ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் 2026 ஆம்ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் JAAF நடைமுறைப்படுத்தல் மற்றும் கொள்கை நிலைத்தன்மையை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தல்
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றமானது (JAAF), ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி, முதலீட்டு வசதி மற்றும் தொடர்ச்சியான பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கத்தின் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வரவேற்றுள்ளது. இந்தத் துறை அமைப்பு, இலங்கையின் வெளிநாட்டுத் துறையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் தெளிவான திசையைப் பாராட்டியுள்ளது. அத்துடன், இந்த உத்வேகத்தைத் தக்கவைக்க சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் மிகப்பெரிய தொழில் துறை ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் ஆடைத் துறையானது, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வர்த்தக வசதி மீது புதிதாகக் கவனம் செலுத்துவது, அத்துடன் மேம்படுத்தப்பட்ட மூலதனக் கொடுப்பனவுகள் ஆகியவற்றை போட்டித்தன்மையை மேம்படுத்தி மற்றும் மிகவும் தேவையான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கக்கூடிய சாதகமான நடவடிக்கைகளாகக் கருதுகிறது.
SVAT நீக்கப்பட்ட சகாப்தத்திற்குள் நாம் நுழையும்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சீர்திருத்தம், RAMIS 3.0 அறிமுகம் மற்றும் E-invoicingஐ அறிமுகப்படுத்துதல் ஆகியவை தொழில்துறையின் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இருப்பினும், இந்த உறுதிமொழிகளை உறுதியான விளைவுகளாக மொழிபெயர்ப்பதில் கொள்கை செயல்படுத்தலும் தொடர்ச்சியும் மிக முக்கியமானதாக இருக்கும் என்று JAAF மீண்டும் வலியுறுத்தியது.
எனினும், இந்தக் கொடுப்பனவுகளை உறுதியான விளைவுகளாக மாற்றுவதற்கு கொள்கை நடைமுறைப்படுத்தலும் மற்றும் தொடர்ச்சியும் மிக முக்கியமானது என்று JAAF மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பொதுச் செயலாளர் யொஹான் லோரன்ஸ் கருத்து தெரிவிக்கையில், “2026 வரவுசெலவுத் திட்டம் ஒரு வலுவான ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஊக்கமளிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது, ஆனால் கொள்கை அமுலாக்கத்தில் உள்ள நிலைத்தன்மையும் தெளிவும்தான் இறுதியில் நம்பிக்கையைத் தூண்டும். ஆடைத் துறையானது மிகவும் போட்டி நிறைந்த உலகளாவிய சூழலில் தொடர்ந்து இயங்குகிறது, அங்கு சிறிய தடங்கல்கள் கூட ஆயிரக்கணக்கான வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதிக்கலாம். சீர்திருத்தங்கள் குறைந்தபட்ச தேய்மானத்துடன் அமுல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, தனியார் துறையுடன் வெளிப்படையான உரையாடலை அதிகாரிகள் பேணுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்,” என தெரிவித்தார்.
முக்கியமான சலுகைத் திட்டங்களின் கீழ் சந்தை அணுகல் தேவைகள் மற்றும் நிலைத்தன்மை இலக்குகளுடன் கொள்கையை சீரமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் JAAF மேலும் குறிப்பிட்டுள்ளது. நிலையான எரிசக்திச் செலவுகளை உறுதி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை எளிதாக்குதல், மற்றும் ஏற்றி இறக்கல்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை தொடர்ச்சியான ஏற்றுமதி வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணிகளாக அடையாளம் காணப்பட்டன.
இலங்கையின் மீட்சியை நோக்கிச் செல்லும் தொழில்கள், SMEக்கள், மற்றும் பணியாளர்கள் ஆகியோருக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தேசிய ஏற்றுமதி உத்தியை முன்னேற்றுவதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைக்கத் தாங்கள் தயாராக இருப்பதாக அந்தச் சங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பபிடத்தக்கது.

