November 19, 2025
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட DENZA புதியமின்சார வாகனங்கள் தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை சந்தைக்கு அறிமுகம்
செய்தி

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட DENZA புதியமின்சார வாகனங்கள் தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை சந்தைக்கு அறிமுகம்

Nov 18, 2025

BYD குழுமத்தின் சமீபத்திய வாகன பிராண்டான DENZA, அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் உத்தியாண்மை கூட்டு-பங்குதாரர் மூலமாக கொழும்பு, Waters’ Edge-ல் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த வாகனங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய டிசைனில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன மின்சார வாகனங்கள், மிகுந்த தானியங்கி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து, இலங்கை போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், இவை நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை வழங்கும்.

BYD நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் பிராந்திய வாகன விற்பனைத் துறையின் பிரதி பொது முகாமையாளர், திரு. Ketsu Zhang, இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், “உலகின் மிகவும் நவீனமான மின்சார வாகன பிராண்டான DENZA, கவர்ச்சிகரமான ஐரோப்பிய வடிவமைப்பு மற்றும் புத்தாக்கமான தொழில்நுட்பத்தின் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வசதியான, ஆடம்பரமான மற்றும் நிலையான பயண அனுபவத்தை வழங்கும் சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. JKCG Auto நிறுவனத்துடன் இணைந்து, தெற்காசியாவின் முதல் சந்தையாக இலங்கையில் நிலையான போக்குவரத்துத் தீர்வுகளை வழங்க நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்,” என தெரிவித்தார்.

இந்த உத்தியோகபூர்வ வெளியீட்டு நிகழ்வில், ஊடக நிறுவனங்கள் மற்றும் வணிகம் மற்றும் மோட்டார் வாகனத் துறையின் முன்னணி நபர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது DENZA பிராண்டின் DENZA B8, DENZA B5 மற்றும் DENZA D9 மொடல்கள் வெளியிடப்பட்டன. இந்த மொடல்களில் மல்டிபர்பஸ் வாகனங்கள் (MPVs) மற்றும் உயர் திறன் கொண்ட புதிய மின்சார வாகனங்கள் (PHEVs) ஆகியவை அடங்கும், இவை ஆடம்பரம் மற்றும் உயர் திறனைத் தேடும் நுகர்வோருக்கு முக்கியமானதாக இருக்கும்.

JKCG Auto நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. சரித் பண்டிதரத்ன கருத்து தெரிவிக்கையில், “தரமும் நம்பகமும் உறுதியாகக் காக்கப்படும் வகையில், புதிய மின்சார வாகன வாடிக்கையாளர்களுக்கு உயர்தர வாகனங்களை வழங்க DENZA முயற்சிக்கிறது. இந்த கூட்டு சேர்வு மூலம், இலங்கை சந்தைக்கு சிறந்த தயாரிப்புகளை வழங்க முடியும் என்பதோடு, விற்பனைக்கு பிந்தைய சேவைகளில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என கூறினார்.

2010 ஆம் ஆண்டில் BYD மற்றும் Mercedes-Benz ஆகியவற்றுக்கு இடையேயான மூலோபாய கூட்டு சேர்வின் விளைவாக, DENZA பிராண்ட் உயர் தொழில்நுட்பம் மற்றும் ஐரோப்பிய நுட்பம் கொண்ட சிறந்த தயாரிப்புகளை போக்குவரத்துத் துறைக்கு வழங்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2014 இல் அதன் முதல் வாகனத்தை வெளியிட்ட DENZA, அதன் பின்னர் கவர்ச்சிகரமான மொடல்கள் மூலம் ஐரோப்பா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பல சர்வதேச சந்தைகளைக் கைப்பற்றியது. தெற்காசிய சந்தையில் தனது வெற்றிப் பயணத்தை இலங்கை சந்தையில் DENZA இந்த வெளியீட்டு நிகழ்வு மூலம் தொடங்கியது.

DENZAவின் இந்த தனித்துவமான அறிமுகத்தில் BYDஇன் e-Platform 3.0 அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட D9 முழு-மின்சார MPV (மல்டி-பர்பஸ் வாகனம்), B5 மற்றும் B8 பிளக்-இன் ஹைப்ரிட் SUV வாகனங்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட 3 வாகன மொடல்கள் அடங்கும்.

DENZA வாகனங்கள் 17.3 அங்குல தொடுதிரை மற்றும் 5G இணைப்புடன் கூடிய Intelligent Cockpit தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன, இது 7 பயணிகளுக்கு வசதியான பயண அனுபவத்தை வழங்குகிறது. இவை DiSus-C டாம்பிங் கண்ட்ரோல் மற்றும் உயர்-சார்ஜ் திறன் கொண்ட 800V high-voltage system ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகின்றன. BYDஇன் பற்றரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த அமைப்பு, வெப்பநிலை நிர்வகிப்பின் மூலம் சிறந்த பாதுகாப்பையும், நீண்ட தூர பயண பரவலையும் வழங்குகிறது.

B5 மற்றும் B8 வாகன மொடல்கள் DM-O (Dual Mode Offroad) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன, மேலும் இரட்டை மின்சார மோட்டார்கள் மற்றும் Blade Battery cells கொண்ட டேர்போ சார்ஜ் இரட்டை plug-in hybrid இன்ஜினால் இயக்கப்படுகின்றன. இந்த மொடல்கள் முழுமையான மின்சார ஓட்ட முறைமை (EV mode), DiSus-P ஹைட்ராலிக் தடுப்பு சீரமைப்பு, மின்சார லாக் வேறுபாடு மற்றும் விரைவான சார்ஜிங் திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. 15.6 இன்ச் டிஸ்ப்ளே திரை மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் உதவி முறைமைகளுடன் கூடிய இந்த மொடல்கள், வாடிக்கையாளர்களுக்கு ஆடம்பரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றைத் தொடர்ந்து வழங்குகின்றன.

DENZAவின் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட பகிர்வாளராக செயல்படும் JKCG Auto, தனது மோட்டார் வாகன நிபுணத்துவத்தையும் சிறந்த வாடிக்கையாளர் சேவை திறனையும் இந்த கூட்டணியுடன் இணைத்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். இந்த பிராண்டிற்காக ஒரு விரிவான 3S வசதியை நிறுவ நிறுவனம் திட்டமிட்டுள்ளது, இது ஒரு பொறுப்பான சேவை அனுபவம், உண்மையான உதிரிபாகங்கள் மற்றும் நீண்டகால ஆதரவை வழங்கும். இதனால், JKCG Autoவின் உயர்தர தயாரிப்பு, JKCG Autoவின் சந்தை இருப்பு மற்றும் இலங்கை நுகர்வோர் தேவைகள் அனைத்தும் இணைக்கப்பட்ட ஒரு தனித்துவமான அறிமுகம் என்றும் DENZA வெளியீட்டை விவரிக்க முடியும்.

15 ஆண்டுகளாக மின்சார மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பங்களில் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் DENZA, இலங்கை சந்தைக்கு அதன் சர்வதேச நற்பெயரை வெற்றிகரமாக கொண்டுவந்துள்ளது, இது ஆடம்பர புதிய மின்சார வாகனத் துறையில் புதிய பரிமாணங்களைத் திறந்துள்ளது. இந்த நவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இலங்கை நுகர்வோருக்கு ஒப்பற்ற அனுபவத்தை வழங்குவது உறுதி.

இந்த வெளியீட்டிற்குப் பிறகு, DENZAவின் அதிகாரப்பூர்வ காட்சிக்கூடம் நவம்பர் 13, 2025 அன்று கொழும்பு, இலங்கையில் உள்ள City of Dreams, Sri Lanka, The Shoppes என்ற இடத்தில் திறக்கப்படும். அங்கு நுகர்வோர்கள் இந்த சிறந்த பிராண்டின் கவர்ச்சிகரமான வாகனங்களை நேரில் அனுபவிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close