றும் எழுச்சி பெறும் குரல்களை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இந்த Podcast உறுதியான பார்வையாளர் தளத்தை உருவாக்கியுள்ளது. இது பல்வேறு துறைகளில் பொருள்மிக்க உரையாடலுக்கான தூண்டுகோலாக அமைந்துள்ளது.
ஸ்டீபன் டி அல்விஸ் செல்வாக்கு மிக்க இலங்கை ஊடக ஆளுமை, மூலோபாய வணிகத் தலைவர் மற்றும் பரோபகாரியாவார். தொழில்முனைவு, நிதி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஊடகம் ஆகிய பன்முக துறைகளில் விரிவான அனுபவம் கொண்டவர். இங்கிலாந்தில் தொழில்முனைவுத் துறையில் BA (Hons) பட்டமும், Bedfordshire பல்கலைக்கழகத்தில் நிதியில் MBA பட்டமும் பெற்றுள்ளார். இலங்கையின் முன்னணி டிஜிட்டல் மாற்ற நிறுவனமான டிஜிட்டல் 365 ஹோல்டிங்ஸ் (Pvt.) லிமிடெட் மற்றும் பன்முக வணிக நிறுவனமான ஹேண்ட்ஸ் இன்டர்நேஷனல் குழுமம் ஆகியவற்றில் தலைமைப் பதவிகளை வகித்துள்ளார். சர்வதேச நிறுவனங்கள் மற்றும் Fortune 500 நிறுவனங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கியுள்ளதோடு, முதலீடு மற்றும் தனியார் ஈக்விட்டி துறைகளில் ஆலோசகராக செயல்பட்டுள்ளார். அத்துடன், மணிபால் குழுமம் மற்றும் Far East Hospitality உள்ளிட்ட சர்வதேச அங்கீகாரம் பெற்ற வர்த்தக நாமங்களுடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார்.
தனது கார்ப்பரேட் நிபுணத்துவத்துடன், ஸ்டீபன் இலங்கையின் தேசிய தொலைக்காட்சி வலையமைப்பான இலங்கை ரூபவாஹினியில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறையில் முன்னணி குரலாக பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அவர், Podcast வடிவத்திற்கு நம்பகத்தன்மை, தெளிவு மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் திறனை கொண்டு வருகிறார். கல்வியின் முக்கியத்துவத்தில் உறுதியான நம்பிக்கை கொண்ட ஸ்டீபன், De Alwis Foundation மூலம் பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொள்கிறார். குடும்பத்தினரால் நிறுவப்பட்ட பாலர் பாடசாலை மூலம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதும், தகுதியான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதும் அவரது பரோபகார நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த சர்வதேச அங்கீகாரத்துடன், The 3i Show ஆசியாவின் மிக வேகமாக வளர்ந்துவரும் தளங்களில் ஒன்றாக தனது இடத்தை உறுதிசெய்துள்ளது. அதேபோல, ஆசியாவின் அடுத்த தலைமுறை ஊடகம் மற்றும் தலைமைத்துவத்தில் கவனிக்க வேண்டிய உலகளாவிய குரலாக ஸ்டீபன் டி அல்விஸ் உயர்ந்துள்ளார்.
The 3i Show-வை பின்வரும் தளங்களில் பார்வையிடலாம்:
YouTube – https://youtube.com/@the3ishow
Instagram – https://www.instagram.com/the3i.show/
Linkedin – https://www.linkedin.com/showcase/the3ishow/
Facebook – https://www.facebook.com/The3ishow
Twitter – https://x.com/stefandealwis?s=21
TikTok – https://www.tiktok.com/@the3i.show?_r=1&_t=ZS-9285tfUZaVR

